இராணுவ மயமாக்கலுக்கு எதிராக போராட தமிழரசு கட்சி அழைப்பு விடுத்ததற்கு - சுமந்திரன் எதிர்ப்பாளர்கள், 'சுமந்திரனுக்கு STF பாதுகாப்பு கொடுத்ததை காட்டி' எதிர் மறையாக கருத்துக்கள் பதிவிட - மறுபுறம் சுமந்திரன் விசுவாசிகள் 'Army வேறு STF வேறு - அதாவது 'பச்சைக்கலர் போட்டவர்கள் எல்லாம் ஆர்மி காரர் இல்லை' என்று விளக்கம் கொடுக்கிறார்கள். அதாவது 'STF காரர் ஆமிக்காரருக்குள் வராது' என்று.
இந்த அரசியல் சுவாரசியம் ஒரு புறம் இருக்க....
உண்மைச் சம்பவம்
2009 ஆம் ஆண்டு போர் உச்சக் கட்டம்.. நான் அப்போது கப்பலில். குடும்பம் கொழும்பில். மிகுந்த கெடுபிடிகள். 4 ஆம் இலக்க IC என்றால் நல்ல கவனிப்பு, அதிலும் வல்வெட்டித்துறை என்றால் மேலும் கவனிப்பு.
வெள்ளவத்தையில் வெளியே தனியாக சென்ற எனது மனைவியின் தங்கையை வீதி சோதனையில் மறித்த STF காரர், IC பார்த்த விசாரித்து, கனக்க கேட்டுவிட்டு விட்டுவிட்டார்கள்.
அடுத்த நாள் ஒரு இயக்க உறுப்பினரை அமுக்க வருவது போல், எனது Flat Round up. வந்தவர்கள் முழுதும் STF காரர் தான். இந்த அதிரடி படக்காட்சியை பார்த்த Flat காரர், அப்ப எங்களுடன் கதைக்கவே பயப்பட்டார்கள்.
நான் அடுத்த நாள் போன் எடுத்தபோது மகள் (அப்ப சின்ன பிள்ளை) 'டாடி எங்க வீட்டு க்கு ஆர்மி காரர் வந்தவை' என்றாள்.
குழப்பம் இப்பத்தான் - எங்கள் வீட்டுக்கு அப்ப வந்தது ஆர்மிகாரரோ அல்லது STF காரரோ என்று?
இன்னுமொரு விடயம், எல்லோரும் மறந்து இருப்பார்கள் - மே 19 வன்னியில் துப்பாக்கிகள் மெளனிக்க, இறுதி சிறு மோதல் ஒன்று அம்பாறை கரடிப் போக்கு சந்தியில் மே 20 இல் இடம்பெற்றது. இது அங்கிருந்த இயக்கத்துக்கும் STF க்கும் இடையில் தான் இடம்பெற்றது என ஞாபகம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.