பருத்தித்துறை பிரதேச செயலக விளையாட்டுவிழாவின் (2026) ஓர் அங்கமான உதைபந்தாட்ட தொடரானது நேற்று முன்தினம் திக்கம் இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது.
வல்வை அணிக்கு முதலாவது போட்டியில் அண்ணா விளையாட்டுக்கழகம் வருகை தராமையினால் வெற்றி வழங்கப்பட்டது.
தொடர்ந்து இடம்பெற்ற காலிலிறுதியாட்டத்தில் பருத்தித்துறையு னைற்றைற் அணியினை 4 : 2 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது.
தொடர்ந்து இடம்பெற்ற அரையிறுதியாட்டத்தில் சென்தோமஸ் அணியினை 3 : 1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றது.
அதனைத்தொடர்ந்து மாலை இடம்பெற்ற இறுதியாட்டத்தில் ஆதிசக்தி அணியினை எதிர்கொண்ட #வல்வை அணியானது 3 : 0 என்ற கோல்கணக்கில் தோல்வியினை தழுவி இரண்டாமிடத்தினை பெற்றுக்கொண்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.