1983 ஆம் ஆண்டின் 'கறுப்பு ஜூலை 83' (Black July 1983) வன்முறைகள் மற்றும் அதன் தாக்கம் குறித்து முழுமையான விசாரணை நடத்துவதற்கு, நாடாளுமன்ற தெரிவுக்குழு (Parliamentary Select Committee) ஒன்றை நியமிக்கக்கோரி நாடாளுமன்றத்தில் யோசனை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் தனுர திசாநாயக்க இந்த யோசனையைச் சமர்ப்பித்துள்ளதோடு, இதர NPP நாடாளுமன்ற உறுப்பினரான பாக்ய ஸ்ரீ ஹேரத் இதனை வழிமொழிந்துள்ளார்.
இந்த யோசனையின்படி, 1983 ஜூலை மாதத்தின் துயரச் சம்பவங்கள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு, அதன் கண்டுபிடிப்புகள் அடங்கிய அறிக்கையைத் தயாரிப்பது இக்குழுவின் பணியாக அமையும்.
மேலும், தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும், இந்த வன்முறையால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் சமூகங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் தேவையான பரிந்துரைகளை நாடாளுமன்றத்திடம் சமர்ப்பிக்கும் பொறுப்பும் முன்மொழியப்பட்டுள்ள இக்குழுவுக்கு வழங்கப்படும்.
கறுப்பு ஜூலை சம்பவங்களின் வரலாற்றுப் தாக்கத்தை ஆராய்ந்து, தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும், பாதிக்கப்பட்டவர்களின் குறைகளுக்குத் தீர்வு காண்பதற்குமான நடவடிக்கைகளைக் கண்டறிவதையே இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.
(News - Newswire, Photo - Wikipedia)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.