Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

"ஒருபோதும் நான் என் தந்தையின் மகளில்லை" - பாமினி செல்லத்துரை (பாகம் 2)

பிரசுரிக்கபட்ட திகதி: 08/03/2026 (ஞாயிற்றுக்கிழமை)
எனது மகளாகிய பாமினி செல்லத்துரை எழுதிய Never My Father’s Daughter என்கின்ற ஆங்கில நாவலை தமிழாக்கம் செய்து நான்கு பாகங்களாக வெளியிடுகிறேன். வாசித்து மகிழ்வீர்கள் என்று நம்புகிறேன்.
                                        அன்புடன்
                                   சபா.இராஜேந்திரன் 
 
பாகம் - 2
 
அத்தியாயம் 9 – நீ எனக்குச் சொந்தம்
அருவி
26 மே 2025
மெல்பேர்ண்
 
அன்றைய நாளை நான் ஒரு மோசமான மனநிலையுடன் ஆரம்பித்தேன். வழக்கமாகவே திங்கட்கிழமைகள் கஸ்டமானவை. இன்றைக்கு அத்தோடு அம்மாவும் மிகுந்த பிடிவாதத்தோடு இருந்தாள்.
 
எத்தனையொ வருடங்கள் வாடகைவீட்டில் வசித்து வந்ததால் நான் புது வீடு வாங்குவது பற்றிப் பேச்செடுத்ததும் அம்மா மிகவும் சந்தோஷம் அடைவா என்று நினைத்திருந்தேன். நான் GP ஆக வேலை செய்த கடந்த இரண்டு வருடங்களில் எனது நோயாளிகளின் பட்டியல் பெருகிக்கொண்டே வந்துள்ளது.  வந்துள்ளவர்களுக்கு என்னென்ன நோய் என்று கண்டுபிடிப்பதில் நீண்ட நேரத்தைச் செலவழித்தேன் – உலகிலுள்ள எல்லா நோய்களுக்கும் நான் மருந்து எழுதியதுமாதிரி எனது நினைப்பு. அதற்கேற்றமாதிரி எனது சம்பளமும் கூடிக்கொண்டே போயிற்று.
 
என்னுடைய நிதி ஆலோசகர் நான் வீடு வாங்குவதற்காக வங்கிக்கடன் எடுப்பதில் ஒரு பிரச்சனையும் இருக்காதென்று கூறினார் - குறிப்பாக எனது வங்கியிலுள்ள பணம் தேவைப்படும் முன்பணத்தை விட அதிகமானதென்பதால். பல வாரங்கள் வீடு தேடியலைந்து இப்போதுதான் என்னால் வாங்கக்கூடியதான எனக்குப் பிடித்த வீட்டைக் கண்டுபிடித்துள்ளேன். அது ஒன்றும் பெரிய ஆடம்பரமானதல்ல - ஒரு பழங்காலத்து மனை. என்னை சந்தோஷமாக்குவதற்காக அதை ஒரு பூர்வீககாலத்தின் அடையாளச்சின்னம் என்று உமா கூறினாள் . ஆனால் அனுபவங்கள் இல்லாத எனது கண்களுக்கு நான் சிறுவயதில்  தேவதைக்கதைகளில் படித்த கதைகளில் வந்த குடிசைகள் போலவே அமைதியான காட்டுநிலத்தின் ஓரத்தில் இருந்தது.  
 
ஜுகலிப்ரஸ் மரத்திலிருந்து வந்த மயக்கத்தைத் தரும் வாசனையும், முன் தோட்டத்திலே வளர்ந்துள்ள சுகந்திப் பூக்களின் வாசனையும் இணந்து என்னை வானத்திலே பறக்கவிட்டன. மனதைக் கவர்ந்த இந்த வீட்டை எனது சொந்தமாக்கிக்கொள்ள முடிவெடுத்தேன்.
 
“அம்மா, இந்த வீடு உங்களுக்கும் எனக்கும் மிகவும் பொருத்தமான வீடு. நாங்கள் இனிமேல் வாடகைக்கு இருக்கத் தேவையில்லை. நகர்ப்புற சிறு வீட்டில் வசிப்பதற்குப் பதிலாக தோட்டத்துடன் கூடிய சொகுசான வீட்டில் இருக்கலாம்.”     
நான் இப்படிக் கூறியதும் அம்மாவின் முகத்திலே ஏற்பட்ட மாறுதலை அவதானித்த நான் கொஞ்சம் வேகமாகத் தொடர்ந்தேன்,” இப்ப இருக்கும்  வீட்டைப்பற்றி ஒரு குறையும் சொல்லவில்லை, அம்மா. நீங்கள் கடுமையாக வேலைசெய்ததால் எங்கள் தலைக்குமேலே ஒரு கூரை இருக்குது. ஆனால் இப்ப நாங்கள் எங்களுக்கென்று ஒரு சொந்தவீடு வாங்கக்கூடியவர்களாய் இருக்கிறோம்..”
 
“அருவி, Templestowe இல் நீ வேலை செய்யத் தொடங்கியதுமுதல் அந்தப் பகுதியில் வாழ்வதை பெரிதாக விரும்புகிறாய் என்பதையும், பக்கத்திலேயுள்ள Warendyte க்கு வீடுமாறிப் போவதற்கு துடிக்கிறாய் என்பதையும் நான் நன்கு அறிவேன்.”
“அம்மா, நீங்களே சொல்லியிருக்கிறீர்கள் ‘ Warendyte  மிகுந்த பசுமையானதும் உயிரோட்டமுள்ளதுமான இடம். Templestowe இலிருந்து சில நிமிட தூரத்திலேயுள்ளது என்பதை நம்பமுடியாமலுள்ளது. வளைந்து வளைந்து போகும் நடைபாதைகள் அழகானவை. பழங்குடிப் பற்றைகளினூடே Yaara ஆற்றோரமாக நடந்துபோகையில்  ஏதோ ஒன்று எம்முடைய மனதிலே ஒரு ஆழமான அமைதியை ஏற்படுத்துகிறது’”
 
“நான் அந்த இடத்தின் அமைதியை அனுபவிக்க வேண்டுமானால் அங்கேதான் வசிக்கவேண்டுமென்றில்லை. விருப்பமானால் எப்போதும் போகலாம், அருவி” நான் சொல்வது ஏதேனும் வினோதமென்று அவள் நினைத்தால் ஒரு விதமாகச் சிரிப்பா. அதே மாதிரிச் சிரித்துக்கொண்டே,” உனக்கென்று ஒரு இடத்தை நீ கண்டுபிடித்திருப்பதையிட்டு எனக்கு மிகுந்த சந்தோஷம், குஞ்சு. வேறொருவர் தயவின்றி உன்னால் வாங்கமுடிவதையிட்டு எனக்குப் பெருமையாயுள்ளது. ஆனால் இது என்னுடைய வீடு. நீ போய்ப் புதுவாழ்க்கையைத் தொடங்கு, நான் இங்கிருந்து அரங்கப்போவதில்லை. அத்தோடு, ஒரு இருபது நிமிடங்கள் தள்ளித்தான் உள்ளது- நினைத்தவுடன் நாங்கள் சந்திக்கலாம்”
 
அதன்பிறகு நான் என்ன சொல்லியும் அது எடுபடவில்லை - அவளது சகோதரிகளின் புத்திமதிகளும் பயனில்லை. அம்மா ரொம்பப் பிடிவாதமாயிருந்தா. அவவுடைய பிடிவாதமான மறுத்தலால் சினமுற்றிருந்த நான் வேலைக்கு வந்தபோது 9 மணிக்கு நான் பார்க்கவிருந்த நோயாளி காத்துக்கொண்டிருந்தார். 
நான் உள்ளே போகும்போது என்னைத் துளைத்துப் பார்த்துக் கொண்டிருந்த கண்களை அலட்சியப்படுத்திவிட்டு  என்னுடைய உதவியாளரான Emily ஐ நோட்டம் விட்டேன். வாழ்வோ சாவோ என்ற அவசரநிலையில் தான் இருக்கிறேன் என்று நினைத்தபடியுள்ள ஒரு நோயாளியின் பதட்டமான வெறிபிடித்த குரலைச் சாந்தப்படுத்துவதற்கு அவள் முயன்று கொண்டிருந்தாள். நான் வேகமாக எனது அறைக்குள் நுழைந்தேன்.
 
நான் என்னுடைய கணினியைத் திறந்துபார்த்தபோது அன்றைய தினம் நோயாளிகளின் எண்ணிக்கை முற்றாக நிரம்பியுள்ளதை அவதானித்தேன். அம்மாவைச் சபித்தேன். ஏற்கனவே பத்து நிமிடங்கள் பிந்திவிட்டது. இனிமேல் நாள் முழுவதும் விட்ட நேரத்தைப் பிடிக்க இடைவிடாத வேலைதான்.  
 
ஒரு எரிச்சலுடன் பெருமூச்சு விட்டுக்கொண்டே வரவேற்பு அறைக்குச் சென்று கூப்பிட்டேன் “திரு Bradley Wheeler”
“அது நான்தான் ”, கேளிக்கையுடன் ஒரு குரல் சொல்லிற்று,” நீங்கள் என்னை Brad என்று அழைக்கலாம்”
நான் நிமிர்ந்து அந்த குளிர்ந்த நீலக்கண்களைச் சந்தித்தபோது எனது நெஞ்சு ஏனோ படபடத்தது. எனது தொழில் நிலைக்கு என்னைக் கொண்டுவந்து, அந்தப்படஓடப்பையும் மீறி என்னால் சொல்லமுடிந்தது எல்லாம்,” நான் டாக்டர் அருவி முருகதாஸ். என்னைப் பின்தொடருங்கள்”, “உங்களைச் சந்தித்ததில் சந்தோஷம், அருவி. என்ன அழகான பெயர் - நிச்சயமாய் அதற்கொரு ஆழ்ந்த அர்த்தம் இருக்கவேண்டும்” 
 
என்னுடைய நோயாளிகள் என்னை முதல்பெயர் சொல்லி அழைப்பது ஒன்றும் நடவாத காரியம் இல்லை. உண்மையில் அப்படி அழைக்குமாறு அவர்களை நான் ஊக்கப்படுத்தி வருகிறேன். அப்படி இருக்கையில் இப்போது ஏன் எனது மனம் குழப்பமடைகிறது?
 
சூரியஓளியைத் திரவமாக்கித் தன்னுள்ளே கொண்ட அவரது கணீரென்ற குரலா, அவரது கண்ணிலே தெரிந்த குறும்புத்தனமா, அவரது மினுமினுக்கும் சிவப்பும் தங்கநிறமும் கலந்த அந்த முடியா அல்லது அவருடைய கோணவடிவிலான முகத்தின் பிரகாசமா என்னைத் தடுமாறவைத்தது? 
அவர் விரும்பியவாறு எனது பெயரைப்பற்றிய ஆராய்ச்சியை ஒதுக்கிவிட்டு, அவரை உட்காருமாறு சைகை செய்தேன். அவருடைய அந்த சிரிக்கும் கண்களை உற்றுப்பார்க்காமல் இருக்க முயற்சி செய்தேன். ஆனால் அவருடைய தடிப்பற்ற சட்டையினூடாகத் தெரிந்த மார்பினதும் கையினதும் தசைநார்களை உற்றுப் பார்ப்பதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.
“உங்களுக்கு நான் என்ன செய்யலாம்?” விடுப்பான குரலில் கேட்டேன்.
“ஒரு சிறு புன்னகை இருந்தால் சிறப்பாயிருக்கும்”
என்ன தைரியம் இருந்தால் இதைச் சொல்வான்! எனது கண்கள் துடித்தன. சிரித்து நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என்பதை நான் சொல்லமுன்னரே,” இன்று எதுவுமே உங்களைச் சிரிக்கவைக்க முடியாதுபோல் உள்ளது, டாக்டர். ஆகவே நான் விஷயத்திற்கு வந்துவிடுகிறேன்”
 
எனது முகம் சிவந்தது. எல்லா நோயாளிகளையும் பணிவன்புடனும் தன்மானத்துடனும் நடத்தவேண்டும் என்பது மருத்துவத்துறையின் எழுதப்படாத சட்டம். என்னை எந்தவிதத்திலும் அவர் தடுமாறவைத்தாலும் அவரை இதைவிட சிறப்பாகக் கவனிக்கவேண்டும் என்று எனக்கு நானே ஞாபகப்படுத்திக்கொண்டேன்.
ஒரு ஆழமான மூச்செடுத்தேன். “என்னை மன்னிக்கவும், Brad. இது என்னுடைய மோசமான நாட்களில் ஒன்று. ஆனால் அது என்னுடைய மோசமான நடவடிக்கைக்கு சமாதானமில்லை”
“அது பரவாயில்லை, டாக்டர். நான் ஒரு டாக்டரையும் எனது 15 வயதிற்குப் பிறகு பார்க்கவில்லை. இங்கு வரும்போது சிறிது நடுக்கத்துடன்தான் வந்தேன். நீங்கள் கொஞ்சம் கடுப்பாய் இருந்ததைப் பார்த்தவுடனே திரும்பிப் போகலாமென்று நினைத்தேன்”
அவருடைய ஒளிவிடும் கன்னங்களையும் கட்டுமஸ்தான உடம்பையும் பார்த்து அசட்டுச் சிரிப்புடன்,” உங்களை மாதிரியே எல்லா நோயாளிகளும் இருந்தால், எனக்கு விரைவில் வேலை இல்லாமலே போய்விடும்”
“எனக்குத் தெரியும்”, - என்னுடைய குழப்பத்தைப் பார்த்த அவர்,” இன்று காலை நீங்கள் வந்தபோது இப்படியொரு அழகான டாக்டரைப் பார்க்கப்போகும் எனது அதிர்ஸ்டத்தை நினைத்தேன். ஆனால் நீங்கள் என்னைப் பார்த்து உறுமியதும் அவ்வளவு அதிர்ஸ்டசாலியாக நினைக்கவில்லை.”  
“நான் உறுமவில்லை”, வெட்கத்துடனும் சிரிப்பினுடனும் சொன்னேன்.
அவரும் சிரித்தார். இருவரும் மற்றவர் கண்களைப் பார்த்துக்கொண்டு இருந்தபோது சுற்றிவர   இருந்த உலகம் மாயமாவதுபோலத் தோன்றியது.
நான் எனது உதட்டைக் கடித்தபடி பலவந்தமாக வேறிடம் பார்த்தேன்.
“சரி, ஒரு டாக்டரைப் பார்க்க வந்ததின் நோக்கம்?”. அவருடைய விபரங்களை கணினியில் பார்த்தேன், “ பதினேழு வருடங்களுக்குப் பின்னாடி?”
“என்னுடைய இடது கையிலுள்ள சிறிய புள்ளிகளை ஒருமுறை பாருங்கள். பல வருடங்ககளாய் இது எனக்கு உள்ளது. ஆனால் இப்போது கொஞ்சம் கருமையடைகிறது. அத்துடன் கொஞ்சம் சொறியவும் செய்கிறது. சொறிகிறதென்று கற்பனை செய்கிறேனோ தெரியவில்லை. நான் ஒரு தொழில்நுட்ப வேலையாள். என்னுடைய சிநேகிதன் Tom  கிட்டடியில் தனது கையிலிருந்து கரும்புற்றுநோய்க்கான கட்டிகளை சத்திரசிகிச்சை செய்து நீக்கியுள்ளான். நாங்கள் கடலில் சறுக்கல் விளையாட்டு விளையாடுவதால் வந்திருக்கலாமென அவன் நினைக்கிறான். நான் சோதிச்சுப் பார்க்கவேணுமென்று அவன் தொந்தரவு செய்கிறான். ஆரம்பத்திலேயே கண்டு பிடித்தால், தன்னுடையதுபோல முளையிலேயே கிள்ளிவிடலாம் என்று சொல்கிறான்” 
அவர் தன்னுடைய கையை நீட்டினார். அவரைச் சோதிப்பதற்காக நான் முன்னுக்குச் சென்றபோது அவருடைய மென்மையான மூச்சை என்னால் உணரமுடிந்தது. என்னுடைய விரல்களால் அவரது மென்மையான கைகளில் உள்ள புள்ளிகளைத் தொட்டபோது என்னுடைய உடம்பிலுள்ள நரம்புகள் எல்லாம் மின்சாரம் பாய்ச்சியதுபோல் இருந்தது. அவருடைய தீர்க்கமான பார்வை என்னுடைய கண்களைத் தேடின. ஆனால் நான் அதைத் தவிர்த்துவிட்டேன். என்னுடைய தொழிலை நினைத்துக்கொண்டேன். அவருடைய மின்னும் நீலக்கண்களுக்கு என்னைப் பறிகொடுத்து விடக்கூடாது.
என்னுடைய தோல்நோக்கும் கருவியை எடுத்துக்கொண்டு,” எங்கே அதை ஒருக்கால் பார்ப்போம்”
 
“டாக்டர் முருகதாஸ், நான் உங்களுடைய நோயாளியாக இருப்பதற்கு விரும்பவில்லை.”, ஒரு குறும்புச் சிரிப்புடன் சொன்னார்,” நீங்கள் என்னை ஒரு தோல்வியாதி நிபுணரிடம் அனுப்பமுடியாதா?”
“அது தேவை என்று நாங்கள் நினைத்தால்தான் நிபுணரிடம் அனுப்புவோம்”, சொல்லிவிட்டு ஒரு நிபுணரைப் பார்த்தால் செலவு அதிகமாகுமென்றும், இவரைப் பொறுத்தவரையில் அது தேவையில்லையென்றும் சொல்வதற்கு நான் வாயைத் திறக்க, அவர் என்னைப் பேசவிடவில்லை.   
அவருடைய புன்னகை மேலும் பெரிதாகிவர, களிப்புடன் கேட்டார்,” நான் சொல்வது பிழையாக இருந்தால் என்னைத் திருத்தவும். நீங்கள் உங்கள் நோயாளியுடன் தனியே சாப்பிடப்போவது உங்கடை மருத்துவத்துறை உறுதிமொழிக்கு எதிரானதா?”
என்னுடைய நரம்புகள் எல்லாம் படபடப்புடன் வயிற்றுக்குள்ளே குத்துக்கரணம் அடித்தன; ஒரு எதிர்பார்ப்போடு எனது இதயம் இடித்தது. ஏதாவது புதிசாலித்தனமாகச் சொல்ல நினைத்தேன், ஆனால் சும்மா உற்றுப்பார்த்தபடியே இருந்தேன்.
அவருடைய கழுத்துவரை தோன்றிய மெல்லிய வெட்கமும் வேகமாக பல்டியடித்துக்கொண்டு வந்த வார்த்தைகளும் என்னைச் சிரிக்கவைத்தன. அவருடைய ஆணவம் சுட்டிக்காட்டுவதுமாதிரி அவரொன்றும் துணிச்சலான பண்பட்டவர் இல்லை. 
“இது என்னுடைய ஆசைக்கேற்ற நினைப்பு என்று எனக்குத் தெரியும், ஆனால் நீங்கள் என்னைப் பார்க்கும் விதத்தில் உங்களுக்கு ஒரு ஆண் நண்பர் இல்லையென்று நினைக்கிறேன். நான் சொல்வது சரிதானே?”
ஒரு எச்சரிக்கையுடன் தலையாட்டினேன். அவர் கூச்சலிட்டார்,” இன்று இரவு என்னுடன் உணவு உண்ணுங்கள்”
இப்போதுதான் முதன்முறையாகச் சந்தித்த ஒருவருடன் நான்  வெளியே போவதென்பது நடக்காத காரியம் என்று சொல்ல நினைத்த என் கண்கள் துடித்தன. ஆனால் அதைச் சொல்வதற்கு முன்னாலேயே “ஓகே” என்று நான் சொன்னது எனக்கே கேட்டது.
நான் சொன்னதை அவர் கேட்காததுபோல ஒரு கணம் இருந்தது; அவருடைய முகத்திலே செம்மறியாடுகளுக்குள்ள அப்பாவித்தனமான  வெளிப்பாடே தெரிந்தது. அப்புறம் மெதுவாக அவருடைய விரிந்த உதடுகள் மெதுவாக இணைந்து ஒரு சிரிப்பாக வெளிப்பட்டது. பிரகாசமான அந்தச் சிரிப்பு என்னுடைய சாதாரணமான நோயாளிகளைப் பார்க்கும் அறையையே நூறு சூரியன்கள் சேர்ந்து ஒளி பரப்பியதுபோல இருந்தது. 
 
பேரின்பம் நிறைந்த அந்த மயக்கத்திலிருந்து விடுபட்டு வெளியே வருவதற்கு நான் என்னைக் கட்டாயப்படுத்த வேண்டியிருந்தது. அவசரமாக தோல்வியாதி நிபுணருக்கு பரிந்துரை கடிதம் எழுதி அவரிடம் கொடுத்துவிட்டு போலியான கண்டிப்புடன்,” நீங்கள் இப்போது போகவேண்டும்- உங்களுக்குத் தெரியும், நீங்கள்தான் ஒரேயொரு நோயாளி அல்ல.”
Brad இனுடைய புன்னகையால் பாதிக்கப்பட்டு இன்னமும் மூச்சு வாங்கிக்கொண்டிருந்த நான் ஒருவாறு எனது கவனத்தைக் கணினியின் மேல் திருப்பினேன். எனது அடுத்த நோயாளியும் ஒரு புது நோயாளி என்றதும் கண் படபடவென சிமிட்டியது. வரவேற்பறைக்குச் சென்று அழைத்தேன்,” திரு நல்லக அபேய்கோன்”
அவருடைய பெயரைச் சொல்லிக்கூப்பிடும்போதே எனக்குள்ளே இருந்த அந்தச் சிரிப்பு வெளியே வரத் துடித்துக் கோண்டிருந்தது. Emily  என்னை ஆச்சரியத்துடன் பார்த்தாள். நான் அவள் கண்களைப் பார்க்காமல் அலட்சியப்படுத்தியதை அவதானித்த அவள் கண்கள்  கிளினிக்கைவிட்டு வெளியே தன்னுடைய காலடிகள் அதிகாரத்துவமான ஓசையை உண்டாக்கும் வண்ணம் நடந்துசென்ற Brad மீது திரும்பியது.
மருத்துவக்கல்லூரியில் சந்தித்த எனது ஆண் நண்பராகிய அர்ஜூனின் சிநேகிதத்தை நான் முறித்தபின்பு, Emily யின் பொழுதுபோக்கே எனக்கொரு சரியான துணை தேடுவதுதான்.
“என்னுடைய பெரியம்மாக்கள் மாதிரி நீயும் ஒரு மோசமான ஆள்”, நான் அவளைத்திட்டுவேன், “ அவர்களும் எனக்கு ஒரு பொருத்தமான ஆளைத் தேட முயற்சிக்கிறார்கள்”
“ஆஆ, நான் உங்களுக்கு பொருத்தமான ஆளைப் பார்க்கவில்லை. நான் ஒரு தமிழ் டாக்டரையோ, முதலீட்டு வங்கியாளரையோ அல்லது உச்சத்தில் இருக்கும் குறைபாடற்ற தோற்றமுள்ள தொழில் முனைவர்களையோ பரிந்துரைக்கவில்லை. இந்தமாதிரிப் பொருத்தங்கள் இல்லாத மாப்பிள்ளையைத்தான் நான் பரிந்துரைப்பேன்- உன்னை மயக்கத்தில் ஆழ்த்தும் Byron போன்ற கவிதை உள்ளம் கொண்டவரை, உன்னுடைய இதயத்தை வேகமாக அடிக்க வைக்கக்கூடியவரை.”  
 “ம்ம், இப்போது எனது இதயம் வேகமாக அடிக்கிறது. நிச்சயமாக Emily  இதற்கான பெருமையை தானே எடுத்துக்கொள்வாள், ஏனெனில் அவள்தான் இந்த சந்திப்பை ஒழுங்குசெய்தாள். அப்புறம் நான் அவளுக்குச் சொல்லவேண்டும் Brad துப்பரவாக Byron போல இல்லை. அவருடைய அழகான தோற்றம், இயற்கையான புன்னகை, திறந்த வெளிப்படைத்தன்மை ஆகியன Jane Austen காதல்கதைகளில் வரும் Darcy ஐ விட கூடுதலாக Bingley ஐ ஒத்துள்ளார். 
Jane Austen காதல் கதைகளைப்பற்றி சிந்திப்பதற்கு இப்போது நேரமில்லை; எனது அடுத்த நோயாளி காத்துக் கொண்டிருக்கிறார்.
“திரு நல்லக அபேய்கோன்”, திரும்பக் கூப்பிட்டேன்.
அவரது கண்கள் என்னையே தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தபோதிலும், ஒரு கணநேரம் அந்தத் தொடர்பு அறுந்தது - அதிர்ச்சிக்கு உள்ளான நோயாளிகளிடம் இதைப் பார்த்திருக்கிறேன். கடந்தகால நினைவுகளிலிருந்து நிகழ் காலத்திற்கு  இழுத்து வந்ததுமாதிரி, அவர் தலையை ஆட்டி என் பின்னே வந்தார். என்னுடைய அறைக்குள் அவர் நுழைந்தபோது அவரெடுத்த வைத்த அடிகள் அளந்து எடுத்து வைத்தது மாதிரியும் நிதானமாகவும் இருந்தது.
“ நான் உங்களுக்கு என்ன செய்யலாம், திரு அபேய்கோன்”, நான் கேட்டேன். அவருடைய வயது மாத்திரம் அவரைச் சம்பிரதாய முறைப்படி அழைக்கவைக்கவில்லை – சிங்களவர்களுடன் எனக்கு அவ்வளவு பரீட்சயம் இல்லாதபடியால் நான் கொஞ்சம் பதட்டமாக இருந்தேன். எப்போதெல்லாம் சிங்களவர்களைப் பற்றிக் கதை வருகிறதோ அப்போதெல்லாம் ஜெயா பெரியம்மா கக்குகின்ற வெறுப்பு என்னை வந்து சேராமல் அம்மா எப்போதும் பாதுகாத்து வந்திருந்தபோதிலும் என்னுடைய பிறப்பைப்பற்றி எனக்குத் தெரிந்திருந்ததால்  தேவையில்லாவிடில் அவர்களிடமிருந்து ஒதுங்கியே இருந்தேன்.
 
நான் பல்கலைக்கழகத்தில் இருந்தபோது சில விரிவுரையாளர்களும், மருத்துவப் பயிற்சியாளராக இருந்தபோது பதிவாளராகவும் இருந்தவர்கள் சிங்களவர்கள். ஆனால் அவர்களொடு எனக்கிருந்த உறவு மரியாதையான தொழில்முறைக்கு அப்பால் சென்றதில்லை. அப்படியே என்னுடைய குழுக்களில் இருந்த சிங்களமாணவர்களுடனும் ஒட்டவில்லை.
 
