ஆதவன் பக்கம் (78) - Cadet ஆக சேர்வது எப்படி, என்ன தகுதி வேண்டும்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/12/2025 (வெள்ளிக்கிழமை)
Cadet ஆக சேர்வது எப்படி, என்ன தகுதி வேண்டும்
Cadet இல் 3 பிரிவுகள் உண்டு – அவையாவன
Deck Cadet – இறுதியில் கப்டன்
Engine cadet - இறுதியில் பிரதம பொறியிலாளர்
Electrical Cadet – இறுதியில் Electrical Engineer அல்லது Electro Technical Officer
இலங்கையைப் பொறுத்தவரை
பல்கலைக் கழகங்கள்
தனியார் கல்லூரிகள்
மேற் குறித்த கற்கைகைகளை வழங்குகின்றன.
பல்கலைக் கழகங்கள்
மொரட்டுவ பல்கலைக்கழகம் NDT யில், Nautical மற்றும் Engineering என்று இரண்டையும், குறைந்தது 40 வருடங்களுக்கு மேலாக மேற்கொண்டு வருகின்றது.
A/L கணிதப் பிரிவில், E1, E2 கிடைக்காதவர்கள் இதற்கு முயற்சிக்ககூடிய வகையில் முன்னர் இருந்தது. (தற்போது எந்த அடிப்படையில் உள்வாங்கல் இடம்பெறுகின்றது என்று தெரியவில்லை). NDT யை பயன்படுத்துகிற தமிழ் மாணவர்கள் குறைவு.
கடந்த 4 வருடங்களாக ருகுண பல்கலைக் கழகத்தில் Marine Engineering ஆரம்பிக்கப்பட்டுள்ளது. A/L கணிதப் பிரிவில் பொறியியலுக்கு தெரிவாகும் மாணவர்களில், 2 ஆம் வருடத்தில் தெரிவு செய்யப்படுகின்றார்கள். வருடந்தோறும் சுமார் 40 மாணவர்கள். இங்கும் கற்கையை மேற்கொள்ளும் தமிழர்கள் மிகக் குறைவு.
தனியார் கல்லூரிகள்
தனியார் கல்லூரிகளில் பிரதானமானது CINEC, இதன் ஒரு கிளை (மட்டுப்படுத்தப்பட்ட கற்கைகள்) யாழில் உண்டு.
CINEC ஐ விட இதர கல்லூரிகளும் உண்டு.
பல்கலைக் கழகங்களை பொறுத்தவரை, உள்நுழைவதற்கு கல்வித் தகமை ஒன்றே பிரதானம். அதாவது இது அரசின் பாடசாலை கல்வியின் தொடச்சியின் இறுதி நிலை. OL, AL, University.
ஆனாலும் தனியார் கல்லூரிகளில் சேர்வதற்கு பின்வரும் 4 விடயங்கள் அவசியம்
வயது
கல்வித் தகமை
கட்டணம்
ஆங்கிலத்தில் புலமை
வயது – 22 ற்கு கீழ் இருக்க வேண்டும்
கல்வித் தகமை
ஆங்கிலம் – O/L Credit Pass
Maths Stream – 2 Pass, ஏதாவது 2. அல்லது
Biology Stream - Physics + ஏதாவது ஒன்று. அல்லது
Technology Stream – Engineering Technology OR Science Technology
கட்டணம்
இது கல்லூரிக்கு கல்லூரி மாறுபடும்.
SMTI என்னும் கல்லூரியின் Deck Cadet ற்கான கட்டண விவரம்
Phase 1 – 8500 US $. இதில் 1750 US $ ஐ, Phase 2 வில் கப்பலில் உழைக்கும் போது கட்டலாம்.
Phase 2 – கப்பல்
Phase 3 – 7600 US $
SMTI என்னும் கல்லூரியின் Engine Cadet ற்கான கட்டண விவரம் – கையேட்டில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
ஆங்கிலத்தில் புலமை
சிக்கல் இங்கு தான்.
பல்கலைக் கழகங்கள் போலன்றி, இங்கு ஆரம்பித்திலேயே ஓரளவு ஆங்கில அறிவு அவசியம் (C Pass ஐ விட). Cadet ற்குரிய நேர்காணலில் வாய்மொழி மற்றும் Online Test மூலம் மாணவர்களின் ஆங்கில அறிவு பார்க்கப்படுகின்றது.
காரணம் Phase 1 முடிந்தவுடன் மாணவர்களை தேர்வு செய்ய வரும் கப்பல் நிறுவனங்கள், முழுக்க முழுக்க ஆங்கிலம் மூலமே நேர்காணலை செய்கிறார்கள்.
