வல்வையைச் சேர்ந்த ஆனந்தனுக்கு "Best Marine Engineering Cadet Award"
பிரசுரிக்கபட்ட திகதி: 11/11/2026 (புதன்கிழமை)
வல்வை நெடியாகாட்டைச் சேர்ந்த செல்வன் வைத்தீஸ்வரன் ஆனந்தன் Best Marine Engineering Cadet என்னும் விருதை பெற்றுள்ளார். கடல்சார் பயிற்சி நெறிகளை வழங்கும் CINEC Campus இனது 2026 ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்புவிழாவில், கடல்சார் பொறியியல் தர இளநிலை அதிகாரி (Marine Engineering Officer Cadet) கற்கைநெறியில் சிறந்த மாணவருக்கான விருது (Best Marine Engineering Cadet) வழங்கப்பட்டுள்ளது.
குறித்த விருது வழங்கும் வைபவம் நேற்றய தினம் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
செல்வன் வைத்தீஸ்வரன் ஆனந்தன் பெற்ற விருது கடல்சார் கற்கை நெறியில் (Cadet) விருப்ப்முள்ள தமிழ் மாணவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமைவது குறிபிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Thurailingam (UK)
Posted Date: November 11, 2026 at 22:21
ஆனந்தனுக்கு நல்லாசிகள்.
வாழ்த்துக்கள்.
ஆனந்தனைப் போல இன்னும் பலர் இத்துறையில் முன்னுக்கு வரவேண்டும் என்பது வல்வை வாழ் மக்களோடு புலம்பெயர்ந்து வாழும் தமிழர் அனைவரதும் அவாவாகும்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.