மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (Deep Depression), கடந்த 6 மணி நேரத்தில் மணி நேரத்திற்கு 15 கி.மீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்துள்ளது.
நேற்று (அக்டோபர் 25) இரவு 11:30 மணி அளவில், அதே பிராந்தியத்தில் அகலாங்கு 15.3°N மற்றும் நெட்டாங்கு 89.7°E என்ற புள்ளியில் நிலைகொண்டிருந்த இத்தீவிர தாழமுக்கமானது, ஸ்ரீ விஜயபுரத்தில் (அந்தமான் தீவுகள்) இருந்து வடமேற்கே சுமார் 520 கி.மீ தொலைவிலும், விசாகப்பட்டினத்தில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 730 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
இன்று காலை (அக்டோபர் 26), இது தொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து, மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக (Cyclonic Storm) வலுவடையவுள்ளது.
இதற்கு அர்னாப் Arnab என வங்காள தேசத்தால் பெயரிடப்பட்டுள்ளது. (வாங்காள மொழியில் சமுத்திரம் - Ocean)
நாளை காலை (அக்டோபர் 27), மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் தீவிர புயலாக (Severe Cyclonic Storm) உருவெடுக்கும் அதேவேளை, அக்டோபர் 28 ஆம் தேதி காலை, வடமேற்கு திசையில் நகர்ந்து மிகத் தீவிர புயலாக (Very Severe Cyclonic Storm) உருவெடுத்து, ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதியை அடையவுள்ளது.
இந்த அதி தீவிர புயல், அக்டோபர் 28-ஆம் தேதி முற்பகலில், ஆந்திரப் பிரதேசத்தின் பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே (ஏனாம் பகுதி உட்பட) கரையைக் கடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்போது காற்றின் வேகம் மணிக்கு 115 முதல் 125 கி.மீ வேகத்திலும், இடையிடையே 140 கி.மீ வேகம் வரையிலும் பலத்த சூறாவளியாக வீசக்கூடும் என இந்திய வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.