Placement (கப்பல் சான்ஸ்)
கல்லூரிகளில் சேரும் முன்னரே அவர்களிடம் இது பற்றி மிகத் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். Placement செய்து தர முடியாது என்றால், குறித்த கல்லூரிகளில் சேர்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
இதர குறிப்புக்கள்
SMTI கல்லூரியின் கையேடுகளை இங்கு இணைத்துள்ளேன். இதன் நோக்கம் குறித்த கல்லூரிக்கு விளம்பரம் தேடும் நோக்கம் அல்ல. மாறாக தேவையானவகளுக்கு ஒரு தெளிவான விளக்கத்தை கொடுக்கும் நோக்கத்தில் மட்டுமே ஆகும்.
SMTI யின் அதிபர் எனக்கு நெருக்கமானவர். அத்துடன் இக்கல்லூரியின் பிரதான பங்காளருடனும் நேரில் கதைத்திருக்கிறேன். சில தினங்கள் முன்பு நேரில் கதைத்தபோது கூட. அவர் “ஒப்பீட்டளவில் தமிழ் மாணவர்களின் வீதம், இத்துறையில் மிகவும் குறைவு” என்று ஆதங்கப்பட்டார். இது உண்மையானதும் கூட.
கப்பல் தொழில் என்பது முன்னைரை விட மிகவும் சவால்கள் நிறைந்தது. பலரிடம் விசாரித்து இறுதி முடிவை தேவையானோர் எடுக்க வேண்டும்.
மற்றைய துறைகளை விட, இத்துறையில் பாகுபாடு (துவேசம்) ஒப்பீட்டளவில் குறைவு. ஆங்கிலமும், சிங்களமும் ஓரளவு சரளம் என்று முன்னேறுவது மிக மிக இலகு.
அவசரப்பட்டு சேர்ந்து விட்டு, என் போன்றவர்களிடம் ‘கப்பல் சான்ஸ் எடுத்து தருகின்றீர்களா” என்று கேட்பதில் பயனில்லை. ஏன் என்றால் நாங்கள் ஒரு பணியாளர் (Employee) தரத்தில் மட்டுமே உள்ளோம், Employer (கப்பல் நிறுவன உரிமையாளர்) தரத்தில் இல்லை.
(இங்கு சில விதி விலக்குகள் உண்டு, இது பற்றி விவரமாக பின்னர் எழுதுகின்றேன்)
Electrical Cadet கற்கை நெறி - இலங்கையில் இதுவரை எங்கும் ஆரம்பிக்கப்பட்டதாக தெரியவில்லை. ஆனாலும் ETR (Electro Technical Ratings) என்னும் கற்கை நெறி உண்டு.
சம்பளம் -
இடைநிலை அதிகாரியாக (Third Officer அல்லது Fourth Engineer) கற்கையை பூர்த்தி செய்தவுடன், சம்பளம் 3000 US $ இலிருந்து 4000 US $ வரை பெற முடியும்.
காலம்
Captain ஆக வர 10 – 14 வருடங்கள் எடுக்கும்
Chief Engineer ஆக வர 8 – 12 வருடங்கள் எடுக்கும்
சர்வதேச கடலியல் தொழிற்துறை சார் பல்கலைக் கழகங்கள், தனியார் கல்லூரிகள் தென் பகுதியிலேயே அமைந்துள்ளதாலும், எம்மவர்களின் பிரதான நோக்கு வெளிநாடு என்று இருப்பதாலும் சர்வதேச கடலியல் தொழிற்துறை சம்பந்தமான விழிப்புணர்வு, வடக்கில் பொதுவாக இல்லை. விதிவிலக்காக வல்வெட்டித்துறை போன்ற ஒரு சில இடங்கள் மட்டுமே.
துரதிஸ்ட்டவசமாக வல்வையில் கூட, இன்றும் சர்வதேச கடலியல் தொழிற்துறையில் மிகப் பெரும்பாலானோர் அடிநிலையில் செல்ல முனைபவர்களே, இவர்களில் சிலர் Cadet ஆக செல்ல கல்வித் தகமை மற்றும் பொருளாதார வசதி பெற்றிருந்தும் கூட.
பலர் அடிக்கடி என்னிடம் வினவுவதால், கேட்பவர்கள் மட்டுமன்றி, மற்றவர்களுக்கும் பயன்படட்டும் என்பதற்காக இதனை ஒரு சிறு குறிப்பாக எழுதியுள்ளேன்.
(((கற்கை நெறிகளில் சேர்வது))) சம்பந்தமாக ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் – விரும்பினால் என்னை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். 0777 64 99 55)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.