ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர் நீத்த வீர மறவர்களை நினவுகூறும் விடுதலைப் புலிகளால் ஆரம்பிக்கப்பட்ட மாவீரர் நாள் இன்றைய தினம் தமிழர் தாயகம் எங்கும் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
துயிலும் இல்லங்கள், சந்திகள், வீதிகள் மற்றும் பல பிரத்தியேக இடங்கள் மாவீரர் நாளையொட்டி மஞ்சள் சிவப்பு கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு, எழுச்சிப் பாடல்கள் ஒலிக்கப்பட்டன.
வல்வையில் வழமை போன்று தீருவில் வெளியில் மாவீரர் நாள் நினைவேந்தல் இடம்பெற்றது. நிகழ்வில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
வடமராட்சியின் பிரதான துயிலும் உள்ளங்களில் ஒன்றான எள்ளங்குளம் துயிலும் இல்லத்துக்கு முன்பாக உள்ள மைதானத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல், பொதுச் சுடரினை பொன்னி மற்றும் ஜுட் ஆகியோரின் தாயார் திருமதி செல்லமாணிக்கம் வள்ளிப்பிள்ளை ஏற்றி வைத்தார்.
வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற உணர்வுபூர்வ நினைவேந்தலில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமது அக வணக்கத்தினை செலுத்தியிருந்தனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த சங்கர் என அழைக்கப்படும் சத்தியநாதன் என்பவர் மரணித்த இதே நாளான 1982 கார்த்திகை 27 ஆம் திகதி மாலை 0605 க்கு, குறித்த மாவீரர் நாள் நினைவேந்தல் கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் அனுஷ்டிக்கப்பட்டுவருகின்றது.
கீழே வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலின் சில காட்சிகளைக் காணலாம்.
(Photo curtsy - Social Media)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.