வல்வையில் கடந்த 3 வருடங்களாக விடியல் கல்வி அறக்கட்டளை இயங்கிவருகின்றது. மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் வகையில், வல்வை தவிர்ந்து, பிற பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் மற்றும் மாணவர்களுக்கும் விடியல் கல்வி அறக்கட்டளை மூலம் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது.
இதன் ஸ்தாபகர் வல்வை கொத்தியாலை பிறப்பிடமாக கொண்டவரும் தற்போது தூபி வீதியில் வசிப்பவருமான திரு ஐயாக்கண்டு தங்கவேல் ஆவார்.
1976 ஆம் ஆண்டில் கப்பலில் பணி புரிந்து பின்னர் லண்டன் சென்று, பின்னர் கடந்த 2020 ஆம் ஆண்டு தாயகம் திரும்பினார்.
கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து 15-05-2023 ஆம் ஆண்டில் விடியல் கல்வி அறக்கட்டளையை, திரு.தங்கவேல் தனது மனைவி மற்றும் 3 பிள்ளைகளுடன் சேர்ந்து ஆரம்பித்தார்.
அத்துடன் மட்டுமின்றி விடியல் கல்வி அறக்கட்டளையை இலங்கையில் சட்ட ரீதியாக பதிவு செய்து, இலங்கை மற்றும் பிரித்தானியாவில் வங்கி கணக்குகளை ஆரம்பித்து, பரிவர்த்தனைகளை உத்தியோகபூர்வமாக மேற்கொண்டு வருகின்றார்.
கற்றல் உபகரணங்கள் தவிர்ந்து, வறுமைக்கோட்டின் கீழ் உள்ள சில மாணவர்களின் பிரத்தியேக வகுப்புகளுக்கான கட்டணங்களும் விடியல் கல்வி அறக்கட்டளையால் வழங்கப்பட்டு வருகின்றது.
விடியல் கல்வி அறக்கட்டளையின் காரியாலயம் வல்வை வேம்படியில், பருத்தித்துறை பிரதான வீதியில் அமைந்துள்ளது.
இங்கு இதுவரை இவர்களால் மேற்கொள்ளப்படும் உதவிகள் சம்பந்தமான முழு விடயங்களியும் பார்வையிடமுடியும்.
விடியல் கல்வி அறக்கட்டளையின் சேவையை அறிந்த சில ஆர்வலர்கள், சில உதவிகளை செய்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விடியல் கல்வி அறக்கட்டளை தொடர்பாக மேலும் விடயங்கள் தேவைப்படின் அதன் ஸ்தாபகர் திரு தங்கவேல் அவர்களை விடியல் கல்வி அறக்கட்டளையின் அலுவலக இலக்கத்திற்கு 0094 769292877 தொடர்பு கொள்ள முடியும்.
கீழே படங்களில் விடியல் கல்வி அறக்கட்டளையால் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள உதவிகளின் சிலவற்றின் தொகுப்பை காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.