இவருக்கு முன்னாலும் சில நோயாளிகளின் உச்சரிப்போ அல்லது பெயரோ அவர்களைச் சிங்களவர்கள் என்று நினைக்கவைத்துள்ளது. ஆனால் அபேய்கோன் என்ற பெயர் ஒருவிதமான சந்தேகத்தையும் தரவில்லை.
அவருடைய முகம் மென்மையாக , முழுமையாக சுத்திகரிக்கப்பட்டதுபோல இருந்தது. கண்கள் அமைதியாக ,ஆனால் எல்லாவற்றையும் கவனித்தபடி இருந்தன. குறைந்துகொண்டே போகின்ற தலைமுடி, ஆனால் அதை மறைக்க ஒரு முயற்சியும் எடுக்கவில்லை என்பது அவரது ஒளிந்திருக்கிற நேர்மையைக் காட்டியது. அவ்வளவு உயரமில்லை, குறிப்பாகக் கவரக்கூடியதொன்றுமில்லை, ஆனால் அவரது நடைமுறையில் இருந்த ஏதோ ஒன்று அவருடைய அமைதியான கண்ணியத்தைப் பறைசாற்றியது.
அவருடைய கடந்தகாலப் பதிவுகளை நோட்டம் விட்டேன். ஐம்பத்திஏழே வயதான அவருடைய முகத்திலே நீண்டகாலச் சோர்வு, அந்தக் கோடுகளின் ஆழம். இவர் அதிககாலம் பெரிய வலியோடு வாழ்ந்திருக்கிறார் என்று தோன்றியது  
மிகவும் மென்மையாகப் பேசினார், “பிள்ளை, நான் இலங்கையிலிருந்து எனது சகோதரியையும் குடும்பத்தையும் பார்க்க வந்துள்ளேன். அவவின் மகனுக்கு இன்னும் மூணு மாதத்தில் திருமணம் நடக்கவிருப்பதால் என்னுடைய பயணத்தைத் தள்ளிப்போடுமாறு என்னைச் சம்மதிக்க வைத்துவிட்டா.  ஆனால் நான் போதுமான அளவு கொலெஸ்றல் குளிசைகள் கொண்டுவரவில்லை.”
அவர் பேசும்போது தனது கைகளை மேசையில் வைத்தார். பல்விரல்களையுடைய ஒரு நோயாளியை முதல்முறையாகப் பார்க்கிறேன் என்பதை உணர்ந்தபோது எனது உடம்பு குலுங்கியது. அவரது வலது கையிலேயுள்ள ஆறாவது விரலை நான் உற்றுப் பார்த்தபோது அவர் சொன்னார்,” இது எங்கள் பரம்பரை மரபணு நிலை. எனது அப்பாவிற்கு இருந்தது, எனது சகோதரிக்கும் இருக்கிறது”
“மன்னிக்கவும், நான் உங்களை முறைத்துப்பார்க்க நினைக்கவில்லை”
“அது பரவாயில்லை. இது எனக்குப் பழகிவிட்டது. இதுதான் ஆட்கள் முதன்முதலாக என்னைப்பற்றிக் கவனிக்கிறார்கள். நான் சிறுவனாக இருந்தபோது என்னுடைய சகோதரி - இங்குள்ளவள் இல்லை, இலங்கையில் இருப்பவள் - என்னை இரக்கமில்லாமல் கேலிசெய்வாள். அவள் சொல்லுவாள் ஆறு விரல் இருந்த Anne Boleyn க்கு என்ன நடந்தது- தலை வெட்டப்பட்டாள். நான் கவனமாக இல்லாவிடில் எனக்கும் அதுதான் நடக்கும்- ஏமாற்றமடைந்த துணைவரால் அல்ல, மாறாக சுதந்திரம் தேடும் புலிகளினால்”
 
இதுதான் முதல்முறை நான் கேள்விப்படுகிறேன் இலங்கையில்  சிங்களவர்களும் தங்கள் உயிருக்குப் பயந்திருந்தார்களென்று. நான் என்னுடைய சிந்தனைகளை மறைத்துக்கொள்ளப் பழகவேண்டும். நல்லக கூறும்போது துயரத்துடன் நினைத்துக்கொண்டேன்,
“பிள்ளை, நீங்கள் இங்கே பிறந்தபடியால் அநேகமாக உங்களுக்குத் தெரியாது. ஆனால் இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தின்போது தமிழ், சிங்கள  மக்கள் இருவரும் பெரும் பயத்திலே வாழ்ந்தார்கள். இராணுவத்தின் தாக்குதலையிட்டு தமிழர்கள் பயப்பட்டார்கள். எப்போது புலிகள் சிங்களமக்கள் வாழும் இடங்களைத்தாக்குவார்கள் என்ற பயம் எங்களுக்கு இருந்தது”
வேறொரு நாளாக இருந்தால் பல கேள்விகளைக் கேட்டிருப்பேன். ஆனால் இன்று, எனது வேலை முடியவேண்டுமென்று பொறுமையிழந்திருந்தேன். கடிகாரத்தில் ஓரக்கண்ணால் பார்த்தபோது எனது சந்திப்புகளில் நான் மிகவும் பின்தங்கியிருப்பதை உறுதிப்படுத்தியது. அதனால் நான் Lipitor என்ற மருந்துக்கான சீட்டை எழுதி அவரிடம் கொடுத்துவிட்டு, ஆறு மாதம் கழித்து, அப்போது மெல்பேர்ன் இல் இருந்தால் இரத்தச்சோதனைக்கு வருமாறு சொன்னேன்.
அவர் போவதற்குத் தயங்கியதைப் பார்த்து, தனிமை அவரை வாட்டக்கூடும் என்று நினைத்துக்கொண்டேன்.
ஆனால் அவரை மகிழ்விப்பதற்கு செலவிடுவதற்கு எனக்கு நேரமில்லை - திருத்தி அமைக்கப்படவேண்டிய விளக்கப்படங்கள் இருந்தன, நோயாளிகளைப் பார்க்கவேண்டும், இரவு உணவுக்காக Brad ஐ சந்திக்கவேண்டும் - இந்த சந்திப்புக்காக நேரத்தைக் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறேன்.
நல்லக என்னுடைய எண்ணத்தைப் புரிந்திருக்கவேண்டும். மெதுவாக எழும்பி, எனக்கு நன்றி சொல்லிவிட்டு அறையைவிட்டு வெளியேறினார்.
அதற்குப்பிறகு வந்த நேரமெல்லாம் ஒன்றும் பெரிய விஷேடம் இல்லை. ஆனால் அன்றைய இரவுதான் எனது வாழ்க்கையின் மிகவும் மறக்கமுடியாத ஆனந்தமான இரவு.
Brad உம் நானும் உணவகத்தின் மொட்டைமாடியில் இருந்தபோது கீழே நகரத்து விளக்குகள் பளிச்சென்று ஒளிமயமாக இருக்க மேலே வானம் அமைதியாக  இருந்தது. எங்களுடைய சம்பாஷனை  முக்கியமில்லாத விடயத்தில் தொடங்கி எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையின் முக்கிய விடயங்களையும் கதைத்தோம். என்னவோ தெரியவில்லை, நான் அம்மா, பெரியம்மாக்கள் மற்றும் எங்கள் வாழ்க்கையை மாற்றியமைத்த பேரழிவுகள், நான் எப்படி உருவானேன் என்ற துன்பகரமான அந்த நிகழ்வு உட்பட எல்லாவற்றையும் அவருக்குச் சொன்னேன். இதுவரை காலமும் நான் ஒருவருக்கும் எல்லாவற்றையும் இவ்வளவு விரைவாகச் சொன்னது கிடையாது.
சொல்லி முடித்ததும் அவரின் முகத்திலே வெறுப்புத் தெரிகிறதா என்று பதட்டத்துடன் அவதானித்தேன். அதற்குப்பதிலாக, அவர் என்னுடைய கையைப் பிடித்து தான் முன்பு நினைத்ததைவிட அசாதரணமானவள் என்று சொன்னார்.
இதைவிட அதிகம் சொல்வதற்கு நான் தயங்கியதைப் பார்த்து அவர் சம்பாஷணையை திசை திருப்பி ஆஸ்திரேலியாவின் Footy என்ற விளையாட்டைப்பற்றிப் பேசினார். எப்படி Collingwood என்ற குழு தங்களை மறுசீரமைத்து அவர்களின் துணிச்சலான நகர்வுகள் வெற்றியைக் கொடுத்துள்ளது.
“எனக்கு 31 வயதானபோதுதான் எனது பொறுமைக்கு இறுதியாக  வெகுமதி கிடைத்தது. 2023 பிரமாண்டமான இறுதிப் போட்டியில் நாங்கள் வென்றதை எப்படியாக அப்பாவும் நானும் கொண்டாடினோம். இந்த வெள்ளிக்கிழமை Hawthorn உடன் விளையாடும்போது நாங்கள் அங்கே இருப்போம். இலகுவாக இருக்காது, ஆனால் நாங்கள் வெல்லும் சாத்தியக்கூறு அதிகம்”  
நான் அவருடைய பெற்றோர்பற்றிக் கேட்டபோது அவர் கண்களில் அன்பும், நன்றியுணர்வும் பளிச்சிட்டன.
“அவர்களுடைய அன்பும் ஆதரவுமே நான் என்னுடைய வணிகத்தில் வெற்றி பெறுவதற்கு தேவையான அடிப்படை மனவுறுதியைத் தந்தன. Tom ம் நானும் ஆறு வருடங்களுக்கு முன்னர் எமது வணிகத்தை ஆரம்பித்தோம். ஒருவிதமான வணிக அனுபவம் இல்லாத இரண்டு தொழில் நுட்ப வல்லுநர்கள், ஆனால் இப்போது நாங்கள்  பன்னிரெண்டு வேலையாட்களை வைத்துள்ளோம்”
நான் அவரைப் பெருமையுடன் பார்த்தேன்.
“ஆனால் வணிகத்திற்காக நான் செலவழித்த நீண்டநேர வேலையினால்  வேறு பாதிப்பு ஏற்பட்டது. என்னுடைய முந்திய பெண் நண்பி என்னை விட்டுப் போனதின் காரணமே அதிகநேரம் நான் வீட்டில் இல்லாமை.”
ஓரு கணம் தாமதித்து, விளையாட்டாகக் கூறினார்,” நீ கவலைப்படாதே - நான் இப்போது நீண்டநேரம் வேலை செய்வதில்லை – என்னுடைய பெண் நண்பியாக இருப்பது பாதுகாப்பானது”
வெட்கத்தினால் என் முகம் சிவந்தது. நான் நினைப்பது எப்படி அவருக்குத் தெரிகிறது?
“Mr Wheeler, இன்றுதான் நாங்கள் சந்தித்தோம். நான் உங்கள் பெண் நண்பியாய் வர விரும்புகிறேன் என்று நினைப்பதற்கு என்ன தைரியம் உங்களுக்கு?”
“உண்மையில் மிகப் பெரிய தப்புத்தான் - நாங்கள் இன்னும் முத்தமே  இடவில்லை, எப்படி நான் உங்களை எனது பெண் நண்பி என்று சொல்லலாம்?”
அவர் என்னை இழுத்து தனது கரங்களால் அணைக்கும்போது அவரது கண்கள் எனது கண்களைவிட்டு அகலவில்லை. 
மின்மினிக்கும் நட்சத்திரங்களுக்குக் கீழே, Taylor Swift என்ற பாடகியின்  நீ எனக்குச் சொந்தம் என்ற பாடல் பின்னணியில் மெதுவாக ஒலிக்க, கண்ணாடிக்கோப்பைகள் ஒன்றோடொன்று உரசி கலகலவென்ற ஓசையுடன் பலரின் சந்தோஷமான உரையாடல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நாங்கள் முத்தமிட்டோம்.
இதுவரைகாலமும் எனது ஆத்மா தேடிக்கொண்டிருந்த என்னுடையவரை அந்தத் தருணத்திலே கண்டுபிடித்தேன் என்பதை உணர்ந்தேன். ஒவ்வொருமுறை தொடும்பொழுதும் புதிதானதாகத் தோன்றும் அதே வேளை மிகவும் பரிச்சயமானதுபோலவும் இருந்தது – வேறொரு பிறவியில் நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் நன்கு அறிந்ததுமாதிரி. 
நாங்கள் ஒருவரையொருவர் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தோம், பிரமிப்புடனும், மூச்சுவிடாமலும் – எங்களைச்சுற்றி இருந்த உலகமும் மௌனமாக மூச்சை அடக்கியவாறு எங்களுடன் இருந்தது.
 
நான் எதிர்பார்த்தமாதிரி நான் வீடு திரும்பும்போது அம்மா எனக்காகக் காத்திருந்தா. ஒருநாளும் நான் வீடு திரும்பாமல் அம்மா படுக்கப் போகமாட்டா, அதுவும் இன்று வழக்கத்திற்கு மாறாக நேரம் பிந்திவிட்டது மாத்திரமல்லாமல் இன்றுகாலை எங்களுக்குள் நடந்த தர்க்கமும் ஒருகாரணம் அவ தூங்கமாட்டா என்று எனக்குத் தெரியும்.
எனது இதயத்தில் ஒலித்துக்கொண்டிருந்த பாட்டு வாய்வழியே வெளிவரத் துடித்துக்கொண்டிருக்கையில் நான் வீட்டுக்குள் காலடி எடுத்துவைத்தேன்.
“ஜெயா பெரியம்மா! என்ன செய்கிறிர்கள் இங்கே? நடுநிசியைத் தாண்டிவிட்டது”
தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருந்தது. “நாயகன் படத்தை இன்னுமொருமுறை பார்க்கிறீர்கள் என்று சொல்லாதீர்கள். நீங்கள் இருவரும்தான் கமலஹாசனின் விசிறிகளில் முதன்மையானவர்கள் என்று நான் சத்தியம் செய்வேன்”
“எங்களைப்பற்றிக் கவலைப்படாதே, சின்னச் சீமாட்டி” பொய்யான கண்டிப்புடன் ஜெயா பெரியம்மா சொன்னா,” நீ எங்கே போயிருந்தாய்? உன்னுடைய அம்மாவை நான் வெள்ளெனக் கூப்பிட்டபோது அவ உனக்காகக்  காத்திருப்பதாகச் சொன்னா. எனக்கு நித்திரை வரவில்லை. அவவிற்கு பேச்சுத்துணைக்காக வந்தேன்”
சோபாவில் இருந்தவாறே அம்மா என்னைப்பார்த்தா,” குஞ்சு, நீ இரவு உணவிற்குப் போவதாகச் சொல்லியிருந்தாய். ஆனாலும் வழக்கமாக இவ்வளவு நேரம் வாரநாளில் பிந்தி இருப்பதில்லை”
என்னை நன்றாக எடைபோட்டா, “நீ மிகவும் குதூகலமாய் இருக்கிறாய் – இரவின் இந்த நேரத்தில். யாருடன் இரவு சாப்பிட்டாய்?”
Brad ஐப்பற்றிக் கதைப்பதற்கு நான் இன்னும் தயாரில்லை, ஆகவே இன்று எனது வேலையில் என்ன நடந்ததென்று அவர்களை இழுத்தேன்,” பெரியம்மா, உங்களுக்குத் தெரியுமோ? இன்றுகாலை உங்களைப்பற்றிச் சிந்தித்தேன்”
அவ தன்னுடைய புருவத்தை உயர்த்தியபடி, “ஓஓ!”
“இன்று ஒரு சிங்கள நோயாளியைப் பார்த்தேன் – நல்லக அபேய்கோன். ஒரு புன்னகை நிரந்தரமாக முகத்தில் பதிந்து வைத்ததுமாதிரி ஒரு மென்மையான மனிதர்”
ஜெயா பெரியம்மாவின் முகம் ஒரு கணம் இருண்டது. மறுகணம் தன்னை நிதானப்படுத்திக்கொண்டு அமைதியாகக் கூறினா,” ஒருவன் எவ்வளவும் புன்னகைக்கலாம், ஆனால் உள்ளே வில்லனாக இருப்பான்”
என் திகைப்பூட்டும் முகபாவனையைப் பார்த்து அவ சிரித்தா,” உனக்குத் தெரியாதா இலங்கையில் எங்கடை கல்வி இங்கிலாந்து பாடத்திட்டத்தை அடிப்படையாகக்கொண்டது. சேக்ஸ்பியர்தான் எனக்குப் பிடித்த நாடக ஆசிரியர். நான் முன்பு சொன்னது அவரது வார்த்தைகள்”
 
அதை ஒத்துக்கொள்வதுமாதிரி அம்மாவின் உதடுகளிலிருந்து மென்மையான சப்தம் வந்தது. பழையகால நினைவுடன் ஒரு ஏக்கப் புன்னகை முகத்தில் வர அம்மா பக்கம் திரும்பி,” எதற்கும் நான் இப்போது புறப்படுறேன், சீதா. வேறொரு நாள் நாயகன் படத்தைப் பார்த்துமுடிப்போம்”
கதவிற்குக் கிட்டப்போய் ஒரு கணம் நிதானித்தபின் சொன்னா,” மறந்து விடாதே – நாளைக்கு மோகனுடன் வில்லாஸ் இல் இரவுணவு. சத்தியமா, எங்களை இப்படிக் கவர்ந்துகொள்வாரென யார் நினைத்திருப்பார்? பாட்டா எங்களை அவரோடு ஒப்பிட்டுப் பேசும்பொழுதெல்லாம் மோகனை நாங்கள் எப்போதும் வெறுப்போம் என்று சாபமிட்டது ஞாபகம் இருக்கிறதா?”
“ஞாபகப் படுத்தியதற்கு நன்றி, பெரியம்மா. இடம் ஒதுக்குவதற்குச் சொல்ல நான் மறந்துவிட்டேன். நாளை காலை முதல்வேலையாக Emily இடம் சொல்லி  இடம் ஒதுக்கவேண்டும். அந்த இடம் சிலநேரம் சரியான கூட்டம்- நாங்களோ பெரிய கூட்டம்” அவ போனபின் கதவைச் சாத்தினேன்.
அம்மாவின் கண்களைச் சந்திக்காமலே அவவைக்கடந்து மேல்மாடியிலுள்ள எனது அறைக்குச் சென்றேன். எனக்குள்ளே இருக்கின்ற மெல்லிய கதகதப்பை அவ கண்டுபிடித்து விடுவாவோவெனப் பயந்தேன். எதிர்பாராதவிதமாகவும் விடாப்பிடியாகத் தொடர்ந்தும் Brad பற்றிய எண்ணம் எழுந்தவண்ணம் இருந்தது. அது கொண்டுவந்த படபடப்பை தற்சமயம் எனக்குள்ளேயே வைத்திருக்க விருப்பப்பட்டேன்.
 
 
அத்தியாயம் 10 – இரத்தத்தால் இணைந்த மாமன்மகன்
சீதா
20 – 27 மே 2025
மெல்பேர்ண்
நான் அம்மாவின் சகோதரரான இராமனாதன் என்பவரை ஒருபோதும் சந்தித்ததில்லை - ஏனென்றால் அவர் நான் பிறக்குமுன்பேயே மலேசியா போய்விட்டார்; உண்மையில் அம்மா திருமணம் செய்யமுன்பேயே. நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது ஏன் அம்மாவின் சகோதரர்கள் எங்களைப் பார்க்க வருவதில்லை என்று ஆச்சரியப்பட்டுள்ளோம்.
“யாழ்ப்பாணம் கொழும்பு இல்லை, பிள்ளைகள். இங்கு பயணம் செய்து வருவது சுற்றுலாப்பயணிகளுக்கு இலகுவானது அல்ல,” அம்மா வருத்தத்துடன் சொல்வா.
 
இருப்பினும், பாட்டா இங்கு வந்திருக்கும் காலங்களில்  பேசுவதா அல்லது அமைதியாக இருப்பதா என்ற குழப்பம் இருந்ததால், அவர் வருகைக்குப் பிற்பாடு அம்மாவின் குடும்பத்தினர் வராதது எங்களைப் பெரிதும் வருத்தவில்லை.
எப்போதாவது அவவுடைய சகோதரர் ஒருவரிடமிருந்து அம்மாவிற்கு தபால் வரும். பெருமூச்சு விட்டுக்கொண்டே சொல்வா,” என்னுடைய சகோதரர்களுக்கு உங்களையெல்லாம் அறிமுகப்படுத்த எவ்வளவு ஆசைப்படுகிறேன். ஒருநாள் நாங்களெல்லோரும் மலேசியா போய் அவர்களையும் குடும்பத்தினரையும்  சந்திக்கும் சந்தர்ப்பம் வரக்கூடும்.”
அம்மாவிற்கு வருத்தத்திற்குரிய விடயம் என்னவென்றால் அது நடக்கவில்லை. இப்போது அவ மாத்திரமில்லை அவவின் சகோதரர்களும் மேலே போய்விட்டார்கள்.
இப்போது முதல் தடவையாக இராமநாதன் மகனாகிய மோகனை சந்திக்கப்போகிறோம். எங்களுடைய மாமன் மக்களுக்குள் மிகவும் வயது குறைந்தவர் - முத்துவின் வயதுதான் இருக்கும்.
Tullamarine விமானநிலைய வரவேற்பு மண்டபத்தில் மோகன் எங்களை நோக்கி வந்தபோது அவர் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது மறுக்கமுடியாத உண்மை என்பதுதான் எங்களுக்கு வந்த முதல் அபிப்பிராயம் - எங்கள் பாட்டாவிடமிருந்து எங்கள் எல்லோருக்கும் கிடைத்தது மாதிரியான கழுகின் மூக்கு, பாட்டாவிற்கு இருந்ததுமாதிரி மிரட்டும் தோற்றமுடைய அடர்த்தியான கண்புருவம். அவர்களுக்கு இருந்த ஒற்றுமை அவ்வளவுதான். மோகனுடைய பளபளக்கும் காப்பிநிறத் தோலும் பாட்டா பெருமையாக நினைக்கும் அவரது பால்நிறத் தோலும் ஒன்றுக்கொன்று எதிரானவை. பாட்டாவின் தோற்றத்திலே ஒரு கட்டுக்கோப்பான நளினம் இருந்தது, ஆனால் மோகனோ பட்டாசுவெடி மாதிரி – உற்சாகம் ததும்பி வழிந்தது.
“மச்சாள்!”, ஒரு மலர்ச்சியுடன் கூக்குரலிட்டான். “ நீங்களெல்லோரும் நான் கற்பனை செய்திருந்ததைவிட மிகவும் அழகானவர்கள். எப்போதும் அப்பா சொல்வார் தனது சகோதரிதான் இந்த உலகத்திலே மிகவும் அழகானவள் என்று - உங்களைப் பார்க்கும்போது அவர் மிகைப்படுத்திக் கூறவில்லை என்று தெரிகிறது.”
பாட்டாவின் வாரிசுவிடமிருந்து வந்த இந்த புகழ்ச்சி எங்களுக்கு இதமாக இருந்தது – உடனடியாக எங்களுக்கு அவரைப் பிடித்துக்கொண்டது.
“சொல்லுங்கள், யார் யாரென்று. வேண்டாம், சொல்லாதீர்கள்! என்னாலை ஊகிக்கமுடியுமென்று நான் பந்தயம் கட்டுவேன். நீங்கதான் சுபா, சரிதானே?” என்னை நோக்கிக் கை நீட்டினார்.
சிரித்தபடியே நான் அவரைத் திருத்தினேன், முத்து சரியானபடிதான் சொன்னாள் – இவரை நாங்கள் ஒதுக்கிவைக்கமுடியாது.
சென்ற வருடம் மோகன் முத்துவைச் சென்று சந்தித்துள்ளார். மெல்பேர்ண் க்கு குடிபெயரமாட்டேனென்று முத்து சொன்னது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தைக் கொடுத்துக் கொண்டேயிருக்கிறது. காவியா விட்டுச்சென்ற வெறுமையை நிரப்புவதற்காக முத்துவை குடிபெயரும்படி எவ்வளவோ கெஞ்சினோம். மிஞ்சிய எல்லோரும் ஒன்றாய் இருக்க ஆசைப்பட்டோம். யுத்தம் நடந்து கொண்டிருந்தபோது அம்மாவையும் அப்பாவையும் விட்டுப் பிரிய மறுத்துவிட்டாள். காவியாவின் மரணத்தினால் மனமுடைந்து போயிருந்த அவர்கள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியே போகும் அந்த ஆபத்தான பிரயாணத்தை மேற்கொள்ளத் தயாரில்லை.  
 
2006 ம் ஆண்டு கடற்புலிகளின் தளத்தை அழிப்பதற்காக ஆகாயப்படை தாக்குதலை மேற்கொண்டது. ஜெயா தான் புலிகளுடன் இணைவதற்கு முன் ஏவுகணைத் தாக்குதலிலிருந்து தப்புவதற்காக ஒரு பதுங்கு குழி கட்டியிருந்தாள். 
அம்மாவையும் முத்துவையும் கட்டாயப்படுத்தி அந்த பதுங்கு குழிக்குள் பத்திரமாக இருத்திவிட்டு, பக்கத்துவீட்டு வயதுபோன அயலவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யப்போனார் – ஆனால் அதிக தூரம் போகவில்லை. சில மீற்றர் தூரத்திலே பதுங்கு குழி வாசலிலிருந்து முத்து பார்த்துக் கொண்டிருக்கும்போது புகையும் தூசியும் கலந்த மேகத்துக்குள்ளே அப்பா திடீரென மறைந்துபோனதைக் கண்டாள்.
அவள் எங்களைக் கூப்பிட்டபோது அவளைத் தேற்றமுடியவில்லை, “ அக்கா, என்னால் அதைத் தடுக்க முடியவில்லை. ஒரு நிமிடம் அங்கே நின்றார், மறு நிமிடம் போய்விட்டார். நான் ஆகாயத்தை நிமிர்ந்து பார்த்தபோது ஒரு மோட்டார் குண்டு விழுவதைப் பார்த்தேன். அப்பாவை ஓடும்படி சொல்ல வாயைத் திறந்தேன், ஆனால் பிந்திவிட்டது. நான் அலறியபோது அப்பாவின் சிதைந்த உடம்பு நிலத்திலே விழுந்தது.”
 
அவருடைய இறுதிச் சடங்குகளுக்கு நாங்கள் ஒருவரும் போகக்கூடாதென்பதில் அம்மா உறுதியாக இருந்தா. மிகவும் ஆபத்தானது என்று அவ சொன்னா. சில நாட்களுக்குள்ளேயே இராணுவம் யாழ்ப்பாணத்தின் மேலுள்ள பிடியை இறுக்கிக்கொண்டு வருவதால் மக்கள் எல்லோரையும் வன்னிக்குப்போகுமாறு விடுதலைப்புலிகள் தூண்டினார்கள். பொது அறிவிப்புகள் மூலம் தங்களைப் பின்தொடர்பவர்களுக்குப் பாதுகாப்பளிப்பதாக உறுதியளித்தார்கள். அதிகமான மக்கள், இதற்குமுன் போக விருப்பமில்லாதிருந்த போதிலும், வேறு வழியில்லாததால் அலையெனச் சென்றனர்.
 
