Elon Musk இனுடைய Starlink செய்மதி இணைய சேவை (Satellite internet service) பங்களாதேஷில் நேற்றைய தினம் உத்தியோகபூர்வமாக தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் தொலைதூரப் பகுதிகளுக்கு அதிவேக செயற்கைக்கோள் இணைப்பை (300 Mbps.) வழங்குகிறது.
""Starlink Residential” package அல்லது Tk 4,200 “Residential Lite” plan, மாதத்திற்கு 4,200 டாக்கா (34 dollar) ஆரம்ப விலையுடன், ஸ்டார்லிங்க் சேவை இணைக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு ஸ்டார்லிங் செய்மதி இணையசேவை தொடங்க இருந்த போதும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு விடயங்கள் உட்பட, அரச நிறுவனங்களின் தொடர்புத் தகவல்களைப் பாதுகாப்பதற்கான உரிமையை உறுதி செய்வதற்கான பணிகள் முடியும் வரை இந்நிலை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.