மரண அறிவித்தல் - திருமதி சிவகாமசுந்தரி திருநாவுக்கரசு
பிரசுரிக்கபட்ட திகதி: 25/10/2025 (சனிக்கிழமை)
மரண அறிவித்தல் - திருமதி சிவகாமசுந்தரி திருநாவுக்கரசு
தோற்றம் 13. 11. 1944 மறைவு 25. 10.2025
தெணியம்பை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் சின்னமலை தொண்டைமானாற்றை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகாமசுந்தரி திருநாவுக்கரசு அவர்கள் இன்று (25.10.2025) அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் கந்தசாமி திருநாவுக்கரசு (நில அளவையாளர்) அவர்களின் அன்பு மனைவியும், காலம் சென்ற நடனசிகாமணி, காலம் சென்ற பார்வதிப் பிள்ளையின் மகளும், காலஞ்சென்ற கந்தசாமி, குண்டுமணி தங்கம் ஆகியோரின் மருமகளும்,
சேந்தன், ஸ்கந்தன், மேகலா ஆகியோரின் தாயாரும்,
ஜெயந்திமதி, ரேவதி, ஜெயவிந்தன் ஆகியோரின் மாமியாரும்,
காலம் சென்ற யோகாசிகாமணி, காலம் சென்ற சண்முகசிகாமணி, நகுலசிகாமணி, வனிதாமணி, காலம் சென்ற ஜெயவீரசிகாமணி, காலம் சென்ற ரூபமணி ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்ற காந்திமதி, காலஞ்சென்ற கிருஷ்ணசர்மா, காலஞ்சென்ற சம்பந்த மூர்த்தி மற்றும் ரதிசேனா (பொன்மணி) ஆகியோரின் மைத்துனியும்,
மாதுமை, தெய்வீகன், காவியா,வித்தகன், வக் ஷினி, அஸ்வினி, அக்கிஷன் ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை (26.10.2025) பி.ப 2 மணியளவில் சின்னமலை தொண்டைமானாற்றில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று தொடர்ந்து பி.ப 4 மணிக்கு காட்டுப்புலம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை ஏற்றுக் கொள்ளுமாறு உற்றார் உறவினர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல் - குடும்பத்தினர்
தொடர்புகட்கு
ஜெயவிந்தன் - 00 94 77 935 22 60
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Balasundram Kanapathippillai (Danmark)
Posted Date: October 26, 2025 at 05:38
எங்களை எப்போதும் அன்புடன் வரவேற்று,
அளவிலா பாசத்தால் அரவணைத்த அன்பான உறவு,
உங்கள் இழப்பை எவராலும் ஈடு செய்ய முடியாது.
உங்களை இழந்து வாடும் அங்கிள், பிள்ளைகள்,
மருமக்கள் மற்றும் பேரப்பிள்ளைகள் அனைவருக்கும்
எமது இதயபூர்வமான ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.