ஆனால் அம்மா போக மறுத்துவிட்டா. அம்மாவை விட்டுவிட்டுப் போவதற்கு முத்துவிற்கு விருப்பமில்லாதபோதிலும் அவளுக்கு  வேறுவழியில்லை – அவள் போகாவிட்டால் தான் இறந்து போய்விடுவேனென்ற தனது வழக்கமான ஆயுதத்தை அம்மா பாவித்தா. 
வேண்டாவெறுப்பாக, வல்வெட்டித்துறையிலிருந்து கடைசியாகப் புறப்பட்ட ஆட்களுடன் பாதுகாப்பைத் தேடி முத்து புறப்பட்டாள்.  
அம்மாவுடைய மனதிலே ஒரு சிறு நம்பிக்கை. முத்து வன்னிக்குப் போனதும் எப்படியாவது நாங்கள் அவளை மெல்பேர்ண் க்கு எடுத்துக்கொள்வோம் என்று. ஆனால் விதி வேறு திட்டங்கள் வைத்திருந்தது.
வன்னியில் தொடர்ந்து ஏற்பட்ட மோதல்களால் அவளுக்கு விசா எடுக்க முடியாமல் போய்விட்டது. 
மறுசீரமைக்கப்பட்ட படகுகளில் மனிதர்களைச் சரக்குகளாய் ஏற்றிக்கொண்டுபோகும் மிகவும் ஆபத்தான பிரயாணத்தை முத்து மேற்கோள்வதை எங்களில் யாருமே விரும்பவில்லை. 
வன்னியில் முத்து தீபன் என்பவரை சந்தித்தாள். சில வருடங்களுக்கு முன்னர் தீபன் தனது பெற்றோருடன் யாழ்ப்பாண குடாநாட்டு எல்லைக்கு அண்மையில் பாதுகாப்புக் கொடுக்கக்கூடியதான அடர்ந்த காட்டிற்குள் குடியேறியிருந்தார்.
இறுதியாக இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையில் நடந்த யுத்தம் ஒரு முடிவுக்கு வந்து முத்து வல்வெட்டித்துறைக்குத் திரும்பியபோது அம்மா இறந்து பல வருடங்களாகிவிட்டது.
வல்வெட்டித்துறையில் தங்கிவிட்ட சிலரின் நலம் பற்றி விசாரிப்பதற்காக வன்னியிலிருந்து மிகவும் ஆபத்தான பயணத்தை மேற்கொண்ட பக்கத்துவீட்டு ஆச்சியின் மகன் சுரேஸ் அப்பா துண்டு துண்டாய்ச் சிதறிய அதே இடத்தில் அம்மாவின் உயிரற்ற உடலைக் கண்டார். 
செய்தியைச் சொல்வதற்கு மகாவை அழைத்த சுரேஸ்,” இறக்கும்போது அம்மா மிகவும் மனமுடைந்து போயிருந்தார்”, என்று சொன்னார்.
முத்துவும் தீபனும் மணமுடித்தபோது எனது சகோதரிகளும் கணவன்மாரும் வல்வெட்டித்துறைக்குச் சென்றிருந்தனர், ஆனால் நான் போகவில்லை.
அந்த வீட்டிற்கு திரும்பப் போவதற்கு எனக்கு மனமில்லை. எனது சிறுபிராயத்திலே இருந்ததுமாதிரியான நல்ல இதமான , சிரிப்புக்கள் நிறைந்த அந்த வீடு இப்போதில்லை. அந்த வீட்டு வாசல் வழியே உள்ளே போவது, ஒரளவு ஆறிக்கொண்டுபோகும் காயத்தைத் திரும்பவும் திறந்து பார்ப்பதுபோலத்தான். 
தொலைபேசி வழியே விளங்கப்படுத்தினேன், “அன்பான முத்து, தீபனில் நீ உன்னுடைய ஆத்ம துணையைக் கண்டு பிடித்ததையிட்டு  எனக்கு மிகுந்த சந்தோஷம். நீங்கள் இருவரும் பேரின்பமுடன் வாழ்வீர்கள் என்பதை நான் அறிவேன். தயவுசெய்து எனது நிலையைப் புரிந்துகொள். நான் அந்த வீட்டிற்கு வரமுடியாது. அருவி வளர்ந்தபின் ஒருநாள் உன்னைப் பார்க்க வருவா.”
“அக்கா, எனக்குப் புரியுது. தீபனும் நானும் விரைவில் மெல்பேர்ண் வருவோம். அப்போது நீ எங்களை நேரில் ஆசீர்வாதம் செய்யலாம். அருவி எங்களிடம் ஒருநாள் வருவாள் என்று நம்புகிறோம். உனக்குத் தெரியும்தானே அம்மா இந்த வீட்டை உன்ரை பெயருக்குத்தான் எழுதியிருக்கிறா. ஆகவே நீ அல்லது அருவி வீட்டை என்ன செய்யப் போகிறீர்கள் என்று தீர்மானிக்கவேண்டும்”
முத்துவும் தீபனும் கல்யாணம் முடித்தவுடன் அவர்களை ஆஸ்திரேலியா குடியுரிமைக்கு விண்ணப்பிக்குமாறு சுபா தொல்லை கொடுத்தாள். ஹாட்லிக்கல்லூரியில் ஒன்றாக ஆசிரியர்களாக வேலை செய்து கொண்டிருந்த இருவருக்கும் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியே போக விருப்பமில்லாதபோதிலும் விசாவுக்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தனர்.
அவர்கள் செய்யவேண்டிய மருத்துவப் பரிசோதனையின்போது தீபனுக்கு காசநோய் மறைந்திருக்கிறதெனக் கண்டுபிடிக்கப்பட்டது. அது உயிருக்கு ஆபத்தில்லாதபோதிலும் விண்ணப்பத்தைத் தாமதித்தது.
காலப்போக்கில் முத்துவும் தீபனும் இலங்கையில் இருப்பதற்குத் தீர்மானித்தனர். இதற்கிடையில் அவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள் பிறந்தார்கள். முத்து தனது நிலையை உறுதியோடு அமைதியாகச் சொன்னாள்.
“அக்கா, நாங்கள் இங்கே சந்தோஷமாய் இருக்கிறோம். தீபனும் நானும் இந்த வயதிலே எங்கள் வாழ்க்கையைத் திரும்பவும் ஆரம்பிக்க விரும்பவில்லை. எங்களுடைய வேலை எங்களுக்குப் பிடித்துக்கொண்டது. தீபனுக்கு ஒரு பாடசாலையின் அதிபராக விரைவில் வரக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது. இங்கே அதிகமான இழப்புக்கு உள்ளாகி இருக்கும் சிறுவர்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த எங்களால் முடியும் என்று நினைக்கிறோம். பிள்ளைகள் வளர்ந்தபிறகு அவர்கள் வந்து உங்களுடன் மெல்பேர்ண் இல் இணைந்து கொள்ளக்கூடும்.”
அருவி பெரிதாக வளர்ந்ததும் முத்துவின் பெயரில் வீட்டை எழுதுவதென்று அப்போதுதான் தீர்மானித்தேன். அருவிக்கு அந்த வீட்டால் ஒரு பிரயோசனமும் இல்லை. அத்துடன் அம்மா அருமையாக நினைத்த அந்த வீட்டை விற்பதென்பது நினைத்துப் பார்க்கமுடியாது. நாங்கள் ஊரை விட்டு வந்தபின்னர் எங்கள் பெற்றோரைக் கவனமாகப் பார்த்ததோடு  வீட்டையும் கவனித்துவந்த முத்துவிற்குக் கொடுப்பதுதான் வீட்டை குடும்பத்திற்குள் வைத்திருக்கச் சரியான வழி.  
ஆனால் எங்களுக்கு இப்போது ஒரு பிரச்சனை. எங்களுடைய மாமன் மகன் மோகன் அந்த வீடு தனக்கு வேணுமென்கிறார். போனவருடம் மலேசியாவிலிருந்து ஊருக்குப்போய் அந்த வீட்டை தனக்கு விற்கும்படி முத்துவை வற்புறுத்தினார்.
“மோகன், இந்த வீடு என்னுடைய பேரிலே இல்லை”, சிரித்தபடியே முத்து சொன்னாள், “ அத்துடன் இது அருமை அம்மாவிற்குச் சொந்தமானதால் நாங்கள் இதை விக்கப்போவதில்லை”
“நானும் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதை நீ மறந்துவிட்டாய். தனது சகோதரனின் மகன் திரும்ப வீட்டிற்கு வந்துவிட்டான் என்பதில் மாமிக்குச் சந்தோஷமாயிருக்கும்”
முத்துவால் நம்பமுடியவில்லை. “ என்னத்திற்காக மலேசியாவை விட்டு நீங்கள் இங்கே வந்து வாழவேண்டும்?”
“ உண்மையில் நான் இங்கே தொடர்ந்து இருக்கப் போவதில்லை. இது ஒரு விடுமுறைத்தளமாய் இருக்கும்”
“அதுதான் காரணமென்றால் நீங்கள் எப்போதும் தாராளமாக இங்கே வந்து எங்களுடன் தங்கலாம். போதிய அளவு இடம் இங்கே இருக்கிறது.”
“முத்து, ஒரு பழுது பார்க்கப்படவேண்டிய ஒரு வீட்டிலே என்னுடைய அழகான மச்சாள் வசிப்பதைப் பார்க்க எனக்கு ரொம்பக் கவலையாயிருக்கிறது. எனக்கு விற்காவிட்டாலும் பரவாயில்லை; பாட்டாவிற்காக இந்த வீட்டைப் புனரமைத்து பழைய மகிமைக்குக் கொண்டுவர என்னை அனுமதிக்கவேண்டும் ” 
“நான் திரும்பத்திரும்ப உங்களிடம் சொல்கிறேன். இதை விற்பதற்கோ திருத்துவதற்கோ இது என்னுடைய வீடு இல்லை, மோகன். திருத்துவதற்கான செலவைத் தாங்கள் தருகிறோமென்று எனது சகோதரிகள் சொன்னபோதெல்லாம் அதை வேண்டாம் என்று சொல்லியுள்ளோம். நாங்கள் இங்கே இருக்க வந்தபின்னர் வீட்டிற்கு நாங்கள் செய்த திருத்தங்களையிட்டு தீபனுக்கும் எனக்கும் திருப்தி. வீட்டைப்பற்றி என்ன  செய்யலாமென்று அருவி வந்தபின்னர் தீர்மானிக்கலாம்”
முத்துவின் பதிலில் ஏமாற்றமடைந்த மோகன் எங்களில் மற்றவர்களை, முக்கியமாக என்னைச் சந்திக்க முடிவெடுத்தார். அவருக்கு சிட்னியில் ஒரு வணிகக் கூட்டம் இருந்தது. திரும்ப கோலாலும்பூர் போவதற்கு முன்னாடி மெல்பேர்ண் வருகிறார்.
அவருடைய குடும்பத்தைப்பற்றிக் கேட்டபோது அதற்கு அலட்சியமாகப் பதிலழித்தார்,” என்னுடைய சகோதரி ஒரு மலாய்க்காரனைக் கலியாணம் முடித்து இஸ்லாமிய மதத்திற்கு மாறிவிட்டாள். அவளுடைய புருசனுக்கு என்னுடைய வெற்றிமேல் பொறாமையென்றபடியால் அவள் இப்போது என்னுடன் கதைப்பதில்லை.  என்னுடைய முதலாவது மனைவி கலியாணம் முடிஞ்சு ஒரு மாதத்திற்குள்ளேயே என்னைவிட்டுப் போய்விட்டாள். என்னுடைய இரண்டாவது மனைவி பங்சாரில் உள்ள எனது வீட்டை எடுத்தாள், எனது வங்கிக்கணக்கை வழித்துவிட்டாள். இறுதியாக எனது  குழந்தையாகிய துளசி ஐயும் தன்னுடன் எடுத்துச் சென்றுவிட்டாள்.”
அந்த அவதூறுக் கதையின் விபரங்களைக் கேட்க ஆவலாயிருந்தபோதிலும் எமது அனுதாபமான முகபாவத்தினால் அதை மறைத்தோம். 
அவர் சிரித்தார்,” என்னுடைய அழகான மச்சாள்மாரே! அந்தமாதிரிச் சோகமாயிருக்காதையுங்கோ. அவர்கள் இல்லாதது எனக்கு நல்லமாதிரி. எனது அன்பான துளசியைத்தான் நான் பிரிந்திருக்கிறேன். ஆனால் அவள் கொஞ்சம் வயது வந்தவுடன் என்னைத் தேடிவருவாள். அத்துடன் இப்போது நீங்கள் எல்லோரும் எனக்கு இருக்கிறீர்கள், ஆகவே யாருக்கு அந்த பேராசை பிடித்த பெண்கள் வேண்டும்?”
பிள்ளைகளுடனும் நல்ல சகஜமாகப் பழகினார். அருவி, ஆனந்த், குரு மற்றும் அஸ்வின் எல்லோரையும் கட்டித்தழுவி தான் அவர்களுக்கு மாமனாக இருப்பதில் பெரும் சந்தோஷமடைவதாகக் சொல்லிக் குதித்தார்.
அருவி என்னைத் தனியே அழைத்துச்சென்று,” அம்மா, வீட்டை வாங்குவதில் மிகவும் தீவிரமாக இருக்கிறார் போலுள்ளது. தன்னுடைய தகப்பனாரின் யாழ்ப்பாண வாழ்க்கைக்கு இது ஒன்றுதான் ஒரு தொடர்பை ஏற்படுத்தும் என்று நினைக்கிறார் போலுள்ளது. ஏன் நாங்கள் அதை விற்கக்கூடாது? மேலும் அவர் சொல்கின்ற $150000 என்பது ஒரு தகுந்த விலை என்று முத்துச் சித்தி சொல்கிறா. இந்தக் காசை வைத்து நாங்கள் அவவிற்கு ஒரு புதுவீடு கட்டிக் கொடுக்கலாம். அத்தோடு வீடும் குடும்பத்துக்குள்ளேயே இருக்கும். என்ன இருந்தாலும் மகாலிங்கம் பாட்டாதான் அந்த வீட்டைக் கட்டினார், இவருக்கும் எங்களைப்போல அவர்தான் பாட்டனார்.”   
 
நான் சொன்னேன்,” இந்த வீட்டை பாட்டா அம்மாவிற்காகக் கட்டினார் என்பதை நீ மற்ந்துவிட்டாய். அம்மா அப்பாவைத் திருமணம் செய்ததால் மனமுடைந்த அவர் தனது சொத்திலிருந்தும் அதிகமாகக் கொடுக்கவில்லை, அன்பையும் காட்டவில்லை. இந்த வீட்டையும் ஐம்பது தங்க நாணயங்களையும் தவிர அவவிற்குக் கிடைக்கவில்லை. எஞ்சியதெல்லாம் அவருடைய மகன்களுக்குத்தான் போனது.”
நான் என்னுடைய பாட்டாவைப்பற்றி யோசித்தேன். அம்மாவின் துரோகத்தால் அவரடைந்த ஏமாற்றம் எப்படி அவரை எங்களுக்கு அந்நியன் ஆக்கிவிட்டது?
“முத்து தனது குடும்பத்தோடு அங்கு வசிப்பதையிட்டு எனக்கு மிகுந்த சந்தோஷம். அம்மா என் பேரில் வீட்டை விட்டுவிட்டுப் போனதன் காரணம் உனக்கும் எனக்கும் மற்றவர்களைவிட அதிகமான ஆதரவு வேண்டுமென்றுதான்.”
நான் உணர்வதற்கு முன்னேயே வார்த்தைகள் வெளியே வந்துவிட்டன.
அருவியின் கண்களில் பார்த்தேன் – என்னை ஆறுதல்படுத்த  வேண்டுமென்ற ஆசையையும், தனக்கு இல்லாத தகப்பனுக்கு நான் பொறுப்பாளி இல்லையென்று உறுதிப் படுத்துவதையும் அவள் கண்களிலே பார்த்தேன். ஆனால் எனக்கு ஏற்பட்ட காயம் இன்னும் பசுமையாக இருப்பதை உணர்ந்த அவள் அதை மீண்டும் திறக்க விரும்பாதபடியால் அமைதியாக இருந்தாள். 
இறுதியாக மோகன் தனக்குச் சொல்லப்பட்ட செய்தியைப் புரிந்துகொண்டார்.
அவர் பலத்த ஏமாற்றமடைந்தார் என்பது எங்களுக்குத் தெரிந்தது. ஆனால், ஒருவித கசப்புமின்றி அவர் வெளியே வந்தவிதம் எங்களை ஆச்சரியப்படவைத்தது.
அவர் தோளைக் குலுக்கி ஒரு சிரிப்புச் சிரித்தார்.
“நீங்கள் பெண்கள் சரியான பிடிவாதக்காரர். சரி, நான் என்ன சொல்லலாம்? அது குடும்பத்திலை ஓடுது. இங்கே சுற்றிக்கொண்டிருப்பதில் ஒரு பிரயோசனமில்லை என்று நினைக்கிறேன். இன்னும் சில நாட்களில் நான் புறப்படுகிறேன்.”
உண்மையில் அதைக்கேட்க எங்களுக்கு வருத்தமாயிருந்தது. ஒவ்வொரு நாளும் அவர் எங்களுடன் இருந்தபோது பல வருடங்களாக மறைந்திருந்த எங்கள் குடும்பத்துக்கிளை பற்றிய விபரங்கள் கேட்டறிந்தோம். பாட்டாவைப் பற்றியும் மாமன்மார் பற்றியும் அவர் சிரிப்புடனும் பாசத்துடனும் சொன்ன கதைகள் அம்மாவை நினைக்கவைத்தன.
“உங்களை ஒரு இரவு விருந்துக்கு அழைத்துப்போவதற்கு என்னை அனுமதிக்கவும்”, அவர் சொன்னார். “நான் இங்கே தங்கி இருந்தபோது என்னை நன்றாகக் கவனித்தீர்கள். அதற்கு நான் நன்றி சொல்வது நியாயம்தான்”
சரியென்பதுமாதிரி நாங்கள் தலையாட்டினோம், அவர் தொடர்ந்தார்,” Villas என்றழைக்கப்படுகிற ஒரு மலேசியன் உணவகம் நகரத்திற்குள் இருப்பதாக எனது நண்பன் சொன்னான். தமிழ் உணவிற்கு இது ஒரு சிறந்த இடம் என்று அவன் சொல்கிறான்.  பாரம்பரிய உணவுகள், நல்ல பானங்கள். அடுத்த இரண்டு நாட்களும் எனக்கு கூட்டங்கள் உண்டு. செவ்வாய் மாலை எப்படி உங்களுக்கு?”
“எனக்கும் அங்கே போவதற்கு மிக விருப்பமாயுள்ளது. என்னுடைய நோயாளிகள் பலர் அந்த இடத்தின் உணவைப்பற்றியும் சேவையைப்பற்றியும் நன்றாகவே கூறியுள்ளனர். செவ்வாய் இரவு நாங்கள் அங்கே போய்ச் சாப்பிடுவதற்கு எங்களைப் பதியும்படி நான் Emily க்குச் சொல்கிறேன்”, அருவி சொன்னாள்.
 
“என்ன அருமையான இடம்,” உணவகத்திற்குள் காலடி எடுத்து வைத்தவுடன் மோகன் சொன்னார். “மலேசியாவில் இருப்பதுமாதிரி உணருகிறேன்.”
 
நாங்கள் ஒருவரும் மலேசியா போயிருக்காதபோதிலும் ஒப்புக்குத் தலையாட்டினோம். இளையராஜாவின் இசை பின்புலத்தில் ஒலித்துக்கொண்டிருக்க, கூரையில் இருந்து தொங்கிக்கொண்டிருந்த அலங்கரிக்கப்பட்ட மாலைகள், சுவரிலே தமிழில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள், ரொட்டி மாவை ஒருவித சிரமமுமின்றி மேலே எறிந்து அதற்கு உருவம் கொடுக்க முயன்று கொண்டிருந்த சமையல்காரர் அனைத்தும் ஒரு வித்தியாசமான திருப்தியைக் கொடுத்தது.
“இன்று பார்த்து ஜெயா பெரியம்மாவிற்குக் கோவிட் வந்ததென்று நம்பமுடியாமலுள்ளது”, நான் சொன்னேன். “ எப்போதும் சரியானதையே செய்வதில் உறுதியாயிருப்பவர். ஆனால் அம்மாவும் நானும் நேற்றிரவுதான் அவவைப்பார்த்தோம். அப்போது நல்லாகத்தான் இருந்தா. சாமத்திலை இது பெரிதாகியிருக்கவேண்டும். பரவாயில்லை. அவ சுகமானபின் நாங்கள் பிறிதொரு நாள் வரலாம்”.
பணிப்பெண் உணவுப்பட்டியலை எங்களிடம் தந்தபோது ஒரு நடுத்தரவயது மனிதன் மிகுந்த கண்ணியத்துடன் நடந்து வருவதை அவதானித்தேன். அவர் சுற்றிவரப் பார்த்து புன்னகையுடன் அவரை வரவேற்ற பணிப்பெண்ணுடன் ஏதோ பேசிவிட்டு அவள் கைகாட்டிய மேசையை நோக்கி நடந்தார். அவருடைய ஏதோ ஒன்று என்னுடைய கவனத்தை ஈர்த்தது. என்னுடைய கண்களில் உள்ள ஆர்வத்தை அவர் பார்க்காமல் இருப்பதற்காக எனது கண்களை  வேறு பக்கம் திருப்பினேன். ஆனாலும் கொஞ்சம் பிந்திவிட்டேன் போலுள்ளது – அவருடைய கண்கள் என்னுடையதைச் சந்தித்து ஒரு கண நேரம் நீடித்தது.
 
என்னை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியவாறு, அருவி கூச்சலிட்டாள்,” திரு அபேய்கோன், உங்களை இங்கே சந்திப்பது அதிசயமாயுள்ளது. இப்போது நல்ல சுகமாயிருப்பீர்கள் என்று நம்புகிறேன்”
“டாக்டர் அருவி”, வார்த்தைகள் அந்தநேரம் தொலைந்துவிட்டது போலத் தடுமாற்றத்துடன் கேட்டார்.
“,இது யார்? உன்னுடைய நண்பரா, அருவி” மோகன் கேட்டார்.
“இல்லையில்லை, இவர் எனது நோயாளி”, என்றாள் அருவி அவசரஅவசரமாக.
இப்போது அந்த மனிதன் தன்னை ஆசுவாசுப்படுத்திக்கொண்டார்,” ஓம், நான் ஒரு நோயாளி, புதிதாக வந்தவர். டாக்டர் அருவியை ஒருமுறைதான் பார்த்துள்ளேன்”
மோகனுடைய ஊக்கமூட்டும் புன்னகையைப் பார்த்துவிட்டுத் தொடர்ந்தார்,” நான் இலங்கையிலிருந்து வந்திருக்கிறேன். என்னுடைய சகோதரியும் குடும்பமும் இன்று சரியான வேலையாயிருக்கிறார்கள். ஆகவே நான் தனிமையில் நகரத்தைச் சுற்றிப்பார்க்க வெளிக்கிட்டேன். இந்த இடத்தைக் கடந்து போகும்போது நல்ல தோசை வாசனை வந்தது, சாப்பிட இடம் கிடைக்குமா என்று கேட்கவந்தேன்”
“ஓ! நீங்கள் தனியாகவா? அப்படியென்றால் எங்களோடு சேரணும்”, மோகன் உற்சாகமாகச் சொன்னார். “ இங்கே ஒரு வெற்றிடம் இருக்கிறது. எனது மச்சாள் ஜெயாவிற்கு இன்று சுகமில்லை. அவவுடைய இடம் காலியாக உள்ளது”
அவர் தயக்கத்துடன் ஒரு எதிர்பார்ப்போடு அருவியைப் பார்த்தார். எரிச்சலுடன் மோகனைப் பார்த்த அருவி தன்னை ஒருவாறு சாந்தப்படுத்தினாள். அவள் என்னைக் கடைக்கண்ணால் பார்த்து, அதன்பின் சுற்றிவர இருந்த எல்லோரையும்   தான் செய்யப்போவதையிட்டு மன்னிப்புக் கேட்பதுமாதிரி பார்த்தாள்.  
இறுதியாக அவள் சொன்னாள்,” திரு அபேய்கோன், தயவுசெய்து  எங்களோடு சேருங்கள். நாங்கள் ஒரு கலாட்டா குடும்பம். எங்களுடைய இரைச்சலை நீங்கள் பொருட்படுத்தாவிடில் உங்களுடைய சகவாசத்தையிட்டு எங்களுக்குச் சந்தோஷம்.”
    
ஒரு சிறு  புன்முறுவலுடன் அவர் சொன்னார்,” தயவுசெய்து என்னை நல்லக என்று கூப்பிடவும்”
அருவிக்கும் மோகனுக்கும் நடுவில் அமர்ந்த நல்லகவைப் பார்க்கிறேன். அவருடைய பார்வை நிலையாக இருந்தபோதிலும் முகம் ஒருவித சலனத்தையும் காட்டவில்லை. ஆனால் அவருடைய அமைதிதான் என்னை ஆர்வத்துடன் பார்க்கவைத்தது - பலகாலம் தேர்ச்சி பெற்றதால் வரும் அமைதி. என்னுடைய விருப்பத்திற்கு மாறாக அவருடைய நடத்தை எனது கண்களை ஈர்த்தது.
நான் அவரைக் கூர்ந்து அவதானித்ததை அவர் உணர்ந்திருக்கவேண்டும். இலேசாக என்பக்கம் பார்த்துவிட்டு மேசையில் உள்ள மற்றவர்களை நோட்டம் விட்டார். அங்கே பூரண அமைதி நிலவியது. ஆனால் எமது குடும்பத்திற்குள் சிங்களவர்களால் ஏற்பட்ட அமைதியின்மையை அறியாத மோகன் தனது எளிதான வசீகரத்தால் அந்த இடத்திற்கு கலகலப்பூட்டினார். விரைவில் நங்கள் எல்லோரும் அவர் கூறிய கதைகளைக்கேட்டு, அவற்றில் உண்மை அதிகம் இல்லையென்று தெரிந்தபோதிலும், எல்லோரும் சிரிப்பில் மூழ்கினோம்.
 
“நான் உயிரோடு இருப்பதற்கு பெரிய அதிஸ்டம் செய்திருக்கவேணும். நான் உங்கள் முன்னால் இப்ப இருப்பதே அதிசயம்தான்”
அவருடைய சிறந்த விசிறியான அஸ்வின் பரவசத்துடன் கேட்டான்,” ஓஓ. என்ன நடந்தது மோகன் மாமா?”
பிரமாண்டமுறையில் மோகன் ஆரம்பித்தார்,” டெலொக் இந்தான் என்னுமிடத்தில் இருந்த என்னுடைய ரப்பர் தோட்டத்தைப் பார்க்கச் சென்றிருந்தேன். கோலாலம்பூருக்கு திரும்பிப் பயணிப்பதற்கு நேரமானதால் அங்கிருந்த சிறிய   ஓலைக்குடிசையில் தங்கலாமென்று அதற்குள் காலடி எடுத்து வைத்தபோது ஒரு ராஜநாகம் என்னைக் கொத்துவதற்குத் தயாராக நிற்பதைக்கண்டேன்.”
“ஓடுங்கள் ஐயா, ஓடுங்கள்!”, என்னுடைய வேலையாள் உசைன் போல்ற் மாதிரி ஓட்டம் பிடித்தான்.
நாகப்பாம்பு சீறிப்பாய்ந்து நேராக என்னை நோக்கிவந்தது.
 
நானும் ஓடினேன் தோட்டத்தினூடாக - என்னுடைய உயிரைக் கையில் பிடித்துகொண்டு இலைகள் சலசலக்க மரக்கிளைகள் ஒடிந்துவிழ நிற்காமலேயே ஓடினேன்.
“ஐயா, இதுதான் போனவருடம் நீங்கள் சாகக்கொன்ற ஆண்நாகத்தின் சோடி” என்னுடைய வேலையாள் அலறினான். “பழி வாங்குவதற்கு அது வரும் என்று கிராமத்தவர்கள் கதைத்தார்கள்”  
மோகன் தனது துடையில் ஒரு தட்டுத்தட்டினார்,” உன்ரை சம்பளத்தை நான் வெட்டமுதல் வாயைப் பொத்தடா என்று அந்த மடையனுக்குச் சொன்னேன்.”
அவர் முகத்தில் திருப்தி தெரிந்தது,”இறுதியாக எனது காரை  அடைந்ததும் கார்க்கதவை படீரெனச்சாத்தி, இறுகப்பூட்டி கோலாலம்பூரை வேகமாகச் சென்றடைந்தேன். ஒருமுறைகூட நிற்பாட்டவில்லை- மூச்சு விடுவதற்காகவும் இல்லை.”
“அதன்பிறகு என்ன நடந்தது, மோகன் மாமா”, பையன்கள் கூட்டாகக் குரலெழுப்பினார்கள்.
“நான் செய்த முதல் காரியம் ஒரு தங்கத்தால் ஆன பாம்பு மோதிரம் ஒன்றை வாங்கியதுதான். அது என்னைப் பாதுகாக்கும் என்று எனது சாத்திரியார் சொன்னார்- நான் அதை இப்போதும் அணிந்துள்ளேன்”
தனது வலது கை நடு விரலில் பாம்பு வடிவில் வளைந்து வளைந்திருந்த மோதிரத்தை நாங்கள் மெச்ச வேண்டுமென்பதற்காக எங்கள் முன் நீட்டினார். மிகுந்த பெருமையுடன் எங்களுக்கு முன்னே அவர் தனது கைகளை ஆட்டியபோது, பாம்பின் கண்களில் பதித்திருந்த மாணிக்கக் கற்கள் அச்சுறுத்தும் வகையில் மின்னின.
“இது என்ன விலை போகுமென்று தெரியுமா?” கேட்டுவிட்டு பதிலுகுக் காத்திராமலே. ” தங்கத்தின் விலை இப்போது மிகவும் அபத்தமானது. அந்தக் கோமாளி டிரம்பும் அவன் வரிகளும் தங்கம் வாங்குவதென்பதை கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக ஆக்கிவிட்டது.” 
தேவா சொன்னார்,” டிரம்பையும் அவன் வரிகளைப்பற்றியும் நீங்கள் அதிகம் கவலைப்படத் தேவையில்லை. அவரை  TACO Trump என்று பலரும் அழைப்பது தெரியும்தானே.”
எங்களுடைய குழப்பமான முகங்களைக் கண்டதும் அவர் விளங்கப்படுத்தினார்,” Trump Always Chickens out” ( டிரம்ப் எப்போதும் பயத்தில் பின்வாங்கிவிடுவார் )
நாங்கள் பலமாகச் சிரித்தோம். நல்லக இறுக்கம் இல்லாமல் இளைப்பாறு நிலையில் இருப்பதைப் பார்த்தேன். குடும்பத்தின் சிரிப்பு, அரவணைப்பு ஆகியன அவரையும் தொற்றிக்கொண்டு அவரது முந்திய இறுகிய பிடியைத் தளர்த்தியது.
இதற்கிடையில், தங்கத்தைப்பற்றிய மோகனின் கதை இன்னும் முடியவில்லை. ஒரு யோசனையுடன் மகாவைப் பார்த்துக் கேட்டார், “ உங்களது தாயார் கல்யாணம் முடித்தபோது எங்கடை பாட்டன் அவவிற்கு ஏகப்பட்ட தங்கத்தைக் கொடுத்தார் என்று கேள்விப்பட்டேன். குடும்பத்திலே நீதான் மூத்தவள்  என்றபடியால் எல்லாம் உன்னிடம் இருக்கிறதா?”
மகாவின் முகத்திலே ஆச்சரியம் தெரிந்தது,” இல்லை, நாங்கள் கல்யாணம் முடிப்பதற்குப் பல காலம் முந்தியே அதிகமான தங்கம் விலைப்பட்டுப்போச்சு. எங்கள் எல்லோருக்கும் ஒவ்வொரு துண்டு அம்மா தந்தா. நான் எனக்காக ஒரு ஜோடி சிமிக்கி செய்தேன்- முக்கியமான நிகழ்ச்சிகளுக்குப் போகும்போது அவற்றை நான் அணிந்துசெல்வேன்” 
 
