வல்வெட்டியைச் சேர்ந்த திரு. முருகேசு சிவராஜா அவர்களுக்கு, ஹரோ தமிழ் சங்கத்தின் (Harrow Tamil Association – HTA) "தமிழ் சமூக வீரர்கள் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் 2026" (Tamil Community Champions & Lifetime Achievement Awards 2026) நிகழ்வில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
45 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் ஆற்றிய சமூகசேவை, கல்விப் பணி, தமிழ் மொழி, பண்பாடு, மரபு பேணும் முயற்சிகளைப் பாராட்டி இந்த உயரிய கௌரவம் அளிக்கப்பட்டது.
கடந்த 2026 நவம்பர் 7 ஆம் திகதி சனிக்கிழமை Harrow Arts Centreல் இவ்விழா நடைபெற்றது. "ஒன்றாக இணைந்து மாற்றத்தை உருவாக்குவோம்" (Together We Make a Difference) என்பது விழாவின் தொனிப்பொருளாக அமைந்தது.
ஹரோ நகரசபையின் தலைவர் Cllr Paul Osborn, Leader of Harrow Council நிகழ்வின் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.
பிரித்தானியாவில் தமது மின்பொறியியல் ஆலோசனை நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தியவாறே, சமூகப் பணிக்கும் எதிர்காலத் தலைமுறையினரின் வளர்ச்சிக்கும் அளப்பரிய நேரத்தையும் உழைப்பையும் அவர் அர்ப்பணித்துள்ளார். அவரது சேவையைப் போற்றி ஏற்கனவே Harrow Heroes Award, Brent Police Award ஆகியவை அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
அவரது மிக முக்கிய சாதனைகளில் ஒன்று, 2001 ஆம் ஆண்டு Hendon Tamil School நிறுவியமையாகும். அவரது தொலைநோக்குப் பார்வையாலும் அயராத முயற்சியாலும் இந்தப் பாடசாலை மூலம் 4,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்விசார் நன்மைகளைப் பெற்றுள்ளனர்.
கல்வியோடு தமிழ் மொழி, மரபுகள், பண்பாடு ஆகியவற்றையும் வளர்த்ததன் மூலம், பல தலைமுறை இளைஞர்கள் தங்கள் வேர்களோடு இணைந்திருக்கவும், பிரித்தானிய சமூகத்தில் தமிழர் என்ற பெருமையுடன் பங்களிக்கவும் அவர் வழிவகுத்துள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.