வல்வெட்டித்துறை சிவன் கோயிலடியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சந்திராபாய் இரத்தினசிங்கம் இன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்ச் சென்ற சிவப்பிரகாசம் நாகபூசணத்தின் மகளும், காலஞ்ச் சென்ற குஞ்சர விநாயகம் பவளக் கண்டு ஆகியோரின் மருமகளும், குஞ்சர விநாயகம் இரத்தினசிங்கத்தின் மனைவியும் ஆவார்.
அன்னார் ஞானமூர்த்தி, சிதம்பரநாதன், பொன்னம்மா, சிவாநந்தன், கமலாபாய், லட்சுமிப்பிள்ளை ஆகியோரின் சகோதரியும்,
கிருபாகரன், பாஸ்கரன், தயாபரன், கஸ்தூரி, சுகன்யா, மதிவதனி ஆகியோரின் அன்பு தாயாரும்,
சாரங்கன், ரிஷிகேசன், ஆதித்யசிவன், சமுத்திரா, ஆராதனா, அதிசயன், கதிரவன் ஆகியோரின் அன்பு பூட்டியும், ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நெற்கொழுவில் உள்ள அவரது மகன் தயாபரன் இல்லத்தில் இன்று மாலை இடம்பெற்று , தகனக் கிரியைகள் மாலை 0530 மணியளவில் ஊரணி இந்து மயானத்தில் இடம்பெறும்.