“உனக்கு ஏதாவதொன்றாவது கிடைத்தது, மகா. எனக்கு எங்களுடைய பாட்டாவிடமிருந்து கொஞ்சம் தங்கம்கூடக் கிடைக்கவில்லை. உண்மையில் அவருடைய சொத்தில் இருந்து ஒரு சதமும் கிடைக்கவில்லை”
 மோகனுடைய வார்த்தைகள் படீரென வந்தபோது அவருடைய முகம் ஒரு கணநேரம் வழக்கத்திற்கு மாறான கசப்பைக் காட்டியது. இவ்வளவு காலமும் அவர் புகழ்ந்து பேசிய பாட்டாவைப்பற்றி இப்போது குறைசொல்லிப் பேசியது எங்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்ததினால் நாங்கள் குழப்பத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம்.
எங்களுடைய மனோபாவத்தை உணர்ந்துகொண்ட மோகன் உடனடியாக தனது பழைய நிலைக்குத் திரும்பிவந்தார்.
“நான் சும்மா பகிடிக்குச் சொன்னேன். பாட்டாவின் சொத்து எனக்குத் தேவையில்லை. அத்தோடு நான் ஒரு ஜிமிக்கியை அணியமுடியாது! பையன்களா! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஜிமிக்கிகள் எனது கழுத்துவரை தொங்கிக் கொண்டிருப்பதுமாதிரி உங்களால் கற்பனை செய்து பார்க்கமுடியுமா?”
ஒரு பரதநாட்டிய ஆட்டக்காரர்போல தனது கைகளை மேலும் கீழும் ஆட்டி ஒரு நாடகமே நடத்திய அவரைப் பார்த்து பையன்கள் எல்லோரும் சிரிப்புடன் கூச்சலிட்டனர். 
திரும்பவும் எல்லோரும் பழையநிலைக்குத் திரும்பியதையிட்டுத் திருப்தியடைந்த மோகன் சுபாவையும் என்னையும் பார்த்து, ”இரண்டு பேரில் ஒருவருக்கு மாமியின் நகைகள் கிடைத்ததா?” 
சுபா புன்னகைத்தபடி தனது கழுத்தில் இருந்த நேர்த்தியான தங்கச் சங்கிலியைத் தொட்டாள் – மாங்காய் வடிவமுள்ள அந்த சங்கிலி ஜொலிப்புடன் மின்னியது.
நான் என்னுடைய மணிக்கட்டை நீட்டினேன் – அவை ஒரு மன்மையான ஒலியை எழுப்பின.
“இந்தக்காப்புகளை அம்மா ஒருபோதும் தனது கைகளை விட்டுக் கழட்டியதில்லை, நான் இந்தியாவிற்குப் புறப்படும் நாள்வரை.  அம்மாவை அந்தப்பக்கம் போங்கள் என்று படகோட்டி சத்தமிட்டுக் கத்தியபோதும் அம்மா என்னைக் கட்டிப்பிடித்தபடியே இருந்தா. இறுதியில் என்னை விட்டா, ஆனால் அதிக தூரம் போகவில்லை. திரும்ப ஓடிவந்து தன்னுடைய மணிக்கட்டிலிருந்து இந்தக் காப்புகளைக் கஸ்டப்பட்டுக் கழட்டி எனது கைகளில் போட்டுவிட்டாள். அதுதான் அவவை நான் கடைசியாகப் பார்த்த நேரம்”
வார்த்தைகள் எனது வாயைவிட்டு வெளியேவந்த அந்தக் கணத்திலேயே அந்த இடத்திலே அதுபற்றிக் கதைத்தது தப்பு என்று உணர்ந்தேன். எப்போதெல்லாம் அந்த இரவைப்பற்றிக் கதைத்தாலும் அது என் சகோதரிகளைக் கவலையில் ஆழ்த்திவிடும். நாங்கள் மெல்பேர்ண் க்கு வந்ததின் காரணத்தை ஓரளவே அறிந்த மோகன் பதட்டமாகச் சிரித்தார். நல்லகா திடுக்கிட்டார்.
அவர் ஒரு ஆழ்ந்த மூச்செடுத்துவிட்டு மோகன் பேசுவுதற்கு முன்பாகவே அமைதியாகச் சொன்னார், “ இவை மிகுந்த அழகானவை. எனது அம்மாவின் ஞாபகமாக எதையாவது ஒன்றை அணிவதற்கு ஆசைப்படுகிறேன். அவள் இறந்தபோது நான் அருகிலேயே இல்லை”
 
 
 
அத்தியாயம் 11- என்னுள்ளேயுள்ள   சிறந்த பகுதி
அருவி
27 மே 2025
மெல்பேர்ண்
 
அன்றிரவு வில்லாஸில் இருந்து வீடு திரும்பியதும் நான் என்னுடைய முடிவை அம்மாவிற்குச் சொன்னேன்.
“ Warrandyte இல் உள்ள வீட்டிற்கு நாளைக்கு நான் விண்ணப்பிக்கப் போவதாய் முடிவு செய்துவிட்டேன். வீட்டுச் சொந்தக்காரர் உடனடியாக விற்க விரும்புகிறாரென்று எனது முகவர் சொல்கிறார். ஆகவே அவர் நான் சொல்லும் விலையை ஏற்றுக்கொள்வார் என்று நினைக்கிறேன். முப்பது நாளில் வாங்குவதாகச் சொல்லப்போகிறேன்”
தான் இருக்குமிடத்திலேயே இருக்கப்போகிறேன் என்ற தனது நிலைப்பாட்டைச் சொல்வதற்காக அம்மா என்னை நிமிர்ந்து பார்த்தா.
“கவலைப்படாதீர்கள், அம்மா. என்னுடன் நீங்கள் வரவேண்டுமென்று உங்களைக் கட்டாயப் படுத்தமாட்டேன். நீங்கள் விரும்பினால் இங்கேயே தங்கலாம், ஆனால் எனது வீட்டிலே உங்களுக்கென்று ஒரு அறை இருக்கும்.”
ஓரு மென்மையான புன்னகை அவவின் முகத்திலே தவழ்ந்தது. 
“குஞ்சு, உன்னையிட்டு எனக்கு மிகுந்த பெருமிதமாயிருக்குது.- என்னுடைய சின்னப்பொண்ணு, இப்போது நல்லாக வளர்ந்து தன்னுடைய முதல் வீட்டை வாங்கப்போகிறா”
“அம்மா, கன நாளாக இதை உங்களுக்குச் சொல்லவேணுமென்று நினைக்கிறேன். குணா மாமாவிற்காக நீங்கள் வேலை செய்வதை நிறுத்தும் நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். அவர் உங்களை நன்றாகக் கவனித்தது எனக்குத் தெரியும்- என்னையும் நான் சிறுமியாக இருந்த நாட்களில் இருந்து நன்றாகப் பார்த்துள்ளார். நீங்கள் அப்போது இந்த வேலையை எடுத்ததே என்னைக் கவனிப்பதற்காகவும் ஒருவரிலும் தங்கியிருக்கக் கூடாதென்பதற்காகவும். ஆனால் இப்போது நிலைமை வித்தியாசமானது- நான் உங்களைப் பார்த்துக்கொள்வேன். நீங்கள் படிக்கவேண்டும், அம்மா. படிக்கும்போது நீங்கள் எவ்வளவு கெட்டிக்காரர் என்று உங்கடை சகோதரிகள்  எப்போதும் புழுகிக்கொண்டே இருப்பார்கள்.”
அவ தனது தலையை அழுத்தமாக ஆட்டியபோது, இவ எந்தளவு பிடிவாதக்காரி என்று எரிச்சலடைந்தேன். 
“அம்மா, ஒரு சமையல் அறையில் உதவியாளாக இருப்பதையிட்டு உனக்கு அவமானமில்லையென்று நடிக்காதீர்கள்”
அவ புன்னகைத்தா, “ குஞ்சு, நீ சொல்வதில் தப்பில்லை. ஒரு காலத்தில் அவமானமாயிருந்தது- ஆனால் என்னுடைய வேலைக்காக இல்லை. எனக்கு என்ன நடந்தது என்பதையிட்டு வெட்கப்பட்டேன், நான் என்ன செய்தேனென்று”
“உங்களுக்கு நடந்தது உங்கள் குற்றமல்ல,அம்மா!. நீங்கள் அவமானப்பட ஒரு காரணமுமில்லை. உங்களுடைய மன அதிர்ச்சியைத் தொடர்ந்தும் உங்களுக்கு ஞாபகப்படுத்திக் கொண்டிருந்த என்னைத் தூக்கியெறியாமல் இருந்ததை என்னால் நம்பமுடியவில்லை”
நான் கண்ணிமைத்தால் எனது கன்னம் வழியே கண்ணீர் வழிந்தோடும் என்பது தெரிந்தது.  
“அருவி, என்னுடைய வாழ்க்கையை உனக்காகத் தியாகம் பண்ணினேன் என்பதை ஒருகாலும் நம்பாதே. நீ எனக்குப் பாரமில்லை- என்னைக் காப்பாற்றிய அன்புச்செல்வம், என்னுள்ளேயுள்ள சிறந்த பகுதி. இதற்கு முன் நான் சொன்னதில்லை, ஆனால் இதுதான் உண்மை; நீ என்னைக் காப்பாற்றினாய். நீ இல்லாமல் இருந்தால் அவமானத்தால் எப்போதோ இறந்திருப்பேன்”
“அம்மா, அவமானத்தைப்பற்றி ஏன் எந்நேரமும் கதைத்துக் கொண்டிருக்கிறாய்? அவமானம் உனக்கல்ல- உன்னைக் கெடுத்த அந்தச் சண்டாளனைத்தான் சேரும்”
 
அம்மா ஏதோ சொல்வதற்கு வாயைத் திறந்தா, தலையை மாத்திரம் ஆட்டினா. அவவுடைய பார்வை என்மேல் பதிந்தபோது அவவுடைய உதடுகள் வார்த்தைகளைத் தேடி ஏதோ ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தைச் சொல்லலாம் என்பதுமாதிரி அவவின் கண்களிலே தெரிந்தது. 
“என்னம்மா, சொல்லுங்கள்”
“ நான்…… என்னையே நம்பமுடியவில்லை – உன்னை ஒரு சாபமாக நினைத்து உன்னை அழித்துவிட ஒரு காலத்தில் நினைத்தேன்”
ஒரு நேரத்தில் என்னை அழித்துவிடவேணுமென்று தீவிரமாக ஆசைப்பட்டதைப்பற்றி முதன்முறையாக என்னோடு கதைத்தா.
என்மேல் அவ வைத்திருந்த அன்பு பற்றி நான் ஒருபோதும் சந்தேகப்பட்டதில்லை. அவவிற்கு நடந்த கோரமான விபத்தின்  நிழலைக்கூட அகற்றிவிடவேண்டுமென்று நினைத்த இளமைக்கால அவவையும் அம்மாச்சியையும் நான் ஒருகாலமும்  குறை சொன்னதில்லை. என்னுடைய நடுங்குகிற உதடுகளால் சிரிக்க முயன்றேன் – அவவின் மீது எனக்குக் கோபமில்லை, புரிந்துணர்வே இருக்கிறது என்பதைத் தெரியப்படுத்த விரும்பினேன். 
அவவின் கண்கள் என் கண்களைச் சந்தித்தபோது அவவின் குரல் தடுமாறியது.
“ நான் கடவுள்களுக்கு நன்றி கூறுகிறேன் –  நீ வளர்வதை என்னால் தடுக்க முடியாததையிட்டு”
கண்களைத் துடைத்தபடி தயக்கத்துடன் சிரித்தா.
“அம்மா இறப்பதற்கு முன் அவவுடன் நான் கதைத்தபோது அவவும் நான் சொன்னதையே சொன்னா – எனக்கும், எங்கள் எல்லோருக்கும் கிடைத்த மிகவும் சிறந்த விடயம் நீதான். அவ இப்போது உன்னைப் பார்க்கவேண்டுமென்று ஆசைப்படுகிறேன். உன்னையிட்டு ரொம்பப் பெருமைப்படுவா”
அவவின் தொண்டைக்குள் மூச்சுச் சிக்கியது, ஆனால் அவ தொடர்ந்தா, “  நீ எனக்குள் கொண்டுவந்த மகிழ்ச்சி! இன்று நான் இறப்பதாயிருந்தாலும்….” – சிறிது இடைநிறுத்தி, தனது மார்பைப் பிடித்தவாறே- “ சந்தோஷமாகச் சாவேன்.”
 
“ இது என்ன கதை, அம்மா! உங்களுக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லை. இறப்பது பற்றிச் சிந்திப்பதற்கே இன்னும் நீண்டகாலம் இருக்கிறது”
என்னைப் பார்க்க அவ திரும்பியபோது அவ முகத்திலே தோன்றிய அந்த அமைதியான மகிழ்ச்சி, சத்தமில்லாமல் வெளிப்பட்ட ஒளிமயமான சாந்தம் என்னையும் அமைதிகொள்ளவைத்தது.
“குஞ்சு, என்னுடைய சிறுபிராயத்து நண்பர்கள் பலர் போய்விட்டார்கள். ஐம்பது வயதைப் பார்க்கவே இருக்கவில்லை – பிழையான இடத்திலே பிழையான நேரத்திலே இருந்தபடியால் அவர்கள் வாழ்க்கை இடையிலேயே வெட்டப்பட்டது. நானும் அவர்களில் ஒருவராக இருந்திருக்ககூடும் – பாடசாலைக்குப் போகிறவழியில் வான் தாக்குதலாலோ அல்லது ரோட்டிலே புதைத்து வைத்திருந்த கண்ணிவெடி வெடித்ததாலோ. இல்லையேல் புலிகளோடு சேர்ந்து காவியா போல் இறந்திருக்கலாம்.”
சில கணங்களுக்கு முன் சந்தோஷமாயிருந்த அவ முகம் இப்போது வேதனையில் நிறைந்திருந்தது.
“எத்தனையோ பெண்கள் கெடுக்கப்பட்டு, ஆதாரம் இல்லாதிருக்க வேணுமென்பதற்காகக் கொல்லப்பட்டனர். என்னை தனியான ஒரு படைவீரன் பார்த்ததாலேயே நான் உயிர் தப்பிப் பிழைத்தேன் – தன்னுடைய வேலை முடிந்த மறுகணம் அந்த இடத்தைவிட்டு ஓடிவிட்டான்.”
அந்த ஞாபகம் வந்தவுடனே அவள் முகம் வேதனையில் துடித்தது, ஆனாலும் தன்னை நிலைப்படுத்திக்கொண்டு தொடர்ந்தாள்.
“என்னுடைய அன்பான காவியா எதிர்கொண்ட பயங்கரம்?…..ஜெயாவின் வெறியை என்னால் புரிந்துகொள்ள முடியும், ஆனால் பழி வாங்கவேண்டுமென்ற எண்ணத்தால் அவளால் சரியாகச் சிந்திக்கமுடியவில்லை. அம்மா மாத்திரம் பழி வாங்கும் எண்ணத்தைக் கைவிடுமாறு அவளை வற்புறுத்தாமல் இருந்திருந்தால், நான் இன்னுமொரு சகோதரியை இந்த அர்த்தமற்ற போரினால் இழந்திருப்பேன், செம்மணியில் நடந்ததுமாதிரி குடும்பமே அழிந்திருக்கும்” 
செம்மணியைப்பற்றி நினைத்தவுடனே இருவரும் பேச்சை நிறுத்தினோம். அம்மா இந்தியாவிற்குத் தப்பிப்போன சிலநாட்களில் ஒரு பாடசாலை மாணவி சோதனை முடிந்து வீட்டிற்குத் திரும்பும்போது இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளானாள். மறு நாள் அவளது தாய், தம்பி,  வயது மிகுந்த அயலவர் அவளைத் தேடி இராணுவமுகாமிற்குச் சென்றனர். ஒருவரும் வீடு திரும்பவில்லை. பின்னர் நான்கு உடல்களும் செம்மணிச் சுடலையில் உள்ள ஆழமற்ற குழிகளில் கண்டுபிடிக்கப்பட்டன. 
ஆனால் அந்த கொடூரம் அத்துடன் நிற்கவில்லை. சிறிது காலத்திற்குப்பின் நூற்றுக்கணக்கான உடல்கள் – சிலரது கணிப்புப்படி நானூறு வரையிலான உடல்கள், பச்சிளம் பாலகர்கள், பாடசாலை மாணவர்கள் உட்பட, புதைந்துகிடந்ததை புலனாய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
“சில எலும்புக் கூடுகளுக்குப் பக்கத்தில் பாடசாலை மாணவர்களின் பைகள் கிடந்தது உனக்குத் தெரியுமா?”, அம்மா கண்ணீருடன் சொன்னாள். “எத்தனை இளம் பெண்கள்  சீரழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டுப் புதையுண்டு போனார்களோ தெரியவில்லை. அவர்களுடைய குடும்பத்தினருக்கு தங்கள் பிள்ளைகளுக்கு என்ன நடந்ததென்றே தெரியாது. யுத்தம் முடிந்து பதினாறு வருடங்கள் ஆகியபோதும் அரசாங்கம் இன்னும் தமிழ்க் குடும்பங்களுக்கு சரியான தகவல் தெரிவிக்கவில்லை.”
நான் அவவை நோக்கிச் சரிந்து, தெளிவான குரலில் சொன்னேன், “ புதிய அதிபர் அனுரா திசனாயகாவின் அரசாங்கம் பழைய அநியாயங்களைக் கருத்தில் கொண்டு தமிழர்களுடைய குறைகளையிட்டு கவனம் செலுத்துவார் என்று நம்புகிறேன். இதுதான் அவருடைய தேர்தல் வாக்குறுதி, இல்லையா, அம்மா?
தன் கண்களில் கண்ணீர் வர  என்னைப்பார்த்தபடி தலையாட்டினா. “ இந்த அருமையான நாட்டுக்கு வந்து எனக்கும் எனதருமைக் கண்மணியான உனக்கும் ஒரு வாழ்க்கையை அமைத்துத் தந்ததிற்கு நான் என்றென்றும் நன்றியுள்ளவளாக இருப்பேன்”   
“உங்கடை வாழ்க்கை இன்னும் முடியவில்லை அம்மா. நீங்கள் இன்னும் இளமை. உங்கள் வேலையை விட்டுவிட்டுப் படிக்கலாம். நீங்கள் எப்போதும் விரும்பியபடி ஏன் ஒரு ஆசிரியராக வரக்கூடாது?”
“இல்லை, நான் ஏற்கனவே சொல்லியுள்ளேண். என்னுடைய வேலையில் நான் சந்தோஷமாயுள்ளேன். குணா அண்ணாவிற்கு வயதாகிறது. வேலையாட்களை கண்காணிப்பதில் அதிகமானவற்றை இப்போது நான்தான் செய்கிறேன். இப்போது நான் அவரை விட்டுப் போகமாட்டேன்”
“சமையல்கார உதவியாளராக இருப்பதையிட்டு நீ எப்போதும் வருத்தத்தில் இருந்தாய். இப்போது  அதைவிட்டு வெளியே போய் உன் தரத்தை உயர்த்துவதற்குச் சந்தர்ப்பம் கிடைக்கும்போது, உங்கடை பிடிவாதத்தை நம்பமுடியாமல் இருக்கிறது.” 
“குஞ்சு, நான் இப்போதெல்லாம் கிழமையில் ஒருநாள் வேத வகுப்புக்குச் செல்கிறேன்”
நாங்கள் இப்போது கதைப்பதற்கும் வேதவகுப்புக்கும் என்ன சம்பந்தம்? என்னுடைய குழப்பத்தைப் பார்த்து அவ புன்னகைத்தா.
“ஒவ்வொரு மனிதருக்கும் அவரவருக்கே உரியதான ஒரு கடமை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தனியான பாதையில் நடப்பதே அவர்களுக்கு விமோசனம் கொடுக்கும். என்னுடைய பாதை எங்கள் இருவருக்கும் ஒரு வாழ்க்கை அமைப்பது மற்றும் என் சொந்தக் காலில் நிற்பது - என்னுடைய வேலை இதை சாத்தியமாக்குகிறது” 
அவவை நான் இடைமறிப்பதற்கு அவ விடவில்லை.
“உண்மைதான். ஒருகாலத்தில் எனது வேலையைப்பற்றி நான் வெட்கப்பட்டேன், ஆனால் அப்படி வெட்கப்பட்டது தப்பு. இந்த வேலைதான் என்னைக் கௌரவமாக வாழ்வதற்கும் எனது சமூகத்திற்கும் சேவைசெய்வதற்கும் உறுதுணையாக இருந்தது.” 
பிரமிப்புடன் நான் பார்த்துக் கொண்டிருக்க அவ தொடர்ந்தா, “Anthony Albanese ஐ விட நான் ஒன்றும் குறைந்தவள் இல்லை”
சமீபத்தில் நடந்த கூட்டாட்சித் தேர்தலில் அவ வாக்களித்தவரின் பெயரைக் குறிப்பிட்டபோது எனக்குச் சிரிப்புத்தான் வந்தது. எல்லா ஆஸ்திரேலிய குடிமக்களுக்கும் சமமான சந்தர்ப்பங்களை வழங்குவோம் என்ற Albanese இன் உறுதியை ஆதரித்ததை விட Peter Dutton என்பவர் வரவிடாமல் தடுக்க தான் உதவினேன் என்று பெருமிதமடைந்தார். 
அவவின் தெளிவான சிந்தனை எனக்கு எரிச்சலையும் , பெருமிதத்தையும் தந்தது. அவவை நான் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கையில் தனது வேதபுராணத்தைத் தொடர்ந்தா.
“தத்தம் கடமைகளைச் செயும் ஒவ்வொருவரும் சமமானவர்கள் என்று வேதம் சொல்கிறது. அவர்கள் எல்லோரும் ஒரே மாதிரியாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் கடவுளின் பார்வையில் அவர்கள் சமமானவர்கள்.”   
 
இந்த விடயத்தை இப்படியே விட்டுவிடவேணுமென்று  அம்மாவைப்பற்றி நன்கு தெரிந்த என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது.  தன்னுடைய பாதை இதுவென்று அவ அமைதியாக ஏற்றுக்கொண்டதின் பின்னணியில் புதிதாக வந்துள்ள வேத வகுப்புகளா அல்லது    இதுவரை காலமும் தன்னை அன்போடு கவனித்து வந்த முதலாளியை விட்டுப்போக மனமில்லாததாலா  என்பது தெரியவில்லை, ஆனால் இவற்றில் ஒன்றுதான் இந்த வேலையை விட்டுவிடாமல் இருப்பதற்கான மனத்திடத்தைக் கொடுத்திருக்கிறது.
என்னவாயிருந்தாலும் இப்போது அவ அடுப்படியில் செலவழிக்கும் நேரத்தைக் குறைத்துக்கொண்டு அதிகநேரம் வேலையாட்களைக் கண்காணிப்பதில் செலவழிக்கிறா என்று திருப்திப்படுகையில் அம்மா  எனக்கு முத்தமிட்டுவிட்டு படுக்கைக்குச் சென்றா.
அம்மாவிற்கு ஒரு புதிய வாழ்க்கை, ஒரு வித்தியாசமான முடிவு கொடுப்பதற்கு விரும்பினேன். ஒருவேளை அம்மாவை ஒருவரும் காப்பாற்றத் தேவையில்லாதிருக்கலாம் – அவ ஏற்கனவே தன்னைக் காப்பாற்றிக்கொண்டா. அவவுடைய வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்த வேளையிலே ஆரம்பத்தில் அவமானமாயிருந்த எண்ணம் பிற்பாடு ஒரு பலமான சக்தியாக மாறியிருக்கவேண்டும். எனக்கு முன்னாலிருக்கும் இந்த மனுசி காப்பாற்றப்பட வேண்டியவரில்லை, மாறாக மதிக்கப்படவேண்டியவர்.
 
 
 
 
 
அத்தியாயம் 12 – மல்லிகைப்பூ
                   அழுதபோது
அருவி
14 -23 ஜூலை 2025
வல்வெட்டித்துறை
 
“அருவி எங்கே? அவவிற்குச் சாப்பிடுவதற்காக அப்பம் கொண்டு வந்துள்ளேன்”, எதிர்பார்க்காத நேரத்தில் அலாரம் அடித்ததுமாதிரி பானைகளின் மோதல் சத்தம் கேட்டது.
 
நான் எங்கிருக்கிறேன்? ஒரு விதமான பீதியுடன் படபடப்போடு கண்களைத் திறந்தேன். பழக்கமில்லாத கூரை தலைமேல் விரிந்து கிடந்தது. நான் பலமுறை கண்ணைச் சிமிட்டிச் சிமிட்டிப் பார்த்தபோதும் சுவர்கள் பிழையான நிறட்தில் இருந்தது.
“ஸ்ஸ்ஸ்.. சத்தம் போடாதே – அருவி இன்னும் நித்திரையில்”
 
முத்துச் சித்தியின் குரல் என்னுடைய இருதயத்தின் வேகத்தைக் குறைத்தது. நான் எங்கே இருக்கிறேன் என்று யோசித்தேன். இன்றைய நாளில் என்னத்தைப் புதிதாகக் காணப்போகிறேன், எப்படியெல்லாம் இன்பம் அனுபவிக்கப் போகிறேன். 
நான் இங்கே  நித்திரை  கொள்வதற்காக வரவில்லை என்னை நானே கடிந்துகொண்டு எனது கடிகாரத்தைப் பார்க்கிறேன், மணி காலை 900.
மெல்பெர்ண் இல் அப்போது பிற்பகல் 1;30. படுக்கையிலிருந்து துள்ளிக்குதித்து மண்டபத்திற்கு வந்தேன். அங்கே முத்துச் சித்தியும் ஒரு குறும்புத் தோற்றமுள்ள மனுசியும் அப்பம் சுடும் கலையைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
“உண்மையான இரகசியம் என்னவென்றால் மாவைப் புளிக்க வைப்பதற்கு புதிய கள்ளைப் பாவிக்கவேணும்.” அந்த மனுசி சொல்லிக்கொண்டிருந்தா. நான் ஆரம்பத்தில் நினைத்ததுபோல அவ இளமையானவர் அல்ல.
“காலை வணக்கம், சித்தி. மன்னிக்கவும், அதிகம் தூங்கிவிட்டேன்”
நாட்டியமாடும் இரண்டு சோடிக் கறுத்தக் கண்கள் ஆர்வத்துடன் என்னை நோக்கித் திரும்பின.
 
