வல்வை சிதம்பரக் கல்லூரியின் பரிசளிப்பு விழாவும் நிறுவுநர் தினமும் இன்றைய தினம் சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு கல்லூரியின் அதிபர் திரு வே.பரமேஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இவ்விழாவுக்கு பிரதம விருந்தினராக இலங்கை வங்கியின் முகாமையாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற திரு சு.குகபிரசாதன் (கல்லூரியின் பழைய மாணவர்) அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
வரவேற்புரையை கல்லூரியின் சிரேஷ்ட ஆசிரியர் திருமதி மலர்விழி அசோகலிங்கம் அவர்கள் நிகழ்த்தினார். ஆசியுரையை வல்வை முத்துமாரியம்மன் தேவஸ்தான பிரதமகுரு சிவஸ்ரீ மு.தயாபரக் குருக்கள் அவர்கள் நிகழ்த்தினார். நிறுவுநர் நினைவுரையை கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரியின் பிரதிஅதிபரும் கல்லூரியின் முன்னாள் ஆசிரியருமாகிய திரு கீ. கியோமர் அவர்கள் நிகழ்த்தினார்.
விழாவில் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினரின் அநுசரணையில் இடம்பெற்ற மேற்படி விழாவில் கடந்த வருடம் கல்வியிலும் இணைபாடவிதான செயற்பாடுகளிலும் திறமையை வெளிப்படுத்திய மாணவர்கள் பாராட்டுப் பரிசில்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். விழாவின் நிறைவாக நன்றியுரையை பிரதிஅதிபர் திரு கு. மனோகரன் அவர்கள் நிகழ்த்தினார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.