யாழ் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலர் பிரிவுகளில் இளம் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் நோர்வே அரசின் நிதிப் பங்களிப்பில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தினால் உதவித் திட்டங்கள் வழங்கப்படவுள்ளன.
இதன் முதற் கட்டமாக ஐந்து நாள் வியாபார அபிவிருத்தி பயிற்சிநெறிகள் கரவெட்டி மற்றும் வேலணை பிரதேச செயலர் பிரிவில் நேற்று திங்கள் முதல் இடம்பெற்றுவருகின்றன.
இப்பயிற்சிநெறியில் வேலணை மற்றும் காரைநகர் பிரதேச செயலர் பிரிவுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான பயிற்சி நெறியானது, யாழ் பிரதேச செயலகத்திற்கு அண்மையில் அமைந்துள்ள திறன் அபிவிருத்தி நிலைய கேட்போர் கூடத்திலும், கரவெட்டி பிரதேச செயலர் பிரிவுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான பயிற்சி நெறியானது கரவெட்டி பிரதேச செயலக் கேட்போர் கூடத்திலும் இடம்பெற்றுவருகின்றன.
மேலும் இந்தப் பயிற்சி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மூலம் நடாத்தப்படுகின்றது. மேற்குறித்த உத்தியோகத்தர்களை திரு.சந்திரலிங்கம் கண்ணன் அவர்கள் பயிற்றுவிப்பாளர்களாக பயிற்றுவித்துள்ளார். மேலும் வேலணை மற்றும் காரைநகர் பிரதேச செயலர் பிரிவுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான பயிற்சிநெறியும் திரு.கண்ணன் அவர்களின் மேற்பார்வையில் வழங்கப்பட்டுவருவதும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இதேபோன்ற பயிற்சிநெறி 2 பிரதேச செயலர் பிரிவுகளில் நடாத்தப்பட்டுள்ளன.
வல்வையைச் சேர்ந்த கண்ணன், யாழ் ஹாட்லிக் கல்லூரி பழைய மாணவர் என்பதும், பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் பட்டப் படிப்பை மேற்கொண்டவர் என்பது மேலும் குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
கண்ணன் (Sri Lanka)
Posted Date: September 10, 2015 at 03:16
நன்றி
Rajkumar periyathamby (canada)
Posted Date: September 09, 2015 at 08:10
வாழ்த்துக்கள் !வாழ்க நலமுடன் !!வாழ்க வளமுடன் !!!
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.