“குஞ்சு, நாங்கள் உன்னை எழுப்பிவிட்டோமா? அந்தப் பிரயாணத்தால் நீ மிகவும் களைப்படைந்திருப்பாய். உன்னை எழுப்புமாறு பையன்கள் நச்சரித்துக்கொண்டே இருந்தார்கள்- பாடசாலை போகுமுன் உன்னைப் பார்க்கவேண்டுமாம், ஆனால் நான் அனுமதிக்கவில்லை. தீபன் அதிகாலையிலேயே  மேற்வகுப்பு மாணவர்களின் வகுப்பாகப் போய்விட்டார். உன்னுடன் ஒவ்வொரு நிமிடமும் செலவழிக்கவேண்டி நான் இன்று லீவு எடுத்துள்ளேன்”
முத்துச் சித்தியின் மகிழ்ச்சிகரமான புன்னகை அவ என்னைப் பார்த்ததில் எவ்வளவு சந்தோஷமாய் இருக்கிறா என்பதைச் சொல்லியது.
“ஓஓ, சித்தி, நீங்கள் என்னை எழுப்பியிருக்க வேண்டும். பாடசாலை போகுமுன் பையன்களைப் பார்த்திருக்க எனக்கும் விருப்பம்”
“அதற்கெல்லாம் நிறைய நேரம் உள்ளது- நீ இப்போதுதான் வந்துள்ளாய். ஆனால் எதற்காக பத்து நாட்கள்தான் நிற்கிறாய். சீதா வராததே பெரிய தப்பு. நீ அவசரப்பட்டு ஏன் ஓடுகிறாய்?”
தொற்றுகின்ற புன்னகையுள்ள அந்த மனுசி பக்கம் திரும்பி, “ உங்களுக்கு என்னுடைய அம்மாவைத் தெரியுமா?”
முத்துச் சித்தியும் அந்த மனுசியும் ஒரே நேரம் பேசினார்கள்.
“சீதாவுடன் நான் பள்ளிக்குச் சென்றேன்”
“உன்னுடைய அம்மாவும் சுந்தரியும் பள்ளித் தோழிகள், அருவி,” சித்தி விளங்கப்படுத்தினா. “சுரேஸ் அண்ணாவைக் கலியாணம் பண்ணி எப்போது பக்கத்து வீட்டுக்கு வந்தாவோ அப்போதிருந்து இவ என்னுடைய ஆருயிர்த் தோழி.”
சுந்தரி அன்புடன் தொடர்ந்தார், “உன்னுடைய அம்மாச்சி உன்னையும் உனது சகோதரிகளையும் பெற்றபோது எனது மாமியார்தான் அவவிற்குத் துணையாக இருந்தார் என்பது உனக்குத் தெரியுமா?”
ஒரு கணம் நிறுத்தி அவ சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் நான் கவனமாகக் கேட்பதை உணர்ந்துகொண்டு தொடர்ந்து சொன்னா,
“என்னுடைய மாமியார் உன்னுடைய அம்மாச்சி, தாத்தா, உன்னுடைய தாயார், சகோதரிகள் எல்லோரையும் ரொம்பவே நேசித்தார். நான் சுரேசைக் கலியாணம்பண்ணி வந்தநாள் முதல் அவர்களோடு அவ கதைக்காத நாட்களேயில்லை. அதன்பிறகு, உன்னுடைய தாயாரும், முத்துவைத் தவிர மற்றெல்லா சகோதரிகளும் ஊரைவிட்டுப் போய்விட்டார்கள். ஐந்து வருடங்களுக்கு முன்னர் அவ இறக்கும்வரை இந்த வீட்டுக்குள் ஒவ்வொருநாளும் வந்து போய்க்கொண்டே இருப்பா”
“இப்போது நீதான் இங்கே வந்து போய்க்கொண்டே இருக்கிறாய்” , சித்தி சிரித்துக்கொண்டே சொன்னா.
என்னுடைய பக்கம் திரும்பி,” சுந்தரி இல்லாமல் எப்படிச் சமாளிக்கலாம் என்று எனக்குத் தெரியாது. இதையேதான் ஆச்சியைப்பற்றி அம்மாவும் சொன்னா.”
“ஆச்சி! அவவைப்பற்றி நான் எவ்வளவோ கேள்விப் பட்டிருக்கிறேன்”, ஆர்வத்துடன் நான் குறுக்கிட்டேன். “தாங்கள் சிறிதாயிருந்தபோது குளிப்பதற்காக ஆச்சிதான் கிணற்றிலிருந்து தண்ணி இறைப்பாவென்று அம்மா சொல்லுவா. அப்போதே வயது போயிருந்தாலும் ஒருவித முனகலுமில்லாமல் தாங்கள் கேட்கின்றவரையில் வாளிவாளியாகத் தண்ணி இறைப்பாவென அம்மா சொல்லுவா”  
பழையதை ஞாபகப்படுத்தி சித்தி புன்னகைத்தார்.
சுந்தரி தொடர்ந்தார், “அவர்களை தனது சொந்த மகள்கள் போல அன்பு செலுத்தினார்.”
அடுத்துவந்த சில நாட்களும் பலவிதமான செயல்பாடுகளுடன் கடந்து சென்றது. முழு ஊருமே என்னை வரவேற்க வந்ததுபோல இருந்தது. இப்படியான உணவுகள் இருக்குது என்றே எனக்குத் தெரியாத பலவகை ருசியான பதார்த்தங்களைக் கொண்டுவந்தார்கள். பாசத்துடனும் பெருமையுடனும் அம்மாவைப்பற்றிய கதைகளைச் சொன்னார்கள்.
என்னுடைய ஆங்கிலப்படுத்தப்பட்ட தமிழ் அதிகமானவர்களிடையே சிரிப்பையும் ஒரு அரவணைப்பையும் கொடுத்தது; நான் பேசிய விதம்   அவர்களை மகிழ்வித்ததோடு வசீகரப்படவைத்தது. மற்றவர்கள் தங்கள் கண்களில் ஆர்வத்தைக் காட்டியவர்களாக மெதுவாகப் புன்னகைத்தனர் - இதுவரை பேசப்படாத பல கேள்விகள் இருந்தபோதிலும் அவர்களுடைய கருணை மனம் கேட்க விடவில்லை.
ஒருநாள் சுந்தரி ஒரு பெண்கள் கூட்டத்தை ஏசி விரட்டுவதைக் கண்டேன.
“இவ்வளவு உணர்ச்சியற்ற ஜன்மங்களாய் இருக்கிறீர்களென்பதை நம்பமுடியாமல் இருக்குது. பாவப்பட்ட சீதா இங்கே வரவிரும்பாததில் வியப்பில்லை. அவள் அம்மாவிற்கு என்ன நடந்ததென்று தெரியுமா என்று ஏன் அருவியைக் கேட்கவேணும்? சீதா தனக்கென்று ஒரு புதிய வாழ்க்கை அமைத்துள்ளாள்- பாருங்கள், எவ்வளவு சீராக அருவியை வளர்த்திருக்கிறாள்” 
நான் அங்கே வருவதைக் கண்டதும் சுந்தரி அப்படியே நிறுத்திவிட்டா.
“அருவி, இங்கே வந்து விட்டாய்! உன்னுடைய அம்மாவின் பள்ளித்தோழிகள் சிலரைச் சந்திக்கவும்”, அவளுடைய குரல் தெளிவாக இருந்தபோதிலும் நெளிந்து கொண்டிருந்த அந்தப் பெண்களை அவளது பார்வையால் எச்சரித்தாள்.
“குஞ்சு, உன்னைப் பார்த்ததில் எங்களுக்குப் பெரு மகிழ்ச்சி. சரியாக உன்னுடைய அம்மா போலவே இருக்கிறாய்”, ஒரு மெல்லிய பெண் தனது இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்த கூந்தலை  தனது தோளுக்கு முன்னால் தள்ளிவிட்டு எண்னை நோக்கி வந்தார். என்னைக் கட்டியணைக்க வேண்டுமென்ற ஆவலில் பாய்ந்து வந்த அவ ஒரு மேசையோடு மோதப்பார்த்தா.
“முத்து, இந்த மேசையை இன்னும் வைத்திருக்கிறாய் என்று என்னால் நம்பமுடியவில்லை- அதுவும் அதே இடத்தில் இந்த சுவருக்குப் பக்கத்தில். இந்தச் சுவர் எவ்வளவோ வான் தாக்குதலுக்குப் பிறகும் உருப்படியாய் இருக்குது. முத்து, உன்னுடைய அம்மாவிற்காக உனது பாட்டா இந்த வீட்டைக் கட்டியபோது செலவைப் பொருட்படுத்தவேயில்லை என்று கிராமவாசிகள் கதைத்தது தப்பில்லை.
பழைய சம்பவங்களை நினைத்துப்பார்த்த அவவின் முகம் இளகியது.
“உனக்குத் தெரியுமா, அருவி. ஒருநாள் உனது அம்மாவும் நானும் இந்த மேசையில் ஏறி நின்று சுவருக்கு மறுபுறம் படித்துக் கொண்டிருந்த மற்றவர்களைக் குழப்புவதற்கு முயற்சி செய்தோம். அப்போது அங்கே வந்த உன்னுடைய அம்மாச்சியிடம் நல்ல பேச்சு வாங்கினோம்.”
அம்மா ஒரு சிறு பெண்ணாக தனது கண்களிலே நாட்டியமாடிக் கொண்டிருந்த குறும்பை மறைப்பதற்காக கீழே பார்த்துக்கொண்டு நிற்பதைக் கற்பனை செய்து அவவின் பள்ளித் தோழியுடன் சேர்ந்து சிரித்தேன். 
அம்மாவின் கதை கேட்டு நான் மகிழ்வதை அவதானித்த அந்த குறும்புக்கார மனுசியின் கண்களும் ஈரமாக, தொடர்ந்தா, “சிறு பிள்ளைகளாக இருந்த உனது அம்மாவும் நானும் ஊரின் ஒழுங்கை வழியே ஒரே சிரிப்புடன் போட்டிபோட்டுக்கொண்டு சயிக்கிள் ஓடுவோம். உன்னுடைய அம்மாவிற்கு உள்ள பள்ளம் திட்டிகளை எப்படி லாகவமாகக் கடந்து செல்வது என்று தெரியும். அவள் போகும் வேகத்தாலே நான் ரொம்பப் பிந்தியிருப்பேன். அவளை எப்படித் துரத்தினாலும் பிடிக்கமுடியாது”
அவ சொல்வதைச் சந்தோஷமுடன் கேட்டுக் கொண்டிருந்த முத்துச் சித்தி தன்னுடைய பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டா.
“சீதாவிற்கு சயிக்கிள் என்றால் நல்ல விருப்பம். எங்கள் வீட்டில் அப்போது இரண்டு சயிக்கிள்கள் இருந்தன- ஒன்று அப்பாவினது, மற்றொன்று எல்லோருக்குமானது. ஆனால் மற்ரவர்களுக்கு சந்தர்ப்பமே கிடைக்காது ஏனெனில் அம்மாவிற்கு ஏதாவது அலுவல் என்றால் சீதா சயிக்கிளுடன் புறப்பட்டுவிடுவாள். நாங்கள் சயிக்கிளைவிட நடப்பதை விரும்பியதால், அதையிட்டு வருத்தப்படவில்லை”
வெகுவிரைவிலேயே நான் புறப்படுவதற்கு முதல்நாள் இரவு வந்தது. முத்து சித்தியும் நானும் வராண்டாவிலே மல்லிகைக் கொடியின் அருகிலே இருந்தோம். பல வருடங்களுக்கு முன்னே தகப்பனிற்கு உதவியாக அம்மாவும் சகோதரிகளும் கட்டிய மரத்தினாலான சட்டத்தை மூடி மல்லிகை வளர்ந்திருந்தது. நறுமணமிக்க அந்த வெள்ளைப் பூக்கள் சட்டத்திலிருந்து ஒரு நீர்வீழ்ச்சிபோல  கீழே விரிந்து, தம்மிடமிருந்து வெளிப்படுத்திய  அந்த இனிமையான வாசத்தினால் எனது இதயம் அமைதியால் நிறைந்தது.
எனக்குப் பக்கத்திலே முத்துச் சித்தி தனது உதடுகள் கொஞ்சம் விரிந்திருக்க கண்கள் அரைவாசி மூடியிருக்க அங்கே மௌனமாக நடைபெற்றுக் கொண்டிருந்த  தாளத்திற்கு ஏற்றவாறு அசைந்து கொண்டிருந்தவாறு, “நான் சிறுமியாக இருந்த காலத்திலே இந்த மல்லிகை மணத்தை அவ்வளவு விரும்பினேன். நாங்கள் அம்மாவைச் சுற்றியிருந்துகொண்டு எங்கள் பின்னலில் மல்லிகை மாலையைச் சொருகிவிடுமாறு அடம் பிடிப்போம். உன்னுடைய அம்மாதான் உள்ளதற்குள்ளே மோசம் – அம்மா அலுவலாயிருந்தால் தானே தனக்கு மல்லிகை மாலை கட்டிவிடுவாள்.”
“உண்மையாகவா, சித்தி? அம்மாவிற்கு மல்லிகை பிடிக்குமென்று எனக்குத் தெரியாது. போன வருடம் குணா மாமாவின் மகளுக்குக் கலியாணம் நடந்தபோது அவர் எல்லோருக்கும் புதுமலர்ச்சி வாய்ந்த மல்லிகை மாலைகள் தருவித்தார், ஆனால் அம்மா அணிய மறுத்துவிட்டா”
“அது ஏனென்றால், என்ன நடந்ததென்றபடியால்” சொல்லிவிட்டு என்னைப் பார்த்து ஏதோ சொல்லக்கூடாதென்பதற்காக தனது நாக்கைக் கடித்தபோதும் வார்த்தைகள் வெளியே வந்தன. “இந்தமல்லிகை மரத்தை அடியோடு புடுங்கி எறியவேண்டுமென்று எத்தனை நாட்கள் நினைத்தேன்”, ஒரு ஆவேசத்துடன் சொன்னா.
“ நீங்கள் இரண்டுபேரும் இன்னும் முழித்திருப்பீர்களென்று நினைத்தேன்”
சுந்தரி மாமியின் குரல் கேட்டுத் திரும்பினோம். இன்னும் பூட்டப்படாமல் இருந்த வாசல் கதவூடாக இரண்டு கைகளிலும் இரண்டு தம்ளர்களை கவனமாக சமநிலைப் படுத்தியவாறே எங்களை நோக்கி வந்தா.
“அருவி, எவ்வளவு விரைவாக நேரம் போய்விட்டது? நாளைக்கு நீ புறப்படுகிறாய். உன்னை இனிமேல் எப்போது பார்ப்பனோ தெரியாது . ஆகவே நீ என்னை மறக்காமல் இருப்பதற்காக என்னுடைய பிரத்தியேக இஞ்சி தேனீர் தயாரித்துள்ளேன்”
மல்லிகை மரத்தைப்பற்றிக் கதைத்தவுடன் ஏன் முத்துச் சித்தி கடுமையான நிலைப்பாட்டை எடுத்தா என்றறிவதில் ஆற்வமிருந்தபோதிலும் சுந்தரி மாமியின் அன்பு என்னை ஆட்கொண்டது.
“சுந்தரி மாமி, உங்களையாவது நான் மறப்பதாவது! என்னில் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறீர்கள்”
அவ நீட்டிய கையிலிருந்து தம்ளரைப் பெற்று, அந்த ஆடை நிரம்பிய பால் தேனீரிலிருந்த வந்த இஞ்சியும் ஏலக்காயும் கலந்த இதமான நறுமணத்தை மெதுவாக உள்ளிழுத்தேன். ஒரு சிறிய மிடறு குடித்தவுடனேயே அதனுடைய இதமும், இனிப்பும் தெரிந்தது, நிறைந்த திருப்தி மெதுவாக என்னுள் படர்ந்தது. 
“இந்த இரவை நான் என்றும் மறக்கமாட்டேன்”, 
    ஒரு இன்பகரமான பெருமூச்சுடன் அவர்களைப் பார்த்தேன், “ விரைவில் இங்கு திரும்பிவருவேன் - Brad  ஐயும் என்னுடன் அழைத்துவருவேன்.”
“ஓம், உன்னுடைய அந்த மாப்பிள்ளையையும் சந்திக்க விரும்புகிறோம். இங்கே எங்களுடைய முத்துமாரி அம்மன் கோவிலிலே ஏன் நீங்கள் கலியாணம் செய்து கொள்ளக்கூடாது? எங்கள் குடும்பத்தில் இருந்து ஒருவரும் அவள் அருளில்லாமல் கலியாணம் செய்வது கிடையாது”, முத்துச் சித்தி சொன்னா.
  அவ சொல்லியபின்தான் அவவிற்கு அந்த வார்த்தைகளின் சுமை தெரிந்தது. அவவின் முகபாவம் மாறியது, ஒரு வேதனையுடன் என்னைத் திரும்பிப் பார்த்தா.
“ அது பரவாயில்லை, சித்தி. அம்மா கலியாணம் முடிக்கவில்லையென்று எனக்குத் தெரியும். அவவிற்கு என்ன நடந்ததென்றும் எனக்குத்தெரியும்- எப்படி உருவானேன் என்பதும்”
சுந்தரியும் சித்தியும் ஒருவரையொருவர் பார்த்தனர். அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் விடயத்தைவிட்டு வேறு விடயம் கதைப்பார்களென்று நினைத்தேன், ஆனால் சுந்தரி சித்தியைப் பார்த்து லேசாகத் தலையாட்டிவிட்டு அங்கிருந்து புறப்படத் தயாரானா.
சித்தி ஒரு ஆழ்ந்த மூச்செடுத்தபின், “ சுந்தரி, போகாதே. நீயும் குடும்பத்தில் ஒரு ஆள் மாதிரி. அந்த இரவுபற்றி ஒருவருடனும் நான் இதுவரை பேசியதில்லை………” அவவின் முகம் வேதனையில் துடித்தபடி என்னை நோக்கித் திரும்பினா. “ டார்லிங் அருவி, நாங்கள் உன்மீது பெரிதளவு அன்பு கொண்டுள்ளோம், நீ இல்லாத வாழ்க்கையைக் கற்பனை செய்து பார்க்கமுடியாது. ஆனால் இப்பவும் அந்த இரவை நினத்தால் கெட்ட கனவுகள்தான் வரும்”
சித்தியின் வார்த்தைகள் காலத்தைப் பின் நோக்கி இழுத்துச்சென்று எல்லாவற்றையும் மாற்றிய அந்த இரவுக்குச் சென்றது. 
“மகா அப்போது கலியாணம் முடித்து சிவாவுடன் வன்னிக்குப் போயிருந்தா. பெண்பிள்ளைகளான எங்களைத் தனியே விட்டுப் போவதற்கு  அப்பாவிற்கு விருப்பமில்லாதபொதிலும், ஏதோ ஒரு காரணத்திற்காக அம்மா அவர்களைப் பார்க்க வன்னிக்குச் செல்ல முடிவெடுத்தா. சுபா அப்போது ஆஸ்திரேலியாவில், ஜெயா புலிகளில் சேர்வதற்கு ஆர்வமுள்ளவளானபடியால் அவர்களின் பிரச்சாரக்கூட்டத்திற்குச் சென்றுவிட்டாள். சீதாதான் எங்களுக்குப் பொறுப்பாயிருந்தாள். நாங்கள் அவளுக்குக் கொஞ்சம் வயது குறைந்தவர்கள், எனக்குப் பதினாறு, காவியாவிற்கு பதினேழு. எங்களை அவன் ஏன் ஒன்றும் செய்யவில்லை என்று நான் எப்போதும் யோசிப்பதுண்டு.”
நான் முன்னுக்குச் சாய்ந்து, நற்காலியை இறுகப் பிடித்துக்கொண்டு, அவ சொல்லுகின்ற துயரம் மிக்க ஒவ்வொரு வார்த்தையையும், ஒவ்வொரு துயரமிக்க வசனத்தையும் முத்துச்  சித்தி தனது நினைவிலிருந்து தோண்டிஎடுத்துச் சொன்னதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். அம்மாவின் வாழ்க்கையை அடியோடு மாற்றிய அந்த இரவில் நடந்தவை பற்றிய விபரத்தை நேரடியாகப் பார்த்த ஒருவர் மூலம் கேட்பதற்கு இதுதான் சந்தர்ப்பம். 
தயக்கத்துடனே சுந்தரி கேட்டா, “முத்து, அவன் ஒரு தனியான படைவீரன். நீங்கள் மூன்று பேர்கள். அவனை மடக்கிப் பிடித்திருக்கேலாதா?”
“அந்த இரவிலிருந்து அந்தக் கேள்வியை நான் எனக்குள்ளே மில்லியன் தடவை கேட்டிருப்பேன். ஒருவேளை அவன் கையிலிருந்த துவக்காயிருக்கலாம்; நாங்கள் அவனைத் தாக்கி மற்ற படைவீரருக்குத் தெரிந்தால் எங்களையும் சும்மா விடமாட்டார்கள் என்ற பயமாயிருக்கலாம். எப்படியோ நாங்கள் முயற்சித்துப் பார்த்திருக்கவேண்டும்.”
சித்தியின் குரலில் இருந்த வேதனை தொட்டுப்  பார்க்கக் கூடியதாயிருந்தது.
“முத்து, என்னை மன்னித்துவிடு. எவ்வளவு மடைத்தனமான கேள்வி.”
ஆனால் சித்தி தொடர்ந்தா. இப்போது அந்த நினைவுகள் வெளியே வந்துவிட்டதால் வார்த்தைகள் வாயிலிருந்து உதிர்ந்தன.
“அன்றிரவு வீட்டிலே  சீதா, காவியா, நான் மாத்திரம் இருந்தோம். வழக்கத்தைவிட மிகவும் சாந்தமாக சீதா இருந்தாள். முன் வராந்தாவில் அப்பாவின் ஆடும் நாற்காலியில் இருந்து தோள்கள் சரிந்திருக்க, கைகளால் தன்னை அணைத்தவாறே ஏதோ சிந்தனையில் இருந்தாள். மல்லிகை நன்றாகப் பூத்துக்குலுங்கி அதன் நறுமணம் காற்றிலே வந்து என் மனதில் அமைதியைக் கொடுத்தது. நான் அவளை உற்சாகப்படுத்த முயன்றேன். காவியாவும் நானும் அவளுக்குப் பக்கத்தில் தரையில் இருந்தோம்.
நாங்கள் சொன்னோம், “நீ ஏன் கவலையாய் இருக்கிறாய் என்று எங்களுக்குத் தெரியும். இப்ப நீ பல்கலக்கழகத்திலை இருக்கவேணும். ஆனால் இந்தச் சண்டையினால் சோதனையே நடக்கவில்லை”
தன்னை ஒரு நிதானத்திற்குக் கொண்டுவருவதற்காக முத்துச் சித்தி ஒரு நீண்ட மூச்சை உள்ளே இழுத்து சீராக வெளியெ விட்டா.
“சீதா எங்களைப் பார்த்து இலேசாகப் புன்னகைத்தாள், ஆனால் திடீரென தனது வாயைக் கைகளால் பொத்திக்கொண்டு இரண்டு மூன்று முறை விழுங்கினாள். முழுநாளும் சத்திக் குணமாகவே இருந்திருக்கிறா. நான் குடித்துக் கொண்டிருந்த தம்ளரை அவவிடம் நீட்டி, “அக்கா, கொஞ்சம் தண்ணி குடி. எல்லாம் சரியாகிப் போய்விடும்.”
என்னுடைய வார்த்தைகள் வெளியே வரவும் எங்களுடைய முன் கேற் கதவு படாரெனத் திறந்து அதுவழியே ஒரு இராணுவத்தினன் உள்ளே வந்தான் – எங்களுடைய மண்தரையிலேயே அவனுடைய பாரமான சப்பாத்து பலத்த சத்தத்தை ஏற்படுத்தியவாறு வந்த அவன் கண்களிலே மனச்சஞ்சலத்துடன் ஏதோ ஒரு உறுதியோடு வந்தவன் மாதிரி இருந்தது. 
சீதாதான் உடனடியாகச் செயல்பட்டாள். மின்னல் வேகத்தில் நாற்காலியை விட்டெழும்பி, காவியாவிற்கும் எனக்கும் முன்னால் நின்றாள். அவன் அவளை நோக்கிப் பாய்ந்தபோது அவள் கூச்சலிட்டாள். அவனுக்கும் தனக்கும் இடையில் ஒரு கண்ணுக்குத் தெரியாத வேலியைப் போடுவதுமாதிரி தன் கைகளை மேலும் கீழும் ஆட்டினாள், ஆனால் அவன் அவளின் கைகளை இலகுவாகத் தட்டிவிட்டு அவளின் மார்பின்மேல் பாய்ந்தான். அவளின் ரவுக்கை கிழிந்து முலைகள் வெளியே தெரிந்தபோது காவியாவும் நானும் அலறினோம். நான் ஒரு மூலையில் பதுங்கிக்கொண்டேன், ஆனால் காவியா தன் முட்டியால் அவன் மார்பைக் குத்திக்கொண்டே, “என்னுடைய சீதா அக்காவை சும்மா விடு.””
சித்தியின் கன்னம் வழியே கண்ணீர் வழிந்தோட, தன்னை சுவாதிப் படுத்துவதற்காக ஆழ்ந்த மூச்செடுத்தா. அவவைக் கட்டிப்பிடித்து, உங்களைக் குறை நினைக்காதீர்கள் என்று சொல்ல விரும்பினேன், ஆனால் முடியவில்லை. கதிரையை இன்னும் கடுமையாக அழுத்திப் பிடித்தபடி, அந்தப் பிசாசிடம் எனது அம்மா பட்ட அவஸ்தையை கற்பனை செய்தேன்.
சுந்தரிதான் முத்துச் சித்தியை கட்டிதழுவி, அவவின் குமுறல்கள் ஒருவாறு அடங்கியபின் என்னைப் பார்த்துத் தலையாட்டினா. 
சித்தி தொடர்ந்தா, “அந்தச் சிப்பாய் காவியாவை ஒரு பலத்த அடியால் தள்ளிவிட அவள் நிலத்திலே விழுந்தாள்.”
“காவியா, முத்து ஓடுங்கள்.” சீதா அலறினாள்.
அவன் அவள் மீது பாய்ந்து ரவிக்கையை மேலும் பல துண்டுகளாகினான். அவளது முலைகளில் கை வைத்தான்.
“என்னுடைய சகோதரிகளின் முன்னால் வேண்டாம்!. தயவுசெய்து, நான் உன்னை மன்றாடிக் கேட்கிறேன் – அவர்களுக்கு முன்னால் வேண்டாம்”
ஓரு கணம், தான் செய்துகொண்டிருந்ததை நிற்பாட்டினான்.
நிலத்திலே வீழ்ந்துகிடந்த காவியாவைப் பார்த்தான்; மூலையில் பதுங்கிக் கொண்டிருந்த என்னைப் பார்த்தான். அப்புறம் தனது இரண்டு கைகளையும் கோர்த்துக்கொண்டு பிரார்த்தனை செய்வதுமாதிரி அவனிடம் மன்றாடிக் கொண்டிருந்த சீதாவைப் பார்த்தான்.
சீதாவின் மார்பில் இருந்த தன் கைகளைப் பார்த்து அவை அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதைப் புரியாததுமாதிரி தடுமாற்றத்தில் இருந்தான்.
கைகளைக் கீழே போட்டான். தனது சிந்தனைகளை நிதானத்திற்குக் கொண்டு வர நினைப்பவன் மாதிரித் தலையை ஆட்டினான், கண்களைச் சிமிட்டினான்.
எங்களை விட்டுவிடுவான் என்று நினைத்தோம். ஆனால் அவன் ஒரு கர்ஜனையோடு சீதாவின் கையைப் பிடித்து வீட்டிற்குள் இழுத்துச் சென்றான். கதவை அடித்துச் சாத்தியபோது காதைப் பிளக்கும் சத்தம் எதிரொலித்தது.
“முத்துச் சித்தி என்னருகே வந்து, முழங்காலிட்டு, நாற்காலியை இறுகப் பிடித்திருந்த எனது கைகளை விடுவித்து, அவற்றை இறுக்கமாக அழுத்தினா.
“உன்னுடைய அம்மா கத்திச் சத்தம் கேட்கவில்லை. அந்தக் காமுகனும் ஒரு சத்தமும் போடவில்லை”
ஒரு கணம் நிறுத்தி, தடுமாறியபடி மூச்செடுத்துத் தொடர்ந்தா, “முடிவில்லாத நேரம் போலத் தோன்றினாலும், சில நிமிடங்களிலேயே அவன் வெளியே வந்தான். காவியாவும் நானும் நாங்கள்தான் அடுத்தது எனப் பயந்தவாறே உறைந்துபோய் நின்றோம். அவன் எங்களை நிமிர்ந்து பார்க்காமலே கேற் வழியே வேகமாகப் வெளியேறினான். இப்போதுகூட, நாங்கள் ஏன் ஓடவில்லை என்பது எனக்குப் புரியவில்லை- ஏன் அப்படியே நின்றோம்? நாங்கள் ஏதாவது செய்திருந்தால் ஒருவேளை பாவப்பட்ட சீதாவிற்கு நடந்ததைத் தடுத்திருக்கலாம்.”
என்னுடைய கைகளைத் தன் மார்பிலே வைத்து அடக்கமுடியாமல் அழுதா.
விழுங்கி விழுங்கிக்கொண்டே சொன்னா, “அந்த நினைப்பே வெளியில் வராமல் எனக்குள்ளே அடக்கி வைத்திருந்தேன். ஆனால் இன்றுபோல் மல்லிகை மணம் காற்றிலே கலந்து வரும்போது, எங்களுடைய சகோதரி மானபங்கப் படுத்தும்போது காவியாவும் நானும் ஒன்றும் செய்யாமல் எப்படி உறைந்துபோய் நின்றோம் என்ற கேள்வி வேதனைக்குள்ளாக்கிறது.
அந்தக் காமுகன் தன்னுடைய ஆறு விரல் கொண்ட கொடூரமான கைகளால் மல்லிகைப் பந்தலைத் தள்ளிவிட்டுப்போனது   இன்னும் என்னைக் கொல்லுது.”
சித்தியின் மென்மையான தொடுதலால் மெதுவாகத் தளர்ந்து கொண்டிருந்த என்னுடைய விறைப்பான உடல், இப்போது ஏற்பட்ட அதிர்ச்சியினாலும் வெறுப்பினாலும் முடங்கிப்போய் நாற்காலியில் சாய்ந்தேன்.
நல்லக! என்னுடைய உதடுகள் அசையாவிடினும், மனம் அலறியது.
எனக்கு ஆறுதலான விடயம் ஒன்றும் சொல்லமாட்டாவா  என்று ஆவலுடன் சித்தியின் முகத்தைப் பார்க்கிறேன் – நான் இப்போது கேட்டதன் பொருள் என்னவென்று விளங்கப்படுத்துவதற்கு ஏதாவது விளக்கம் அல்லது மறுப்புச் சொல்லமாட்டாவா?. எங்கள் குடும்பத்திற்குத் தெரிந்த ஒன்றிரண்டு சிங்களவர்களில் இரண்டு பேர் பலவிரல்காரராய் இருப்பதை ஒதுக்கி வைத்துவிடமுடியாது. ஒருவேளை அவர்கள் இருவரும் உறவுக்காரராய் இருக்கலாம் – எனக்கு நம்பிக்கை தருவதற்காக காரணம் தேடிப் பார்த்தேன். ஆனால் என்னுடைய மனம் வேகமாக முன்னோக்கி ஓடி, பல பயங்கரமான சாத்தியக்கூறுகளைக் கண்முன்னே கொண்டுவந்தது. 
உண்மையில் என்ன நடக்கிறதென்பது புரியத் தொடங்கியவுடன் ஒரு குளிர்ந்த உணர்வொன்று என்னுடைய முதுகுத்தண்டு வழியே சறுக்கெனப் பாய்ந்து என்னை வருத்தியது. நல்லகதான் அன்றைய இரவு வந்த மனிதனாயிருந்தால் என் அம்மாவின் இறந்தகாலம் யாழ்ப்பாணத்தில் புதைந்து கிடக்காது, மெல்பேர்ண் வரை என்னைத் தொடர்கிறது. 
 
