வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் - சீரற்ற காலநிலைக்கு வாய்ப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 12/11/2026 (வியாழக்கிழமை)
வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் நிலவும் வளிமண்டலத் தளம்பல், எதிர்வரும் நாளை 13 ஆம் திகதியளவில் தாழமுக்கம் (Low Pressure) ஆக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து இது வலுப்பெற்று நவம்பர் 15 ஆம் திகதியளவில் தீவிர தாழமுக்கமாக (Depression) மாறக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
குறித்த இந்த வளிமண்டலத் தொகுதியின் நகர்வுப் பாதையைத் துல்லியமாகக் கணிப்பதற்குப் போதிய தரவுகள் தற்போது கிடைக்கப்பெறவில்லை என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்திய வளி மண்டலவியல் திணைக்களமும் நகரும் பாதை பற்றி இதுவரை அறிவிக்கவில்லை.
ஆனாலும் குறித்த தாழமுக்கம் மேலும் வலுவடைந்து ஆழமான காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, இலங்கையின் கிழக்குக் கரையோரத்திற்கு இணையாக வடக்கு நோக்கி நகருமானால், நவம்பர் 15 முதல் 17ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டின் பல பகுதிகளிலும் கடுமையான சீரற்ற காலநிலை ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.