வல்வெட்டித்துறை மதவடியைப் பிறப்பிடமாகவும் வாழைச்சேனை மற்றும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட வாழைச்சேனை காகித ஆலையின் ஓய்வு பெற்ற பிரதம இரசாயனவியலாளர் திரு. இரத்தினசாமி பாஸ்கரசுந்தரம் அவர்கள் 28.10.2025 செவ்வாய்க்கிழமை கொழும்பில் காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 29/10/2025 (புதன்கிழமை)
மரண அறிவித்தல் - திரு. இரத்தினசாமி பாஸ்கரசுந்தரம்
வல்வெட்டித்துறை மதவடியைப் பிறப்பிடமாகவும் வாழைச்சேனை மற்றும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட வாழைச்சேனை காகித ஆலையின் ஓய்வு பெற்ற பிரதம இரசாயனவியலாளர் திரு. இரத்தினசாமி பாஸ்கரசுந்தரம் அவர்கள் 28.10.2025 செவ்வாய்க்கிழமை கொழும்பில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற இரத்தினசாமி ஆத்தாட்ப்பிள்ளை தம்பதியின் இளைய புத்திரரும் காலஞ்சென்ற முருகுப்பிள்ளை தையல்நாயகி தம்பதியின் மூத்த மருமகனும் ஆவார்.
அன்னார் விமலேந்திராணியின் அன்புக்கணவரும்,
சுகன்யா (சுவிஸ்லாந்து), நிசாஹரன் (கனடா), விமலாஹரன் (கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரவிசங்கர் (சுவிஸ்லாந்து), சசிகலா (கனடா), ரத்னா (கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஸ்வினி (சுவிஸ்லாந்து), அனிக்கா (கனடா), அபினா (கனடா), ரத்னிகா (கொழும்பு), திருநேயன் (கொழும்பு) ஆகியோரின் அன்பு பேரனும்,
அன்னாரின் பூதவுடலானது 30.10.2025 வியாழக்கிழமை 9.00 காலை கல்கிசையில் உள்ள மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மாலை 4.00 மணியளவில் கிரியைகள் நடைபெற்று கல்கிசை தெகிவளை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.