 
அத்தியாயம் 13  - யாழ்ப்பாணத்திலிருந்து மெல்பேர்ண் வரை
அருவி
22 ஜூலை 2025
வல்வெட்டித்துறை
 
அப்பொழுது கேட்டதன் பிரமாண்டமான முக்கியத்துவத்தை உணர்ந்து அதிர்ச்சியடைந்த எனக்கு முத்துச் சித்தி சொன்ன தகவலால் நான் மாத்திரம் குழப்பமடையவில்லை என்பது புரிய சில விநாடிகள் எடுத்தன. 
“நீ என்ன சொல்கிறாய், முத்து, ஆறு விரல் மனிதனா?” சுந்தரி தடுமாறினாள். கட்டுக்கடங்காமல் அவள் கைகள் நடுங்கின. அவற்றைக் கட்டுப்படுத்தத் தனது உள்ளங்கையால் மார்பை அழுத்திப் பிடித்தா. முத்துச் சித்தி தான் சொன்னதை வாபஸ் வாங்கமாட்டாளா என்றமாதிரி அவவைப் பார்த்தா.
“சுந்தரி, என்ன பிழை? அந்த இரவு என்ன நடந்ததென்று முழு விபரமும் உனக்கு நான் இதற்கு முன் சொல்லியிருக்காவிடினும், கொஞ்சமாவது உனக்குத் தெரியும்.”
“அந்த மனிதனுக்கு ஆறு விரல்கள்தான் என்று இதற்குமுன் நீ சொல்லவில்லை.”, சுந்தரி குழப்பத்துடன் கேட்டா.
“ ஏனென்றால் அந்த மனிதன் இங்கே வந்தான், முத்து! அந்த ஆறு விரல் மனிதன் இங்கே வந்தபோது சீதாவைப்பற்றிய எல்லா விபரத்தையும் அவனுக்குச் சொல்லிவிட்டேன்”
“என்ன! எப்போது! சீதாவைப்பற்றி எல்லாவற்றையும் சொன்னாய் என்றால் என்ன அர்த்தம்?” என் மனதில் நான் கேட்கவென்ற கேள்விகளை சித்தி கேட்டா.
நல்ல காலம், சித்தியும் சுந்தரியும் தங்கள் சம்பாஷணையில் மூழ்கியிருந்தனர். அப்படியே அவர்கள் என்னைப் பார்த்திருந்தாலும் எனது விறைப்பான தோரணையும், வெளிறிப்போன கை முட்டியையும் பார்த்து, நல்லகவின் கைகளில் அம்மா பட்ட சித்திரவதையை நினைத்துத்தான் ஏற்பட்டது என்று நினப்பார்கள்.  
உண்மையில் அதுவும் அதிர்ச்சி ஏற்படக் காரணமாயிருந்தபோதிலும், அந்த மனிதனின் அடையாளம் தெரிந்தபின் அதிர்ச்சி பல மடங்காயிற்று. நான் இப்போது கேட்ட உண்மையின் முக்கியத்துவத்தை ஒதுக்கமுடியாது: நல்லகதான் என்னுடைய தந்தை.
ஒரு குளிர்ந்த உணர்வொன்று என் முதுகுத்தண்டு வழியே ஊர்ந்தது- எனது காலுக்கடியில் இருந்த பூமி நகர்ந்தது போலிருந்தது.
இல்லை, நான் நினைத்தேன்.  ஒருபோதும் இல்லை  
எனக்கு ஒரு தந்தை இருந்ததில்லை; எனக்கொரு தந்தை வேண்டாம்
 சித்திக்கு பதிலை அறிவதில் பொறுமையில்லாதபோதிலும் தான் சொன்னதை இன்னும் விபரமாகக் கோவையாகச் சொல்வதற்கு சுந்தரிக்கு கொஞ்சம் அவகாசம் வேணுமென்பதை உணர்ந்தா.  
“எப்படிப்பட்ட முட்டாள் நான் “, சுந்தரி கிசுகிசுத்தாள். “ தான் பிரபாகரன் பிறந்த ஊரைச் சுற்றிப் பார்க்க வந்த குழுவைச் சேர்ந்தவன்  என்று அவன் சொன்னதை நான் நம்பினேன்”
தனக்கு ஆதரவு தேடி சித்தியைப் பார்த்தபடி, “முத்து, உனக்கு ஞாபகமிருக்கா? போன கிழமைதான் எவ்வளவு சிங்களவர்கள் வல்வெட்டித்துறைக்குள் குவிகிறார்கள் என்று கதைத்தோம்”
சித்தி தலையாட்டியதும், ஊக்கப்படுத்தப்பட்டு சுந்தரி தொடர்ந்தா,
“எனக்கு நல்ல ஞாபகம். தைப்பொங்கல் காலை. வீட்டுக்கு வெளியே சுரேஸ் கட்டித்தந்த அடுப்புக்கு முன்னால் சூரியனின் முதல் கதிர்களுக்காகக் காத்திருந்தேன்.  அப்போது ஒரு மனிதன் உங்கடை கேற்றுக்கு வருவதைப் பார்த்தேன்.
“ஹலோ,” நான் கூப்பிட்டேன். “வீட்டில் ஒருவரும் இல்லை. தீபனுடைய பெற்றோரைப் பார்ப்பதற்காக அவர்கள் வன்னிக்குப் போய்விட்டார்கள். நீங்கள் தீபனின் நண்பரா?”
“இல்லை”, என்னுடைய கண்களைப் பார்க்காமலே சொன்னார் – காலை முன்னும் பின்னும் அசைத்தபடி அங்கிருந்து போவதற்கு முயற்சிப்பதுபோலத் தெரிந்தது.
நான் எனது பொங்கல் பானை பக்கம் திரும்பினேன் – சுரேசும் பிள்ளைகளும் குளித்துவிட்டு வருமுன்னதாக பொங்கலை ஆரம்பிக்கும் கவனத்தில் இருந்த நான் எனக்குப் பின்னேயிருந்து வந்த குரலினால் திடுக்கிட்டேன்.
“ இந்த வீட்டின் சொந்தக்காரர் – அவர் பெயர் முருகதாஸ் என்று நினைக்கிறேன்- அவருக்கு ஒரு மகனும் இல்லை என்று எனக்குத் தெளிவாகத் தெரியும்”
நான் நிமிர்ந்து பார்த்தேன்- அவர் திரும்பி வந்து எனக்குப் பின்னால் நின்றார்.
நான் தலையாட்டினேன், “நீங்க சரிதான். முருகதாஸ் மாமாவிற்கு எல்லாம் பெண்கள்தான் . கடைசிப்பெண்ணின் கணவர்தான் தீபன்” இயந்திரமயமாகச் சொன்னேன். விறகு இன்னும் நெருப்புப் பிடிக்கவில்லையென்பதால் நான் அதில் கவனம் செலுத்தினேன். சுரேஸ் விரைவில் வந்தால் நல்லது என்று நினைத்தேன்.
“என்னை உதவிசெய்ய விடுங்கள்”, என்று நெருப்புப்பெட்டியை எடுத்தார்,
அப்போதுதான் அதைப் பார்த்தேன் – ஒவ்வொரு கையிலும்  ஆறு  விரல்கள்.
அவர் கூச்சத்துடன் புன்னகைத்தபடி சொன்னார், “பரவாயில்லை. அவை பார்ப்பதற்கு விசித்திரமாயிருக்கும், ஆனால் திறம்பட வேலைசெய்யும்”
நெருப்பு பற்றியெரியத் தொடங்கியதும், அவர் கேட்டார், “அவருடைய பெண்களில் ஒருத்தியாகிய சீதாவை நான் சந்தித்துள்ளேன். அவ இப்போ எங்கே என்று தெரியுமா/”
சுந்தரி தயங்கினா. அவ என்னையும் சித்தியையும் பார்த்தபோது அவவின் கண்களில் வேதனை தென்பட்டது. சித்தி அவவை உக்கப்படுத்தும் நோக்கத்தில் லேசாகப் புன்னகைக்க, சுந்தரி மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து தொடர்ந்து சொன்னா.
“ஓரு கணம் எனக்கு ஆச்சரிமாயிருந்தது, சீதா தனியாக அதிக தூரம் போகிறவள் இல்லை. அப்படியிருக்க இவரை எங்கு சந்தித்திருக்கக்கூடும். என்னுடைய சிந்தனை அப்படி ஓடிக்கொண்டிருக்கையில், சுரேசும் பிள்ளைகளும் குளித்து மினுமினுக்கும் உடை அணிந்து, யார் முதலில் பொங்கலை ருசி பார்க்கலாமென்று ஓடி வந்தார்கள். பொறுத்துக் கொள்ளுங்கள் என்றமாதிரி, புன்னகையுடன் தலையை அசைத்தபடி அரிசி, சர்க்கரை, பால் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி, அவை வேகுவதற்கு இன்னும் கொஞ்ச நேரம் தேவையென்பதைச் சொன்னேன்.  
“இவர்தான் என்னுடைய கணவர், சுரேஸ்” சொல்லிவிட்டு அந்த அன்னியரை எப்படி அறிமுகப் படுத்தலாமென்று தயங்கினேன்.
“என்னுடைய பெயர் நல்லக அபேய்கோன்,” தயக்கத்துடன் சொன்னார். “ நான் கொழும்பில் இருந்து சுற்றிப்பார்க்க வந்துள்ளேன்” 
“ ஓ, அது சரி. நீங்கள் சீதாவைப்பற்றிக் கேட்டீர்கள். அவ இப்போது தனது மகளுடன் மெல்பேர்ண் இல் வசிக்கிறா. அருவி எப்படிப்பட்ட புத்திசாலிப் பெண் - அவள் ஒரு மருத்துவர்”
அவர் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் அவர் முகத்திலே ஒரு பதட்டம் தெரிந்தது. தன்னுடைய மூச்சை நன்றாக உள்ளேயிழுத்து விட்டுவிட்டு, கேட்டார், “யாரை சீதா கலியாணம் செய்தா?”
“சீதா கலியாணம் செய்யவில்லை……..” சொல்லியபின்தான் தேவையில்லாமல் அதிகம் சொல்லிவிட்டேன் என்பதைப் புரிந்துகொண்டேன்”
சுந்தரி வேதனையுடன் சித்தியைப் பார்த்து முணுமுணுத்தா, “என்னை மன்னித்துவிடு ,முத்து. அந்த நேரம் நான் அதிகம் சிந்திக்கவில்லை.”
அவவைத் தொடர்ந்து சொல்லுமாறு ஊக்குவிக்கும் வண்ணம், சித்தி தலையை மெதுவாக ஆட்டினா.   
“ சீதாவைப்பற்றி இன்னும் அதிகமாகக் கேட்பார் என  நினைத்தேன். ஆனால் அவர் ,”அவவின் மகள் பெயர் அருவி என்று சொன்னீர்கள்?”
சீதாவைப்பற்றி அதற்குமேலும் அவர் கேட்கவில்லையென்று சந்தோஷப்பட்ட நான் ஓமென்று தலையசைக்க அவர் தொடர்ந்தார், “சீதாவின் மகள் ஒரு மருத்துவராக வருவதற்குரிய வயது வந்துவிட்டதென்று என்னால் நம்பமுடியவில்லை.  அவவிற்கு எத்தனை வயது?”
“அருவிக்கு இப்போது இருபத்தி எட்டு” நான் சொன்னதும் அவருடைய முகம் ஏன் வெளிறியதென்று ஆச்சரியப்பட்டேன்”
“முத்து, நான் துப்பரவாக ஒன்றும் சந்தேகப்படவில்லை. அவர் உண்மையாகவே ஒரு நட்பார்ந்த சுற்றுலாவாசி என்று நினைத்தேன். இதைப்பற்றி உனக்குச் சொல்லலாமென்றுதான் இருந்தேன். ஆனால் ஒரு வாரம் கழித்து நீ வந்தபோது மாணிக்கத்தின் மனைவி தனது இளமைக்காலக் காதலனுடன் ஓடிய செய்திதான் நாங்கள் எல்லோரும் கதைத்த ஒரே செய்தி!”
“சுந்தரி, வேறு ஏதாவது சொன்னாயா?”
சிறிது தயங்கியபின், நடந்ததைச் சிந்தித்துப் பார்த்து வருத்தத்துடன் தலையாட்டினா.
“தனது சகோதரி மெல்பேர்ண் இல் Glen Waverley  என்ற இடத்தில் வசிப்பதாயும், சீதா அதற்குக் கிட்ட எங்கேயும் வசிக்கிறாவா என்று கேட்டார். அவர்கள் எங்கே வசிக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது, ஆனால் அருவி Temple என்று ஆரம்பிக்கும் இடத்தில் வேலை செய்கிறாள் என்பது தெரியும் – யாழ்ப்பாணத்திலுள்ள Temple Road மாதிரி இருக்கிறதென்று நான் சீதாவிற்குச் சொன்னபோது அவ சிரித்ததையும் நான் அவருக்குச் சொன்னேன்”  
இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில் பொங்கல் பானையில் பால் பொங்கியது. பிள்ளைகள் சந்தோஷத்திலே சத்தம் போட்டுக்கொண்டே பட்டாசு வெடித்தார்கள். 
“கெதியா, சுரேஸ்! பானையைக் கலக்குங்கள் – அரிசியும் சர்க்கரையும் நல்லா சரிசமமாய்க் கலக்கவேண்டும். பிள்ளைகள், நெருப்புக்குக் கிட்ட வரக்கூடாது”
பொங்கல் வேலை முடிந்தவுடன் நல்லக பக்கம் திரும்பி, “ தயவுசெய்து காலை உணவு எங்களுடன் சாப்பிடுங்கள். சூரியனுக்குப் படைத்தவுடன் சாப்பிடுவோம்.”
ஆவர் பதில் சொல்லவில்லை. காலடியில் இருந்த கோலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
“சூரியன் – சூரியக் கடவுள்”, அவருக்கு விளங்கவில்லையென நினைத்துச் சொன்னேன்.
அப்போதும் பதிலில்லை.
அவருடைய பார்வை வேறு பக்கம் திரும்பவில்லை.
“கோலத்தை நோக்கி எறும்புகள் உடனே ஓடி வந்துவிடும்”, 
 
 அவருடைய மௌனம் அவரின் ஆர்வத்தைக் காட்டுவதாக நினைத்து, “ கோலம் போடுவதின் உண்மையான நோக்கமே வீட்டிலுள்ள நுண்ணிய உயிர்களுக்குச் சாப்பாடு போடுவதற்குத்தான் என்று எனது மாமியார் சொல்வார். ஆனபடியால் நான் கோலத்திற்கு அரிசிமாதான் பாவிப்பேன், வண்ணம் கலந்த செயற்கைப்பொடி அல்ல.”
தன்னுடைய தாயாரை நான் குறிப்பிட்டதால் சுரேஸ் புன்னகைத்தார். அப்போதும் நல்லக நிமிர்ந்து பார்க்கவில்லை. இறுதியாக, அவர் முணுமுணுத்தார், “உங்களுடைய அழைப்புக்கு நன்றி, ஆனால் கொழும்பு போவதற்கு முன்னாடி யாழ்ப்பாணத்தில் எனக்கு ஒரு அலுவல் இருக்குது - ஆகவே நான் போகவேண்டும்.”
தயக்கத்துடன் எங்களைப் பார்த்து லேசாகத் தலையசைத்து விரைவாக ரோட்டிலே நடந்துசென்றார், எங்களை ஒருமுறையும் திரும்பிப் பார்க்காமலே.”
 
தீங்கற்ற ஒரு சந்திப்பு  என்று தான் நினைத்த அந்த அந்நியன் உண்மையிலேயே ஒரு ஏமாற்றுக்காரன் என்று தெரிந்ததும் , அத்தோடு அம்மா பற்றிய நெருக்கமான விபரங்களை அவனுக்குச் சொல்லிவிட்டா என்பது புரிந்ததும் சுந்தரியின் உடம்பு கட்டுப்படுத்த முடியாதவண்ணம் குலுங்கியது.
சித்தியின் முகம் இறுகியது, ஆனால் உறுதியளிக்குமாறு தலையை அசைத்தா, “உனக்கெப்படித் தெரியும், சுந்தரி?”  
இருவரும் ஒருவரையொருவர் சத்தமில்லாமல் வேதனையுடன் பார்த்துக் கொண்டனர் – அவர்களிடையே இருந்த மௌனம் மிகவும் தடிப்பாக இருந்தது. நான் இருந்த இடத்தைவிட்டு அசையவில்லை, மூச்சு விடுவதற்கே தயங்கினேன் ஏனெனில் அவர்களுடைய கவனத்தை என் பக்கம் ஈர்க்காமல் இருப்பதற்காக. 
இல்லை, இல்லை, இல்லை! எனது இதயம் அலறியது. இது உண்மையாக நடக்கவில்லை. விரைவிலே முழித்தெழுந்து இது ஒரு கெட்டகனா என்பதைப் புரிந்துகொள்வேன்.
என்னுடைய கண்களுக்கு முன்னால் நல்லகவின் முகம் வந்தது – என்னை முதலில் பார்த்தபோது தோன்றிய வேதனையான முகம், நான் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் உன்னிப்பாகக் கவனித்த விதம், அவருடைய நேரம் முடிந்தபின்னரும் வெளியே போவதற்கு அவர் காட்டிய தயக்கம்  ஆகியன அவர் ஏதோவொரு கனமான இரகசியத்தைத் தனக்குள்ளே தூக்கிக்கொண்டு திரிகிறார் என்பதைப் புலப்படுத்தியது. 
அடுத்து என் மனதிலே வந்த எண்ணங்கள் எனக்குள் கோபத்தை, விரக்தியை, வெறுப்பை எல்லாவற்றையும் ஒருசேர ஏற்படுத்தியது,  அவர் என்னைப் பின்தொடர்ந்து வந்துள்ளார் போலுள்ளது. என்னையும் அம்மாவையும் வில்லாஸில் சந்தித்தது ஒரு தற்செயலான சம்பவம் என்பதை நம்பமுடியாதுள்ளது.
 
தொடர்ந்தும் உட்காந்திருப்பதற்கு என்னுடைய சக்தி முழுவதையும் பாவிக்க வேண்டியிருந்தது. 
என்னுடைய ஒவ்வொரு நரம்பும் துடித்தது –  அடுத்த விமானத்தைப் பிடித்து மெல்பேர்ண் க்குப் போய் அவரை நேருக்குநேர் பார்த்து…. – அந்த மனிதனை ஒரு மென்மையான நோயாளியாகப் பார்க்கமுடியாது- நிச்சயமாக ஒருபோதும் என்னுடைய தகப்பனாக நினைத்தும் பார்க்கமுடியாது. 
அவருடைய கண்களை நேரே பார்த்து ஏன் என்னைப் பின்தொடர்கிறாய் என்று கேட்கவேண்டும்.
இப்போது சித்திக்கும் சுந்தரிக்கும் சொல்வதில் ஒரு அர்த்தமும் இல்லை,” எனக்குள் யோசித்தேன் , “ஏற்கனவே இருவரும் மனமுடைந்து போயுள்ளார்கள்
மெல்பேர்ண் க்குப் போனதும் அம்மாவிற்கு உடனடியாகச் சொல்வேன்.
நாளைக்கு மாலை எனது பயணம் இருப்பதால் நாளை அதிகாலை கொழும்பிற்குக் கொண்டு போவற்காக கார் அதிகாலை வந்துவிடும்.
நான் விரும்பியபடி  விரைவாக இல்லை, ஆனால் பொறுத்திருக்கத்தான் வேண்டும்.
சும்மா மூச்சைவிடு, நான் எனக்குள் முணுமுணுத்தேன்.
எண்ணற்ற எண்ணங்களும் உணர்வுகளும் என் தலைக்குள்ளே சுழன்று சுழன்று என்னை வாட்டிக்கொண்டிருந்தபடி எவ்வளவு நேரம் அங்கே இருந்தேன் என்று எனக்குத் தெரியாது. சுந்தரி வந்து என்னைக் கட்டிப்பிடித்து, “அருவி, தயவுசெய்து உன்னுடைய அம்மாவிற்கு இந்த மனிதனைப்பற்றிச் சொல்லாதே- அவளுடைய அந்த அதிர்ச்சியான காயத்தை மறுபடியும் ஞாபகப்படுத்தாதே.” என்று சொன்ன பிற்பாடுதான் அவவின் கண்களைப் பார்க்க என்னைப் பலவந்தப் படுத்தினேன்.  
அவ தொடர்ந்தா, “ இத்துடன்  நான் விடைபெறுகிறேன். உனக்குக் கார் காலை 830 க்கு வருகிறது, நான் கொஞ்ச வேலைக்காக 700 பஸ் பிடிச்சு யாழ்ப்பாணம் போகவேண்டும்”
ஈரமான கண்களுடன் என்னைப் பார்த்தா, “இங்கே வந்ததையிட்டு ரொம்ப நன்றி, குஞ்சு. இறுதியாக உன்னச் சந்தித்தது எனக்கு மிகுந்த சந்தோஷம். நான் அவளைப் பார்க்க விரும்புகிறேன் என்று சீதாவிடம் சொல்லு- ஆனால் அவ இங்கே வர விரும்பாததின் காரணம் எனக்குப் புரிகிறது.”
மறுநாள் காலை காரை எதிர்பார்த்தே பொறுமை இழந்துவிட்டேன். எவ்வளவு விரைவில் மெல்பேர்ண் போகமுடியுமோ அவ்வளவு விரைவில் போய் நல்லகவின் அயோக்கியத்தனத்தைப்பற்றி நான் கண்டுபிடித்ததை அம்மாவுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும்.
சந்தேகமில்லாமல், அவர் திரும்பவும் கிளினிக்குக்கு வரக்கூடுமென்று கவலைப்படுவா.
கிடையாது! நான் அவவிற்கு உறுதியழிப்பேன். என்னுடைய நோயாளர் பட்டியலிலிருந்து அவருடைய பெயரை நீக்குமாறு Emily க்குச் சொல்வேன்.
“அருவி டார்லிங், நீ திரும்ப வருவாயென்று சத்தியமாய்ச் சொல்”, மறுநாள் காலை தன்னுடைய முந்தானையால் கண்களைத் துடைத்துக்கொண்டே சித்தி சொன்னா. சித்தப்பாவும் பையன்களும் சுற்றவர நின்றுகொண்டு என்னைப் பிரிந்திருப்பது அவர்களுக்கு எவ்வளவு வருத்தமாயிருக்குமென்று சொன்னார்கள்.
நல்லகவைப் பற்றிய சிந்தனையை எனது மனதிலிருந்து வலுக்கட்டாயமாக  ஒதுக்கிவிட்டு, ஒரு புன்னகையுடன், “ எனக்கும் உங்களைப் பிரிய மனம் இல்லைத்தான். ஆனால் உறுதியாகச் சொல்கிறேன், Brad உடன் மீண்டும் வருவேன்.”
ரோட் ஓரத்தில் நின்ற காரில் ஏறியது ஞாபகமுள்ளது- எஞ்சிய பயணம் பற்றிய நினைவு மந்தமாயுள்ளது; முடிவில்லா ரோட்டின் நீளம், சில நேரங்களில் மென்மையான சத்தத்துடனும் சில நேரத்தில் முறட்டுச் சத்தத்துடனும் ஓடிய என்ஜின், மங்கலான மரங்கள், கட்டுனாயகவில் இருந்த நீண்ட வரிசை, கேற் மாற்றத்தை அறிவிக்கும் திரையின்  மின்மினுத்தல், கடல் போன்ற முகில்களுக்கூடாக சறுக்கிகொண்டுபோன விமானம், இறுதியாக விமானம் தரையிறங்கியபோது ஏற்பட்ட ஆரவாரம் எல்லாமே மங்கலாக ஞாபகத்திலுள்ளது.
கொழும்பிலிருந்து மெல்பேர்ண் க்கான பயணம் நீளமாயிருந்தபோதிலும், ஆகாயத்திலேயிருந்த பத்து மணித்தியால அமைதி – இடையிடையே சாப்பாட்டுக்காகக் கலைக்கப்பட்டு, விளக்குகளும் குறைப்பதும் கூட்டுவதுமாக இருந்தபோதிலும் – ஒருவித விசித்திரமான அமைதியைத் தந்தது. தாறுமாறாகத் துடித்துக் கொண்டிருந்த எனது இருதயம் நான் விமானத்தைவிட்டு இறங்கும்போது தாளத்திற்கு ஏற்றவாறு செல்லும் இசையைப்போல  ஒழுங்காக வந்தது.
அறிவிப்பதற்கு ஒன்றுமில்லை என்றெழுதியிருந்த வாசல் வழியே நான் எனது பயணப்பெட்டிகளை உருட்டிக்கொண்டு வெளியே வந்தபோது Brad எனக்காகக் காத்திருந்தார். மிக இறுக்கமாக அவர் என்னைக் கட்டிப் பிடித்தபோது எனக்கு ஒரே நேரத்தில் அழுகையும் சிரிப்பும் வந்தன.
“நீ திரும்பிவந்தது எவ்வளவு சந்தோஷமாயுள்ளது, அருவி. உன்னுடைய பிரிவினால் நான் எப்படி வருந்தினேன்”
அவருடைய குரலில் இருந்த ஆதங்கம் எனது தோள்களைத் தானாகவே ஆடவைத்தது, என்னுடைய ஆத்மாவின் ஆழத்திலிருந்து ஒரு அழுகை வெளிப்பட்டது. 
அவர் என்னுடைய நாடியைத் மென்மையாகத் தூக்கி முகத்தைத் தன்பக்கம் திருப்பினார், “அருவி, என்ன பிழை? உன்னைப் பார்க்க ……பேய் பிடித்தவள் மாதிரி இருக்கிறாய். உன்னுடைய சித்தியும் குடும்பமும் நல்லாகத்தானே இருக்கிறார்கள்?”
நான் எனது தலையை ஆட்டியபடி அவரைக் கெஞ்சினேன்,” Brad , காரிலே விளங்கப்படுத்திறேன். தயவுசெய்து என்னை அம்மாவின் வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு போங்கள்.”
அம்மா என்னை இந்த நேரத்தில் எதிர்பார்க்கமாட்டா. விமானம் பிப 300 மணிக்கு தரையிறங்குவதாலும், இது குளிர்காலம் என்றபடியால் குடிவரவு மற்றும் சுங்கத்திணை அலுவல்களை முடித்துக்கொண்டு  வெளியேவர இருட்டுப்பட்டுவிடும் என்பதால், Brad என்னை நேரே வீட்டுக்குக் கொண்டு போய், நான் மறுநாள் காலையில் வேலைக்குப் போக வசதியாய் இன்றிரவு  ஓய்வெடுக்க வேண்டுமென்று ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது. என்னுடைய பிரயாணத்தின் அனுபவங்களைப்பற்றி குடும்பத்திற்குச் சொல்லுவதற்காக நாளை இரவு மகா பெரியம்மா வீட்டில் இரவு உணவு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இது நாளைவரை காத்திருக்கமுடியாது. அத்துடன், இந்த அதிர்ச்சியான விடயம் பற்றி மற்றவர்கள் இல்லாமல் அம்மாவுடன் தனிமையில் பேசவேண்டும். 
கார் நிறுத்தும் இடத்தை அடைந்ததும் எனது உடல் நடுங்கியது. மேலேயுள்ள வானம் இருட்டாக இருந்தது. விரைவில் நகரம் அடர்த்தியான நிறங்களைக் கொண்ட போர்வை ஒன்றினால் மூடப்பட்டுவிடும் என்பதற்கான அறிகுறி தென்பட்டது.
முதலில் எனது கை விரல்கள் விறைத்தன, அப்புறம் எனது கால் விரல்கள். ஒரு தடிப்பான வெதுவெதுப்பான ஜாக்கெற் ஒன்றால் Brad  என்னைச் சுற்றியிருந்தாலும் மெல்பேர்ண் இன் கூர்மையான குளிர் என்னுடைய எல்லா எலும்புகளுக்குள்ளும் ஊடுறுவியது.
ஈரமான இலைகள் மற்றும் தார் ஆகியவற்றிலிருந்து வந்த மணத்தையும், இடையிடையே Port Philip விரிகுடாவிலிருந்து உப்புக் கலந்த வாசனையையும் தன்னுள்ளே கொண்டிருந்த காற்று வீச, Brad  தன்னுடைய டெஸ்லா காரை லாவகமாக மேற்குப் புறநகர்ப் பகுதியிலிருந்து பூத்துக்குலுங்கும் தோட்டங்களையுடைய Vermont South என்னும் இடத்தை அடைந்தார். தொடர்ச்சியாக பறவைகளின் குரல் கேட்டுக்கொண்டே இருக்கும் இந்த இடம் ஒரு காலத்தில் சிறந்த பழத்தோட்டமாய் இருந்ததை இப்போதும் ஞாபகப் படுத்திகொண்டே இருக்கிறது. 
அவருடைய டெஸ்லா கார் ஊர்ந்துபோய் சிவப்பும் தவிடும் கலந்த நிறத்தைக்கொண்ட இரண்டு மாடிச் செங்கல் கட்டிடத்தின் வாகனம் நிறுத்தும் பாதையில் நின்றபோது எனக்கு சாடையான ஒரு மனக்கிலேசம் ஏற்பட்டது. நான் மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும்போது அம்மாவும் நானும் இங்கே குடியேறினோம்.
நான் புதுவீட்டிற்குக் குடிபோனபின்பும் ஒவ்வொரு இரவும் நல்ல உணவு சமைப்பது அம்மாவின் வழக்கம். மிஞ்சிய உணவை எனக்கோ அல்லது வேறு குடும்ப உறவினருக்கோ அல்லது தன்னோடு வேலை செய்யும் கூட்டாளிகளுக்கோ கொடுப்பா.
“நான் ஒருத்திதான் இங்கே தனியே வசிக்கிறேன் என்பதற்காக அடுப்படியைப் பாவிக்காமல் விடக்கூடாது,” அம்மா அடிக்கடி சொல்லுவா. “எனக்கு ஒவ்வொரு இரவும் புதிய, வீட்டிலே சமைத்த உணவு வேண்டும், இல்லாவிடில் இரவு முழுவதும் எனது வயிறு புகார் செய்துகொண்டே இருக்கும்.”  
வழக்கமாக, அடர்த்தியான செங்கல் சுவரையும், திரைச்சீலையையும் தாண்டிக்கொண்டு காற்றிலே மிதந்துவரும் காரமான மசாலாத்தூள்களின் மணமும், கொதிக்கும் கறியின் மணமும் எங்கே? 
வீட்டின் ஒவ்வொரு பிளவின் ஊடாகவும் வெளிப்பட்டு வந்து, வீட்டிற்கு வரும் விருந்தாளிகள் முன்கதவை அடையமுன்னரே அவர்களை வரவேற்கும் அந்த இசை இப்போது எங்கே?
செவிக்கினிய மேளங்கள், மெல்லிய புல்லாங்குழல்கள், ஒலிக்கும் கைத்தாளங்கள் இவற்றுடன் சேர்ந்து தமிழிலே பாடுகின்ற இசை அம்மாவையும் என்னையும் பல இருண்ட நாட்களிலே இணைத்திருக்கிறது. ஆனால் இன்றிரவு ஒரு பயங்கரமான அமைதி இங்கே நிலவுகிறது.
அம்மா வீட்டிலேதான் இருக்கிறா என்பது எனக்குத் தெரியும், ஏனெனில் திரைச்சீலை திறந்துள்ளது, விளக்கும் எரிகின்றது. அவவின் காரை எங்கும் காணவில்லை. ஆனால் அவ பல நாட்களில் காரை காரேஜில் நிறுத்துவதால், அது ஒன்றும் அதிசயம் இல்லை.
விமானம் தரை இறங்கியதும் நான் அவவிற்குச் செய்தி அனுப்பவில்லை; ஏனெனில் எனது ஒரே சிந்தனை என்னவென்றால் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் அவவை பார்க்க வேண்டுமென்பதுதான். ஆனால் நான் வந்துவிட்டேனோ என்று பார்ப்பதற்கு அவ ஏண் கூப்பிடவில்லை?
எனது இருதயம் படபடவேன்று அடித்தது. சும்மா பைத்தியக்காரத்தனமாக  யோசிக்காதே  முன் வாசல் கதவடியில் Brad இன் கையைப் பிடித்தவாறே என்னைச் சாந்தப்படுத்திக் கொண்டேன். நிச்சயமாக விமானம் இறங்கிவிட்டதா என்று விசாரித்திருப்பா – நாளைக்கு நிச்சயமாக கூப்பிடுவா.
Brad என்னை ஒரு மென்மையான புந்னகையுடன் பார்த்தார். எங்களுடைய கார்ப் பயணத்தின்போது அவருக்கு நல்லக பற்றி ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமால் பேசியபடியும் நீண்ட வேதனையுடன் மௌனமாக இருந்தபடியும் மாறிமாறிக் குழப்பத்தில் இருந்தேன். அவர் புருவங்களில் இருந்த நெரிப்பு, கொஞ்சம் சுருங்கிய அவரின் கண்கள், அவரது முகத்திலே தெரிந்த கருணைமிக்க அக்கறை இவை அனைத்தும் அவர் என்மேல் கொண்டுள்ள அசைக்கமுடியாத அன்பையும் ஆதரவையும் காட்டுவதாக இருந்தன. 
புத்திசாலித்தனமாக, அவர் ஒன்றும் அதிகமாகச் சொல்லவில்லை- இந்த விடயத்தைப்பற்றி மற்றவர்களுடன் கதைப்பதற்கு முன்பு நான் அம்மாவுடன் கதைக்க விரும்புகிறேன் என்பது அவருக்குத் தெரியும்.
“அருவி, இப்படியே நாங்கள் இங்கே நின்று கொண்டிருக்கமுடியாது. ஒன்றில் கதவுமணியை அடிக்கவேண்டும், அல்லது உன்னுடைய திறப்பை எடுத்து கதவைத் திறக்கவேண்டும்”, Brad இப்படிச் சொன்னபின்தான் நான் முன்கதவையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன் என்பதை உணர்ந்தேன்.
என்னுடைய இருதயம் வேகமாகக் குத்துக்கரணம் அடித்தது, வயிற்றிலே முடிச்சுகள் உண்டாயின, கைகள் நடுங்கின- ஆனால் Brad சொல்வது உண்மையென்று புரிந்துகொண்டேன். முழுநேரமும் நாங்கள் அங்கே நின்று கொண்டிருக்கமுடியாது. அத்துடன், அம்மாவிற்கு இந்தச் செய்தியை எவ்வளவு விரைவாகச் சொல்லமுடியுமோ அவ்வளவிற்கு நல்லது.
நடுங்கும் கைகளுடன் எனது கைப்பையில் தேடிச் சாவியைக் கண்டுபிடித்து, எப்போதெல்லாம் இருட்டாக இருக்கிறதோ அப்போதெல்லாம் பின்பக்கக் கதவால் வராமல் முன்கதவால் வருவதுமாதிரி இன்றும் வீட்டிற்குள் புகுந்தேன்.
உள்ளே போகும்போதே , “அம்மா,அம்மா”, என்று சத்தமிட்டபடியே சென்றேன்.
எனக்குள்ளே பெருத்த ஆவல். ஒரு இசையும் கேட்கவில்லை, அம்மாவுடைய சமையல் மணம் இல்லை – ஆனால் அவவின் அரவணைப்பு எங்கும் பரவிக் கிடந்தது, ஒவ்வொரு மூலையிலிருந்தும் வெளிப்பட்டு என்னைச் சுற்றி வளைத்தன.
ஆனால் இன்று ஏதோ வித்தியாசமாயுள்ளது.
காற்றை முகர்ந்து பார்த்தேன். குழப்பமாயிருந்தது. 
Brad  சொன்னார்,” உன்னுடைய அம்மா வீடு சுத்தம் செய்கிறா போலத் தெரிகிறது, தொற்றுநீக்கியின் மணம் மணக்கிறது,” அவருடைய மூக்கைச் சுளித்தார், “உன்னுடைய அம்மா Glen20 முழுப்போத்தலையும் காலி பண்ணியிருக்கவேண்டும்--------”
பாதி வாக்கியத்திலேயே உறைந்துபோனார்.
அந்தத் தருணத்தில் நானும் கேட்டேன் – யாரோ ஒருவர் மாடிப்படி வழியே கீழே இறங்கிக் கொண்டிருந்தார்.
மாடிப்படியை நோக்கித் திரும்பி ஆவலுடன் கூப்பிட்டேன், “அம்மா!”
இப்போது உறைந்துபோனது நான்.
நான் கண்களைச் சிமிட்டினேன், நம்பமுடியாமல் மூச்சுத்திணறினேன். ஒருவேளை பிழையான வீட்டினுள் நுழைந்துவிட்டேனா? -இருக்காது, எல்லாமே அம்மாவின் வீட்டில் இருந்ததைப்போலவே இருக்கிறது. அப்படியாயின், யார் இது?
மாடிப்படிகளில் இருந்து இறங்கிய உருவம் பரிச்சியமானதுபோல இருந்தது. அவளுடைய நீண்ட பொன்னிறமுடி தளர்ந்து தோளில் தொங்கிக் கொண்டிருந்தது. நன்றாகப் பராமரிக்கப் படாதபோதும், பழைய பளபளப்பு இன்னும் கொஞ்சம் ஒட்டிக்கொண்டு இருக்குமாப்போல அவளது தங்க இழைகள்  அந்த மங்கிய வெளிச்சத்தில் ஒரு மங்கலாகப் பிரகாசித்தது. அவளது கண்களுக்குக் கீழேயிருந்த கருமை நிறம், உள்ளே போயிருந்த கன்னங்கள்  அவளுக்கு சோர்ந்துபோன விரைவில் உடையக்கூடிய தோற்றத்தைக் கொடுத்தது.
நான் திகைப்புடன் அவளை உற்றுப் பார்த்தபோது அவள் கண்கள் என்னை ஈர்த்தன – சிறு கீறல்களுடன் இருந்த பச்சை நிறக்கண்கள் , அவற்றில் எச்சரிக்கை காணப்பட்டது.
அவளுடைய நீண்ட மெல்லிய கைகளினால் மாடிப்படியின் கைப்பிடியை கவனமாகவும், துல்லியமாகவும் பிடித்தவாறு ஒவ்வொரு படியாக இறங்கிவந்தாள். அவள் அருகில் வரும்போது பரிச்சயமான சந்தனவாசனையும் சேர்ந்துவந்து என்னை மேலும் குழப்பின.
அந்த அந்நிய ஆள் அம்மாவைப்போல் மணக்கிறாள்.
“ஹலோ, அருவி!”
அந்த வார்த்தைகளில் இருந்த மெல்லிய சந்தம்  பழைய நினைவுகளை வெள்ளமெனத் திறந்துவிட்டது – சிறிய மேசைகள், கதிரைகள்   கொண்ட வகுப்பறைகள், சின்னஞ்சிறு கைகளால் வரையப்பட்ட சித்திரங்களைக்கொண்ட சுவர்கள், சறுக்கிகள் உடைய விளையாட்டு மைதானம், குரங்குகள் போலத் தாவி விளையாடுவதற்கான கம்பிகள், பிசின் மரங்கள், நாட்டுக்கிளிகளின் அலறல்கள் – எல்லாவற்றுக்கும் மேலாக தங்களுடைய நட்பு ஒருகாலமும் பிரியாதென நினைத்திருந்த இரண்டு ஆருயிர் நண்பர்களுடைய சிரிப்புச் சத்தம்.
“Zoe!” எனது மூச்சுத் திணறியது.
 
அத்தியாயம் 14 – சிதறிய அந்த ஒரு மணித்தியாலம்
அருவி
24 ஜூலை 2025
மெல்பேர்ண்
 
“Zoe Simpson, உன்னுடைய ஆரம்பப்பள்ளி நெருங்கிய நண்பி?” Brad நம்பமுடியாமல் கேட்டார்.
அவர் சொன்னது எனக்குக் கேட்டது, ஆனால் என்னுடைய மனம் மில்லியன் கணக்கான என்னுடைய கேள்விகளால் நிரம்பி வழிந்தது.
Zoe கஸ்டப்பட்டு விழுங்கினாள், “ என்னை மன்னித்துக்கொள், அருவி. உனக்கு இது எவ்வளவு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும் என்பது எனக்குப் புரியுது. நீ திரும்பி வந்தவுடன் உனக்குச் சொல்லலாமென்று சீதாம்மா இருந்தா. நீ யாழ்ப்பாணத்தில் இருந்தபோது தொலைபேசியில் சொல்வதற்கு அவ விரும்பவில்லை”
“என்னத்தைச் சொல்வது?” முட்டாள்போலக் கேட்டேன்.
“அவ என்னைத் தெருவிலே கண்டுபிடித்ததை – வீடில்லாமல், குழப்பத்தோடு, திக்குத்திசை தெரியாமல்…….எனது அம்மாவின் வீட்டைவிட்டு நான் அவசரமாக வேளியேறியிருந்தேன்.”
சிறிது நிறுத்தித் தொடர்ந்தாள். “என்னிடம் பணமில்லை, போவதற்கு இடமில்லை, நான் இருக்கிறேனோ இறந்துவிட்டேனோ என்று கரிசனப்பட யாருமே இல்லை”
Zoe  ஒரு நீண்ட மூச்சிழுத்தாள், ஆனால் நடுக்கமில்லை. “ அன்றிரவை Forrest Hill கடைத்தொகுதி கார் நிறுத்துமிடத்தில் கழித்தேன். மோசமான குளிராக இருந்தது…. ஆனால் என் தலையிலிருந்து வியர்வை வடிந்துகொண்டே இருந்தது. என் தலை தொடர்ந்து பயங்கரமாக இடித்துக்கொண்டே இருந்தது. அப்போதுதான் சீதாம்மாவைப் பார்த்தேன் வேலைக்குப் போகமுன்பு Coles Super Market க்கு ஏதோ அவசரமாக வாங்குவதற்குப் போய்க்கொண்டிருந்தா.”
தனது கண்ணீரை நிறுத்துவதற்காக தனது கண்களை வேகமாக மூடிமூடித் திறந்தாள், “நான் மிகுந்த குழப்பத்தில் இருந்ததால், முதலில் அவவை நான் அடையாளம் காணவில்லை. ஒரு குப்பைப்பெட்டிக்குப் பக்கத்தில் நின்று முந்திய இரவில் எறியப்பட்ட சாப்பாட்டுச்சாமான் எதாவது இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருக்கையில் சீதாம்மா சொல்லிக்கேட்டது, “Zoe ----இது நீதானா?”
அந்த நேரத்தில் அவளால் தனது கண்ணீரை அடக்கமுடியவில்லை. அவளுடைய தோள்கள் நடுங்கின, அழுகைச் சத்தம் பீரிட்டுக் கிளம்பியது, அவளுடைய வாடிப்போன முகத்திலிருந்து கண்ணீர் தாராளமாக வடிந்தது.
ஆனால் எனக்கு அவள்மேல் அனுதாபம் வரவில்லை.
கடைசியாக நான் Zoe  வைப் பார்த்தது பத்து வருடங்களுக்கு முன்னதாக இதே Forrest Hill கடைத்தொகுதியில்தான். நகரும் படிக்கட்டின் வழியே நான் மேலே  போய்க்கொண்டிருந்தபோது அவள் மறுபக்கத்தில் கீழே வந்து கொண்டிருந்தாள். அவளுடைய தலைமயிர் அலங்கோலமாயிருந்தது, தலையை மூடியிருந்த குல்லா தேய்ந்து போயிருந்தது, கழிசான் நிரம்ப அழுக்காயிருந்தது. அவள் உடம்பிலிருந்து பழைய சாராய மணம் அடித்தது. திகைப்புடன் அவளை நான் உற்றுப் பார்த்தபோது அவள் பார்த்த பார்வையில் வெறுப்பும், எதிர்ப்பும் கலந்திருந்தது.
அவள் என்னைக் கடந்து செல்லும்போது, தன்னருகில் பச்சை குத்தியிருந்த ஒருவனிடம் – அவனும் அவளைப்போலவே ஆணவத்துடன் நடந்து சென்றான் – ஏதோ சொல்ல அவன் சத்தம்போட்டுச் சிரித்தான். அவர்களுடைய அந்த ஏளனச்சிரிப்பு அந்தப் படிக்கட்டிலில் இருந்த ஒவ்வொரு உலோகச் சட்டத்திலும் எதிரொலித்து உடைந்த கண்ணாடித் தூள்களைப்போல் எனது காதுகளைத் தாக்கின.
நான் திரும்பியே பார்க்கவில்லை.
இந்த கொடூரமான அந்நியன் எனது முன்னாள் ஆருயிர்த் தோழியில்லை. ஒரு உறுதியுடன் அங்கிருந்து சென்றேன். அவளோடு ஒருவிதத் தொடர்பும் இருக்கக் கூடாதென்று அப்போது நினைத்தேன்-  நிச்சயமாக இப்போதும்.    
Brad அவளை நோக்கித் திரும்பியதையும் அவர் புருவத்திலே தெரிந்த கவலையையும் கவனித்தேன். அவரின் கண்கள் சீராகவும் மென்மையாகவும் இருந்தன. இருந்தபோதும் எனக்கு கோபம் மட்டுமே இருந்தது.
“அதெல்லாம் நீ ஏன் இங்கிருக்கிறாய் என்பதை விளங்கப்படுத்தவில்லை!” நான் சத்தமிட்டேன்.
என்னுடைய குரலில் இருந்த கசப்புணர்வைக்கண்டு Zoe நடுங்கியதைக்கண்டு Brad  ஒரு மென்மையான கடிந்துரையுடன் என்னைப் பார்த்தார்.
“ஒருவேளை நாங்கள் உட்கார்ந்தால் நல்லாயிருக்கும்,” சொல்லியவாறே என்னை இறுகப்பற்றி சோபாவிற்கு அழைத்துச் சென்றார்.
“Zoe, நீயும்தான்,” அவளையும் உட்காரும்படி சைகை காட்டினார்.
தனது புறங்கையால் முகத்திலிருந்த கண்ணீரைத் துடைத்துவிட்டு எங்களுக்கு எதிரே இருந்தாள். நான் எனது கோபம் தீராமல் அவளை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தபோது அவள் தனது உதடுகளைக் கடித்துக்கொண்டு தன் கண்களை உறுதியுடன் சிமிட்டினாள். 
இறுதியாக அவள் மெதுவாக உடைந்துபோன குரலில் பேசினாள். “நீ என்னைப்பற்றி என்ன நினைக்கிறாய் என்று எனக்குத் தெரியும். நீ சரிதான் ---- நான் ஒரு கள்ளி, ஒரு குடிகாரி, பள்ளிப்படிப்பை முடிக்காதவள்…..சமூகத்தைக் கெடுக்கவந்தவள்.”
இப்படி நேரடியாகப் பேசுவாள் என்று நான் எதிர்பார்க்கவில்லை, ஆனால் இன்னும் அவள் பேசி முடிக்கவில்லை.
“என்னை உங்கடை வீட்டிற்கு வருமாறு அம்மா அழைத்தது எனக்கு எவ்வளவு முக்கியம் என்பது உனக்குத் தெரியாது. நான் விரும்பத்தகுந்தவள், வேண்டத்தகுந்தவள் என்பதை அம்மா எனக்கு உணர்த்தினா.”    
இந்த வார்த்தைகளைத் தொடர்ந்து மௌனமாகவே அழுதாள். அவளுக்கு எதிரே இருந்த நாங்கள் அவளுடைய அபத்தமான உணர்வுகளைப் புரிந்துகொள்ள மாட்டோமென்பது மாதிரி தனது கைகளைக் காற்றிலே அசைத்தாள்.
“அம்மா உன்னை இதயபூர்வமா நேசித்தா,” நான் என்னைக் கட்டுப்படுத்தப் பார்த்தாலும், எனது குரல் உடைந்துபோனது. “தனது சகோதரிகளிடம் நீ எவ்வளவு பிரக்தியேகமானவள் என்று தமிழிலே சொல்லிப் பல தடவைகள் கேட்டிருக்கிறேன் – உன்னுடைய அம்மாவின் வாழ்க்கைக்கு மத்தியில் நீ வாழ்ந்தாலும் நீ கறைபடவில்லை.”
அவளை ஒரு வெறுப்புடனும் நோயாளியைப் பார்ப்பதுமாதிரித் தூரத்தில் வைத்துப் பார்க்கவேண்டுமென்றும் நான் நினைத்திருந்தபோதிலும் என்னுடைய தொண்டை இறுகி உணர்ச்சிகள் வெளியே வந்து விழும்போல இருந்தது. “நான் உன்னை எனது சகோதரி போல நேசித்தேன்.”
“எனக்குத் தெரியும்,அருவி,” அவள் மென்மையாகச் சொன்னாள், “நீ, உனது அம்மா, உன்னுடைய பெரியம்மாக்கள் – அப்படியான ஒரு குடும்பத்தைத்தான் எனக்கு எப்போதும் வேண்டுமென்று நினைத்தேன். உங்களுடைய அன்பையும் கருணையையும் கிடைப்பதற்கு நான் எவ்வளவு அதிர்ஸ்டம் செய்தேன் என்பதை என்னால் நம்பமுடியாதுள்ளது.”
“அப்படியென்றால் ஏன், Zoe, ஏன்?”
நான் என்னத்தைச் சொல்கிறேனென்பது அவளுக்குத் தெரிந்தது.
“ஏனென்றால் நான் ஒரு அழுக்குப் பிடித்தவள்,” சாதாரணமாகச் சொன்னாள். “உன்னுடைய குடும்பத்தின் ஒரு ஆளாக இருக்கத் தகுதியில்லாதவள்.”
“முட்டாள்தனமாய்ப் பேசாதே, Zoe. நீ அழுக்குப் பிடித்தவள் இல்லை – நிச்சயமாக அந்தக் காலத்தில் இல்லை.” நான் நிறுத்தி சரியான வார்த்தையைத் தேடினேன்.
அம்மாவை அவள் ஒதுக்கியதாலும் என்னைவிட்டு விலகிப்போனதாலும் அவள்மேல் ஏற்பட்ட கோபமும் அவநம்பிக்கையும் பலவருடங்களாக எனது மனதின் ஒரு மூலையிலே சத்தம் போடாமலே என்னை வதைத்துக் கொண்டிருந்தது. அவளுடைய அந்த நிராகரிப்புக்கு என்ன காரணம் என்று இன்று கண்டறிய வேண்டுமென்று தீர்மானித்தேன்.
“நான் எவ்வளவு அழுக்கானவள் என்று எனக்குள்ளே நினைத்து அழுதது உனக்குத் தெரியாது,” Zoe முணுமுணுத்தாள். “எவ்வளவோ இறுக்கித் தேய்ச்சேன். ஆனால் உங்களுக்கு எவ்வளவு அநியாயம் செய்தேனென்கிற அருவருப்பையும், நீயும் சீதாம்மாவும் என்னை நேசிப்பதை நிறுத்திவிடுவீர்களோ என்ற பயத்தையும் என்னால் தேய்த்துக் கழுவமுடியவில்லை.”  
“நீ என்னத்தைப்பற்றிக் கதைக்கிறாய்……….?”
திடீரென்று, என்ன நடந்திருக்குமென்ற எண்ணம் உறைத்தது.
பழைய ஞாபகம் எனக்குள்ளே ஓடியது: அந்த மில்க் பார் நிகழ்ச்சிக்குப் பிறகு அம்மா என்னை இழுத்துக்கொண்டு அவர்கள் வீட்டிற்குப் போனபோது Susan க்குப் பின்னால் நின்ற அந்த மனிதன். Zoe எங்களை வேளியே போங்கள் என்று சொன்னபோது, கதவடியில் நின்ற Susan எங்களை அவமதிக்கும் விதமாக ஏளனம் செய்ததையும், திரும்பிப்பார்த்து தனக்குப் பின்னால் நிழல் போல் நின்றவனைப் பார்த்து  நடுக்கமாகப் புன்னகை செய்ததையும் நான் பார்த்தேன். 
நான் அன்றிருந்த கடும் துயரம் காரணமாக அதற்கு நான் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
நான் Zoe வை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கையில் எனது நெஞ்சு சில்லென்று போயிற்று.
நூலகத்திலே அவளைப் பக்கத்திலே வைத்துக்கொண்டு நான் புலமைப்பரிசில் சோதனக்காக தயார் செய்து கொண்டிருந்த அந்தக் காலத்திலே அவள் சொன்ன வார்த்தைகள் துண்டுதுண்டாக, ஆனால் தெளிவாகவும் விபரமாகவும்  எனக்குள் வெள்ளம்போல வந்தன.
“அம்மாவிற்கு இப்போது ஒரு புதிய நண்பர், Simon மாமா. நான் மிகவும் அழகாக இருக்கிறேன் என்றும், எனக்கு அப்பா இல்லாதபடியால் அவர் என்னைக் கவனித்துக்கொள்வார் என்றும் சொன்னார். Simon மாமா என்னைத் தன் மடியில் இருக்கும்படி சொன்னார். எனக்கு பிரா  வாங்கவேண்டுமோ என்று தீர்மானிப்பதற்காக  என்னுடைய மேலுடையைக் கழட்டிக் காட்டும்படி Simon மாமா சொன்னார்.”
புலமைப்பரிசில் சோதனையில் முதலாவதாக வரவேண்டுமென்ற எனது ஆர்வத்தினால், அவள் சொன்னவை என் மனதிலே பதியவில்லை. நான் படிப்பிலே மிகக் கவனமாக இருக்க வேண்டுமென்பதற்காக அவள் மௌனமாக இருக்கவேண்டும் என்ற விருப்பத்தால், அவள் சொல்வதற்கெல்லாம் பொறுமையிழந்து தலையாட்டினேன்.
என்னுடைய பாவப்பட்ட, பாவப்பட்ட Zoe 
ஒருநாள் காலையில் நடந்தது எனக்கு நல்ல ஞாபகத்தில் உள்ளது. பாடசாலை வாசலிலே பொறுமையில்லாமல் அவளுக்காகக் காத்திருந்தேன். இன்று ஒருநாளாவது அவளைவிட முந்தி வந்துவிட்டேனென்ற உற்சாகத்தில் இருந்தேன். படுக்கையிலிருந்து எழும்புவதற்கு நான் கஸ்டப்படுவதை  அவள் எப்போதும் கிண்டலடித்துக் கொண்டிருப்பாள். அவள் வந்தவுடன், “யார் அந்த நித்திரைச் சோம்பேறி?” என்றவளைக் கேட்பதற்குத் தயாராக இருந்தேன்.
“வந்துவிட்டாயா, Zoe! கெதியில் வா – எவ்வளவு நேரம் உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று தெரியுமா?”
அவள் என்னை நோக்கி ஓடிவருவாளென நினைத்தேன், ஆனால் அது நடக்கவில்லை. தன்னுடைய கண்களைத் தாழ்த்தி சப்பாத்தைப் பார்த்தவாறே வந்தாள்.  
அவள் அருகில் வந்தபோது அவள் கண்கள் வீங்கியிருந்ததையும் தலைமயிர் கலைந்திருப்பதையும் கண்டேன்.
“என்ன நடந்தது, Zoe? உன்னுடைய அம்மா உன்மேல் கோபித்தாவா?”  
என்னவோ முணுமுணுத்தாள். எனக்கு விளங்கவில்லை. எங்களுடைய வித்தியாசமான வகுப்பறைகளுக்கு நடந்தபோது அவள் என்னை நேரடியாகப் பார்ப்பதைத் தவிர்த்தாள.  
“இடைவேளையின் போது பார்ப்போம், Zoe!”, நான் சத்தம் போட்டுச் சொல்லிவிட்டு, பிந்திப்போனால் கிடைக்கும் தண்டனையைத் தவிர்ப்பதற்காக  எனது வகுப்பிற்கு அவசரமாக ஓடினேன்.
தேனீர் இடைவெளியின்போது அவளை நான் பார்க்கவில்லை – மதிய உணவின்போதும் பார்க்கவில்லை.
அன்றுதான் பாடசாலை முடிந்ததும் எங்கள் வீட்டிற்கு வரும் வழக்கத்தை நிறுத்தினாள். அம்மா அவளுக்காகத் தயாரித்த உணவைத் தின்பதை நிறுத்தினாள். என்னிடமிருந்து அன்றிலிருந்துதான் விலகத் தொடங்கினாள். 
அந்த மில்க் பாரில் நடைபெற்ற சம்பவம் இதற்குச் சிலநாட்கள் பிந்தி நடைபெற்றது – இப்போது எல்லாம் புரிகிறது.
அந்த பயங்கரமான எண்ணம் என் மனதுள் வந்தபோது எனக்குள்ளே வந்த குமட்டலை அடக்கமுடியவில்லை.  
கடவுளே! இது உண்மையாக இருக்கக்கூடாது , என்று பிரார்த்தித்தவாறு அவளைக் கேட்டேன், “Zoe, சொல்லு---எனக்குச் சொல்லு, அந்த மனிதன்---அவன்பெயரென்ன? Simon? அவன் ஏதாவது -?
 பேயறைந்ததுபோல விறைப்பாக இருந்த முகத்திலே இப்போது  உடைந்து போகக்கூடியதான சோகம் நிறைந்த புன்னகை தெரிந்தது. அவளுடைய தாடை தளர்ந்தது. அவள் அமைதியாகச் சொன்னபோது அவள் கண்களிலே ஒரு விதமான நிம்மதியின் நிழல் - மெல்லியதாயும் நடுக்கத்துடனும் – தெரிந்தது.
“அவர் என்னைத் தொடவில்லை – உடல்ரீதியாகத் தொடவில்லை. ஆனால் தான் வாங்கிவந்த உடைகளை என்னை அணிய வைத்தான்--- பின்பு ஒவ்வொன்றாக மெதுவாக அவற்றை களையச் சொன்னான், முழுநேரமும் என்னைப் பார்த்தபடியே இருந்தான்.”
அவளுடைய குரல் உடைந்துபோனது. “அங்கேயே இருந்தான், கடுமையாக மூச்சு விட்டுக்கொண்டே ஒருவிதமான பயங்கரச் சத்தத்தை எழுப்பினான்…..என்னை ஒரு ஆளாகவே கருதாமல் என்னை உற்றுப் பார்த்தபடியே இருந்தான்.
அப்படி அழுக்குப் பிடித்தவள் மாதிரி நான் ஒருபோதும் இருந்ததில்லை. அவனுடைய முகம், என்னைப் பார்த்த அவன் கண்கள் – அப்படியே அங்கிருந்து மாயமாகிப் போகவேணுமென்று ஆசைப்பட்டேன்.”
என்னுடைய கண்ணீர் எனது பார்வையை மறைக்க, நான் அவளை என்னுடைய கைகளால் தழுவிக்கொண்டேன்.
“நான் எப்படி அந்தளவு முட்டாளாயிருந்திருக்க முடியும், Zoe?
என்ன நடக்கிறதென்பதை எப்படி அறியாமல் இருந்தேன்?
என்னை மன்னித்துவிடு, Zoe!”
என்னுடைய கைகளின் அடிப்பாகத்தால் என் கண்களை அழுத்தி முகத்திலே ஆறாக ஓடும் கண்ணீரை நிறுத்த முயன்றேன்.
“அருவி, நீயோ ஒரு சிறு குழந்தை. உனக்கெப்படித் தெரியும்?. ஆனபடியால்தான் நான் உங்கள் வீட்டிற்கு வருவதைத்  தவிர்த்தேன். சீதாம்மா என்னைப் பார்த்திருந்தால் அவவிற்கு எல்லாம் தெரிய வந்திருக்கும் என்பது எனக்குத் தெரியும்.” 
என்னுடைய நடுங்கும் தோள்களைத் தட்டியபடியே அவள் தொடர்ந்தாள், “ நீயும் சீதாம்மாவும் என்னைத்தேடி வந்த அன்று சீதாம்மாவின் கைகளுக்குள் தஞ்சம் புகத் துடித்தேன்--- ஆனால் எனக்கு அவமானமாயிருந்தது. அத்தோடு, என்னையும் அம்மாவையும் காயப்படுத்தியதுமாதிரி உங்களிருவரையும் Simon காயப்படுத்தி விடுவானோவெனப் பயந்தேன். ஆனபடியால்தான் அந்த கொடூரமான வார்த்தைகளால் உன்னை ஏசினேன். என்னை மன்னித்துவிடு, அருவி, என்னை மன்னித்துவிடு.”
அதன்பிறகு நாங்கள் இருவரும் பேசவில்லை. பேசவேண்டிய தேவை இல்லை. எங்களுடைய கண்கள் மற்றவர் முகத்தை  ஆராய்ந்து கொண்டிருந்தன – தொலைந்துபோன அப்பாவித்தனத்தை, தொலைந்துபோன வாழ்க்கையை, முக்கியமாகத் தொலைந்துபோன எங்கள் நட்பை நினைத்து, அதனால் வந்த வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டோம். 
பின்னணியில், தண்ணீரைச் சுட வைப்பதற்காக கெத்திலை Brad   போட்டிருந்தார். எங்களைச் சுற்றியிருந்த சத்தங்கள் எங்களைப் பாதிக்கவில்லை. கடந்தகாலத் துன்பங்களை ஒன்றாகப் பகிர்ந்து கொள்வதற்கான அமைதி எங்களுக்குத் தேவைப்பட்டது. 
முன்கதவு திறக்கப்பட்டு அம்மாவின் குரல் கேட்கும்வரை நேரம் அசையவில்லை. 
“அருவி, வந்துவிட்டாயா?. என்னதொரு ஆச்சரியம்! இன்று நான் உன்னை எதிர்பார்க்கவில்லை.”
மண்டபத்திற்குள் காலடி எடுது வைத்த அம்மா என்னையும் Zoe வையும் அருகருகே பார்த்ததும் ஒரு கணம் தயங்கினா. உடனடியாகவே அவவிடமிருந்து சந்தோஷமான, ஆனால் சிறிது பதட்டமும் கலந்து, வார்த்தைகள் வெளிப்பட்டன.
“நீங்கள் இருவரும் திரும்பவும் ஒன்று சேர்ந்தததையிட்டு ரொம்ப சந்தோஷமாயுள்ளது!
ஆனால் உன்னால் ஊகிக்கமுடியமா பார், உனக்கொரு ஆச்சரியம் வைத்துள்ளேன். வேறு யார் இங்கே இருக்கிறார் என்று பார்!”
ஓடிவந்து என்னை இறுகக் கட்டிப்பிடித்துக்கொண்டு Zoe வையும் Brad ஐயும் நோக்கிப் பலமாகத் தலையாட்டினா.
“அம்மா, Zoe வைப்பற்றி ஏன் எனக்குச் சொல்லவில்லை……”
என்னால் முடிக்கமுடியவில்லை – அவவிற்குப் பின்னால் பார்த்தது எனது இரத்தத்தை உறைய வைத்துவிட்டது.
நான் கண்களைச் சிமிட்டினேன், இது ஒரு கெட்ட கனாவாக இருக்கும் என்ற பாதி நம்பிக்கையினால். வார்த்தைகள் என்னைக் கைவிட்டு விட்டன – என்னை ஒரே நேரத்தில்  தாக்கிய உணர்ச்சிகளை விபரிப்பதற்கு ஒரு மொழியும் கிடையாது. 
அம்மா என் கைகளை மென்மையாக அழுத்தினா. “ஓம், இவர் நல்லக, அருவி”
அவவிற்கு பைத்தியம் பிடித்ததுபோல அவவை முறைத்துப் பார்த்தேன். எதுவுமே புரியவில்லை.
“நீ யாழ்ப்பாணம் போகமுன்பேயே சொல்ல நினைத்தேன்,” தடுமாற்றத்துடன் தொடர்ந்தா, “ஆனால் அப்போது எனக்குச் சரியான விளக்கம் இல்லை --- பல விடயங்கள்பற்றி. ஆனால் நல்லகவிற்கும் எனக்கும் பல பொதுவான குணங்கள் உள்ளதால் நாங்கள் நண்பர்களாக வந்துள்ளோம்”
என்னைக் கெஞ்சியவாறே அம்மா என்னைப் பார்த்தா.
அவவைத் தள்ளிவிட்டு நான் பின்புறமாகச் சாய்ந்தேன்.
எங்கிருந்தோ வந்த Brad  என்னைத் தன் கைகளிலே தாங்கிக்கொண்டார்.
 மூச்சுவிடு, எனக்கு நானே சொல்லிக்கொண்டேன் இந்தக் கொடியவன்தான் அவள் வாழ்க்கையைக் கெடுத்தவன் என்று அம்மாவிற்குத் தெரியாது. நான் எப்படிச் சொல்லலாம்ண
அடுத்ததாக எனது மனதில் வந்த எண்ணத்தினால் ஏற்பட்ட கோபம் என் கண்களைக் குருடாக்கியது. என்ன தைரியம் இருந்தால் இந்த அயோக்கியன் அம்மாவை ஏமாற்றி அவள் வாழ்க்கைக்குள் நுழைந்திருப்பான்? 
அறையின் ஓரத்திலே அமைதியாக நின்றிருந்த நல்லகவைப் பார்க்கிறேன். தோள்கள் தொங்கியிருந்தன, கைகள் நடுங்கின, ஆனால் அவனுடைய பார்வை என்மேல் நிலைகுத்தியிருந்தது.
அந்தக் கண்களிலே இருந்த உறுதியைப் பார்த்ததும் என்னால் அடக்கமுடியவில்லை – எனக்குள் கொதித்துக் கொண்டிருந்த கடுமையான கோபமும், ஏமாற்றமும் பழி வாங்கவேண்டுமென்ற எண்ணத்துடன் வெடித்துக் கிளம்பியது.
“என்ன தைரியம் உனக்கு! என்ன தைரியம் இருந்தால் இந்த வீட்டிற்குள் வந்திருப்பாய், நீ ---- நீ ஒரு மனித விலங்கு!”
எனக்குப் பக்கத்தில் நின்ற அம்மா விறைத்துப்போனதை உணர்ந்தேன்.
“நீ என்னுடைய அம்மாவை ஏமாற்றியிருக்கலாம், ஆனால் எனக்கு உன்னைப்பற்றித் தெரியும்! நீதான் அந்த ஆள் – அம்மாவுடைய வாழ்க்கையைக் கெடுத்தவன், என்னோடதையும்!”
அழுதுகொண்டே அம்மாவின் கைகளில் துவண்டேன்.
“அம்மா, அதுதான் விமானநிலையத்திலிருந்து நேரடியாக இங்கு வந்தேன். உங்களுக்குச் சொல்ல ஓடிவந்தேன் – இந்தாள்தான் …”
அம்மாவின் மூச்சுத் திணறியது, தனது  கைகளால் என்னை இறுக்கி கட்டிப்பிடித்தா.
நான் அவவின் கண்களைப் பார்த்தேன், ஆனால் அவ என்னைப் பார்க்கவில்லை. அவவின் பார்வை நல்லகவில் பதிந்திருந்தது, ஒரு கோபமோ, வேறுப்போ இல்லை- மாறாக ஒரு இரகசியம் புதைந்திருப்பதுபோல.   
நல்லக ஒரு ஆழ்ந்த மூச்செடுத்து, அதை வெளியே விடும்போது அவர் தொய்ந்துபோனது தெளிவாகத் தெரிந்தது. அம்மாவின் பார்வையிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு என்னைப் பார்த்தார் – அவருடய முகபாவத்திலே துக்கம், வருத்தம், அவமானம் எல்லாம் கலந்த ஒரு கலவை தெரிந்தது, அவற்றுடன் என்னவென்று சொல்லமுடியாத ஏதோ ஒன்றும் இருந்தது.
எனக்குள் எவ்வளவு வெறுப்பு வரமுடியுமோ அவ்வளவையும் வரவழைத்து அவரை உற்றுப் பார்க்கிறேன், அப்படியிருந்தும் அவர் வேறு பக்கம் பார்க்கவில்லை. அவருடைய கண்களிலே வலி தெரிந்தது, ஆனால் அதிலே இருந்த சாந்தமான அமைதி என்னை இன்னும் கோபப்பட வைத்தது.
“எப்படி உன்னால் முடியும்? ஏதோ நீதான் காயப்பட்டவன் மாதிரி உன்னுடைய முகத்தை வைத்துக்கொண்டு இங்கே நிற்கமுடியும்?”
ஏதோ நான் அவருக்கு அடித்ததுமாதிரி நடுங்கினார்.
“அருவி…”, அவர் தடுமாறினார்.
“ஆட்கள் சிலநேரம் தவறு விடுவார்கள், அருவி.”
அம்மாவின் இந்த வார்த்தைகளைக்கேட்டு அதிர்ச்சியுடன் அவவைப் பார்த்தேன்.
“அம்மா என்ன சொல்கிறாய்----- உனக்குத் தெரியுமா?”
எனது கால்கள் துவண்டன, என்னைச்சுற்றி உலகம் குத்துக்கரணம் அடிப்பதுபோல இருந்தது. மீண்டும் ஒருமுறை Brad தான் என்னை விழாமல் பிடித்தார். தனக்குப் பக்கத்தில் என்னை இருத்துமாறு Zoe சைகையால் Brad  ற்கு தெரிவித்தாள். ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாக தனது அதிர்ச்சிமிக்க கதையைச் சொல்லும்போது இருந்த இடத்திலேயே Zoe இருந்தாள். 
Zoe  வினுடைய பாவப்பட்ட கதைகளைக் கேட்டு இந்த உலகம் சுக்குநூறாவதுபோல உணர்ந்தேன். ஆனால் இப்போது நடைபெறுவதுடன் அதை ஒப்பிட்டால் அதில் ஒன்றுமில்லை. தன்னுடைய வாழ்க்கையைச் சீரழித்து, நான் பிறக்கமுன்பிருந்தே என் வாழ்க்கையை பாழடித்த ஒரு அயோக்கியனை அம்மாவே பாதுகாக்கிறா.
“அருவி, நான் உனக்குச் சொல்வதற்கு இருந்தேன்,” அம்மா மென்மையாக ஆரம்பித்தா, “ஆனால் சில வாரங்களுக்கு முன்னால்தான் எனக்கு நிச்சயமாகத்தெரியும்.”
நான் அவவைப் பார்ப்பதைத் தவிர்த்தேன்.
ஒரு பெருமூச்சுடன் தொடர்ந்தா, “நான் நல்லகவை முதன்முதலில் Villas இல் பார்த்தபோது என் உடம்பு தளர்ந்துபோய் விட்டது – என்னை எல்லாப் பக்கத்திலும் எறிந்துகொண்டு உலகம் சுற்றுவதுபோல. முதலில், என்னை எப்போதும் தலைசுற்ற வைக்கும் மல்லிகைப்பூவின் வாசம்தான் காரணம் என்று நினைத்தேன். அந்த உணவகத்தில் வாசமுள்ள  மல்லிகைப் பூக்கள் வைத்திருக்கப்பட்டதா என்று சுற்றுமுற்றம் பார்த்ததும், அங்கு ஒன்றுமே காணப்படாததும் எனக்கு ஞாபகத்தில் உள்ளது.”
அந்தத் தருணத்தை நினைவு கூர்பவர்போல சிறிதுநேரம் மௌனமானா.
“அப்படியிருந்தும், அன்றைய தினம் நல்லகவை உன்னுடைய நோயாளி என்ற ஸ்தானத்தைவிட பெரிதாக ஒன்றும் நினைக்கவில்லை. அந்த ஒரு கருணையான தோற்றம் கொண்ட மனிதனின் முன்னால் நான் ஏன் சஞ்சலப்பட்டேன் என்று எனக்கு விளங்கவில்லை.
அந்த வார இறுதி நாளில், வழக்கமாக நான் நடைப்பயிற்சி செய்யப்போகும் Bellbird Dell Reserve இல் அவரென்னெதிரே வந்தபோது என்னுடைய சந்தேகம் ஆரம்பித்தது.”
“நாங்கள் Villas க்குப் போனபின் வந்த முதல் வார இறுதி ----- எத்தனையோ கிழமைகளுக்கு முன்பாக!” என்னுடைய குரலின் தொனி கூடியது – அவவைக் குற்றம் சாட்டுவதுபோல.
“என்னை மன்னித்துவிடு, அருவி,” அம்மா மென்மையாகச் சொன்னா. “ நான் எல்லாவற்றையும் அலசி ஆராய முயன்றேன். உன்னைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை, முக்கியமாக நீ புது வீட்டிற்குப் போவதற்கான வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்ததனால்.”
அதுதான் கடைசித் துரும்பு.
சடாரென எழும்பினேன், “அது உங்களுடைய கருணைமிக்க செயல், அம்மா – எனக்குத் தொந்தரவு தரக்கூடாதென்று. நன்று, நீங்கள் எனக்கு எந்த விதமான விளக்கங்களையும் தரத் தேவையில்லை. இப்போது வேண்டாம்! எப்போதும் வேண்டாம்! உங்களுடன் எனது காரியங்கள் முடிந்துவிட்டன. Brad, வாருங்கள் போவோம்!”  
Zoe  தனது கைகளை நீட்டி எனது கைகளி மென்மையாக அழுத்தினாள். எனது தலையை அசைத்து மௌனமாகவே அவளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டு, அம்மாவையோ அல்லது நல்லகவையோ பார்க்காமல், Brad என்னருகே வர கதவிற்கு வெளியே வந்தேன்.
வீட்டிற்குப் போவதற்காக காரை Brad  ஓட்டிவர நான் மௌனமாக இருந்தேன். பின்னணியில் ஒலித்துக்கொண்டிருந்த Adele யின் குரலும் அந்தப் பாட்டினுள்ளேயிருந்த ஆத்மார்த்தமான, வலிமிகுந்த வார்த்தைகளும், அவள் வெளிக்கொணர்ந்த அந்த துக்கமும் வழக்கம்போலவே என்னை ஒரு சமநிலைக்குக் கொண்டுவந்தது. Brad அதன் ஒலியளவை எனக்கேற்றவாறு சரிசெய்தார், நான் நன்றி உணர்வுடன் மெல்லியதாக புன்னகை செய்தேன். 
அவர் தனக்கு எல்லாம் விளங்குகிறதென்ற அர்த்தத்துடன் மென்மையாக என்னைப் பார்த்தார். நான் நன்றாக எனது இருக்கையில் பின்னுக்குச் சாய்ந்திருந்து, கடந்துசெல்கின்ற வெளிச்சங்களையும், தெளிவற்ற முறையில் ஓடிக்கொண்டிருந்த கார்களையும் பார்த்துக் கொண்டிருக்கும்போது, Brad  போக்குவரத்தின் ஊடாக காரைச் செலுத்திக் கொண்டிருந்தார். 
நான் Warrendyte ஐ அடைந்தபோது  ஒரு போர்வை மாதிரி ஆழ்ந்த தனிமை என்னைச் சுற்றிக்கொண்டது.
என்னை அறியாமலே எனது கைகள் மார்பைச் சுற்றி அணைத்தன.
யாழ்ப்பாணம் போவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பதாகத்தான் இந்த வீட்டில் குடிபுகுந்தேன். பலத்த எதிர்பார்ப்புக்களுடன் இருந்த அந்த வீடு இப்போது வெறுமையாகவும் தாங்கமுடியாத குளிருடனும் இருக்கிறது.
ஒரு மெல்லிய ஓசையுடன் கார் நின்றபோது, Brad  என்னுடைய பக்கம் திரும்பி, “ அருவி, இன்றிரவு நான் உன்னுடன் தங்குகிறேன்.”
ஒரு ஆறுதலோடு எனக்கு அழுகை வந்தது. அவர் என்னுடைய திறப்பை வாங்கி முன் கதவைத் திறந்தார். நீண்ட தூரப் பயணத்தின் களைப்போடு அன்றிரவு வெளிப்பட்ட உண்மைகளால் எனக்குள் ஏற்பட்ட உணர்ச்சித் தாக்கமும் சேர்ந்து மிகவும் களைத்துவிட்டேன். எனது தலை தலையணையத் தொடமுன்னரே நித்திரையில் ஆழ்ந்தேன்.
மறுநாள் காலை, காற்றிலே மிதந்துவந்த முட்டை வறுவல், பேக்கன் பொரியல் ஆகியவற்றின் மென்மையான நறுமணத்தோடு கண்விழித்தேன். இப்போது என்ன நேரம்? யோசித்தபடி எனது போனைப் பார்த்தேன். அப்போது 7;30 – எனது 900 மணி நோயாளியைப் பார்க்கப் போவதானால் எழும்பவேண்டிய நேரம்.
அம்மாவிடமிருந்து வந்த செய்திகளையும் தவறவிட்ட அழைப்புக்களையும் புறக்கணித்துவிட்டு குளிப்பதற்குச் சென்றேன்.
காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் Brad  அமைதியாகச் சொன்னார், “அருவி, நீ உன்னுடைய அம்மாவிடம் கோபமாயிருப்பது எனக்குப் புரியும், ஆனால் அவவுடன் பேசு, ஓகேயா? அவ தன்னுடைய செய்கையைப்பற்றி விளக்கம் தர விரும்புகிறா – ஒருபோதும் உன்னை வருத்தும் செயலொன்றினையும் செய்யமாடா. நேற்றிரவு என்னைக் கூப்பிட்டா, நீ இன்று அவவுடன் கதைப்பாய் என்று சொல்லியுள்ளேன்.”
நான் எனது தலையை வேகமாக ஆட்டுவதைக் கவனித்த அவர் சரணடைவதுமாதிரி தனது கைகளை உயர்த்தினார். “ நாங்கள் ஆறுதலாகக் கதைப்போம், அருவி. ஒரு இடைவேளைக்குப் பிறகு உனது நோயாளிகளின் நிலைபற்றி அறிவதற்கு நீ மிகுந்த ஆவலாயிருப்பாய் என்பது எனக்குத் தெரியும்.”
 
அத்தியாயம் 15 ---- யுத்தம் உருவாக்கிய அரக்கன்
நல்லக
2025
இலங்கை மற்றும் மெல்பேர்ண்
 
யப்பானியர்கள் ikigai என்பது பற்றிக் கதைப்பார்கள் – வாழ்வதற்கான காரணம், உங்கள் வாழ்க்கையின் நோக்கத்தை நிறைவேற்றுதல். எப்போது அருவியின் பிறப்பைப்பற்றிக் கேள்விப்பட்டேனோ அப்போதிருந்து அவள்தான் எனது ikigai ; என்னுடைய வாழ்க்கையின் நோக்கமே அவளை ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டுமென்பதுதான்.
அவள் ஒரு மருத்துவர் என்பதும் Templestowe இல் வேலை பார்க்கிறாள் என்பதும் தெரிந்ததும் மெல்பேர்ண் இல் அவளைக் கண்டுபிடிப்பது மிகவும் சுலபமாக இருந்தது. ஒரு நோயாளிபோல அவளிடம் முன்பதிவு செய்வது அதைவிட இலகுவாக இருந்தது.
ஆனால், அவள் நோயாளிகள் காத்திருக்கும் இடத்திற்கு வந்து, “திரு நல்லக அபேய்கோன்” என்று தனது இனிய குரலால் கூப்பிட்டபோது அவளுடைய முகத்தைப் பார்ப்பது அவ்வளவு இலகுவாக இல்லை.
ஒரு சக்தியற்ற இளம்பெண்ணை துன்புறுத்திய மோசமான மிருகமாக நான் இருந்த 1995ம் ஆண்டு நாளுக்கு நான் இழுத்துச் செல்லப்பட்டேன். பலவந்தமாக நான் அந்த நாளை நினைத்துப் பார்க்கத் தேவையில்லை- அந்தக் கணம் இரவுபகலாக கடந்த 30 வருடங்களாக என்னைச் சித்திரவதை செய்துகொண்டே இருக்கிறது.  
மன்னிப்புக் கேட்பதற்காக, அல்லது குறைந்தபட்சம் நான் பாழாக்கிய அந்தப் பெண்ணின் வாழ்க்கை எப்படி இருக்கிறதென்று அறிந்து கொள்வதற்காகவாவது, வல்வெட்டித்துறைக்குப் போகவேண்டுமென்று எத்தனைமுறை கங்கணம் கட்டினேன் என்பதே எனக்கு மறந்துவிட்டது. ஆனால் நான் செய்த குற்றத்தை எதிர்நோக்கும் தைரியம் எப்போதும் சறுக்கிக்கொண்டே போனது. இறுதியில், கடந்த தை மாசம் வல்வெட்டித்துறைக்கு மறுபடியும் போனேன். 
அங்கே என்னத்தை எதிர்பார்த்தேன் என்பதே எனக்குத் தெரியாது. என்னுடைய மோசமான கெட்டகனவு என்னவென்றால் சீதா – அவளுடைய சகோதரிகள் பயத்திலே அவளுடைய பெயரைச் சொல்லிக்கதறியதை மறக்கமுடியாது – 2009 இல் நடைபெற்ற யுத்தத்தின் இறுதி நாட்களில் கொல்லப் பட்டிருக்கக்கூடும் என்பதுதான்.
எது நடந்தாலும் பரவாயில்லை, ஆனால் அதுமாத்திரம் நடந்திருக்கக்கூடாது,  கடவுளிடம் மன்றாடினேன். என்னைமாதிரி மோசமான ஒரு ஆளின் வேண்டுகோளை ஒரு கடவுளும் நிறைவேற்றமாட்டார் என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும், நான் எனது மனிதத்தன்மையை மீறி மிருகத்தனமாக நடந்த அந்த மண்டபத்திலே ஒழுங்கீனமாகத் தொங்கவிடப்பட்டிருந்த படங்களில் இருந்த ஒரு கடவுளாவது சீதாவைத் தங்கள் கருணைக்குள் இழுத்து அவளுக்கு ஒரு ஒளிமயமான வாழ்க்கையைத் தந்திருக்காதா என்ற நப்பாசை என் மனதிற்குள்.
நான் சிறுவனாக இருந்த காலத்தில் அப்பாவும் அம்மாவும் என்னை கதிர்காமம் கோயிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள். அங்கே வீரம் மிக்க முருகப்பெருமானை வணங்கும்படி அம்மா சொன்னா. அவருடைய கையிலிருந்த வேல் தீயவர்களை அச்சுறுத்தும் அதேவேளை, கண்களிலே மென்மையான கருணை வெளிப்பட்டது. இதே முருகப்பெருமான்தான் நான் சீதாவைக் கீழே தள்ளி அவள்மீது தாவிப் பாய்ந்ததைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
“முருகப்பெருமான் பிரசன்னமாயிருக்கும் இடத்திலே நீ தவறு செய்தால், அவர் தனது வேலை உன்னை நோக்கி வீசுவார்.” அம்மா என்னை எச்சரித்துவிட்டு, எனது கைகளைக் கூப்பியவாறு பிடித்துக்கொண்டு அவரது சந்நிதானத்தைச் சுற்றி மூன்றுமுறை வலம் வந்தார்.
இப்போது இந்த நினைவுகள் வந்து எனக்குள் வெடித்தன -  ஒரு குழப்பமான பீதியில் முருகனைப் பார்த்தவண்ணம் நின்றேன். ஒரு திண்டாடுகிற பெண்ணைக் கையிலே வைத்துக்கொண்டு இந்த அறையிலே என்ன செய்கிறேன் என்ற பிரேமையில் நின்றேன்.
என்னுடைய மனம் காய்ச்சலால் எரிந்தது, அதேநேரம் உள்ளுக்குள் உறைந்திருந்தேன்.
ஒரு வினாடி எனது மனம் கர்ஜித்தது -  பழி வாங்கத் துடித்தது, இந்த மோசக்காரத் தமிழர்களுக்கு ஒருவிதக் கருணையும் காட்டக்கூடாது. அடுத்த கணம், என்னுடைய அன்புக்குரிய ரோகன் – நண்பன் என்பதைவிட சகோதரனாகிய – புலிகளின் தற்கொலைத் தாக்குதலில் பலியானான் என்ற செய்தியால் உணர்ச்சியற்றுப் போனது.
பாவப்பட்ட, கருணையுள்ள, எல்லோரையும் எளிதில் நம்பும் குணம்கொண்ட 27 வயதேயான ரோகன் – என்னைவிட ஒரு வயது குறைந்தவன் – ஏமாற்றப்பட்டான். சில வருடங்களுக்கு முன்னர் கொழும்பு சென்று இராணுவத்தளபதி எதிரிசிங்க வீட்டிற்கு எதிர்த்தாப்போல் ஒரு தேனீர்க்கடை ஆரம்பித்தான்.
ஒருநாள் ரோகனுடைய பதின்மவயது தம்பியின் வயதையொத்த ஒரு பையன் தனக்கு வேலை தருமாறு கெஞ்சினான். இராணுவத்தளபதியின் வீட்டுவாசலில் காவலுக்கு நின்றவர்களுக்கு தேனீரும், உணவும் கொடுப்பதற்காக அந்தப் பையனை ரோகன் அமர்த்தினான். அப்பாவித்தனமாக அந்தப் பாதுகாப்பு வளையத்துக்குள்ளும் தன்னுடன் போவதற்கு அவனை அனுமதித்தான்.
அந்தப்பையன் ஒரு புலி என்று சிறிதேனும் சந்தேகப்படவில்லை.
தளபதி வராண்டாவிற்கு வரும்வரையில் காத்திருந்த பையன் முன்னுக்கு ஓடிப்போய் ஒரு கைக்குண்டை வெடித்தான். பையன் ஓடுவதைக் கண்ட ரோகன் – அவன் சாதாரணமானவன் இல்லை, அவன் ஒரு பயங்கரவாதி என்பதைத் தாமதமாக உணர்ந்ததும் -அவனைத் தாவிப் பிடித்த அதே நேரத்தில் குண்டு வெடித்தது.
இருவரும் அதே இடத்தில் மாண்டனர், உடல்கள் அடையாளம் தெரியாமல் சிதறியபடி. ரோகன் அந்த நேரத்தில் விரைவாகச் செயல்பட்டதால், இராணுவத்தளபதிக்கும், காவலர்களுக்கும் சிறு காயங்களே ஏற்பட்டன.
 Operation Riviresa என்ற இராணுவ நடவடிக்கையின் பின்பு நான் தங்கியிருந்த ஊரிக்காடு இராணுவமுகாமிற்கு அந்தத் தற்கொலைத் தாக்குதல் பற்றிய தகவல் வந்தபோது, எனது முழங்கால்கள் வளைந்தன. என்னுடைய சக இராணுவத்தினர் என்னைப் பிடித்திராவிடில் விழுந்திருப்பேன்.
அங்கே ஏற்பட்ட சத்தத்தினால் கர்னல் விஜேரட்னே என்னருகில் வந்தார். “இந்த இரத்தவெறிபிடித்த தமிழர்களை நம்பவே முடியாது. நாங்கள் இந்த வல்வெட்டித்துறை ஊர் மக்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்கவேண்டும் – இங்கிருந்துதான் அதிகமான புலித் தலைவர்கள் வந்துள்ளார்கள்.”
என்னைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளும்படி மற்றவர்களுக்குச் சொல்லிவிட்டு, இரகசியமாகத் தன்னுடன் வைத்திருந்த போத்தலில் இருந்து எனக்கு ஒரு கோப்பை ஊற்றினார். வழக்கமாக ஒரு புலி இறந்ததைக் கொண்டாடுவதற்கோ அல்லது வீட்டு ஞாபகத்தால் வருந்தும்போதோ பாவிக்கப்படும் மது.
என்னுடைய கோப்பையை மதுவால் நிரப்பும்போது அவர் சொன்னார், “அந்தக் கேடுகெட்ட பிரபாகரனுடன் சேருவதற்காக ஓடிய பெடியளைத் தவிர்த்து மற்றவர்களை ஏற்கனவே வளைத்துப் பிடித்துவிட்டோம். வேறு பையன்கள் இல்லை என்பது வருத்தமாயுள்ளது. இல்லாவிடில், உன்னுடைய நண்பன் இறந்ததற்கு ஐந்தாறு பெடியன்களைப் போட்டிருக்கலாம்.”    
என்னைவிட பத்து வருடமளவு வயதில் மூத்தவரும், நான் எனது வழிகாட்டியாக மதித்துவந்தவருமாகிய Lalith  எனக்கருகில் வந்து ஒரு வஞ்சகமான புன்னகையுடன் – எனது வயிற்றைக் குமட்டிய புன்னகை – கண்களிலே காமம் மின்ன, “ஊரிலே வேறு பையன்கள் இல்லையென்றால் என்ன? நாங்கள் சிறிதுநேரம் தமாஷாக இருப்பதற்குத் தாராளமான பெண்கள் இருக்கிறார்கள்.”
அதிர்ச்சி கலந்த வெறுப்புடன் நான் அவரைப் பார்த்தபோது, தனது தோளைக் குலுக்கியவாறு அவர் சொன்னார், “அவர்களில் சிலர் இதையிட்டு மகிழ்வார்கள் என்று நான் பந்தயம் கட்டுவேன். நாங்கள் அவர்களைப் பார்க்காத நேரத்திலே அவர்கள் எங்களைப் பார்க்கும் விதத்தை நீ கவனிக்கவில்லையா?”
எவ்வளவு நேரம் அங்கே இருந்தேன் என்று எனக்குத்தெரியாது. எனது நலன் விரும்பிகளான நண்பர்களுடன் சேர்ந்து மதுவருந்திக் கொண்டிருந்தேன். ஒவ்வொருமுறையும் எனது கோப்பை வெறுமையாகவும் அவர்கள் நிரப்பிக்கொண்டே இருந்தார்கள். இப்படி எத்தனை முறை நிரப்பப்பட்டதென்றே எனக்குத்தெரியாது. உணவு நேரம் வந்ததும், என்னால் சாப்பிடமுடியவில்லை என்று அவர்களுக்குக் கூறினேன். நான் செய்ய விரும்பியதெல்லாம் என்னை வேதனைப்படுத்திக் கொண்டிருந்த எண்ணங்களை மறந்து சுருண்டு படுத்துக் கிடப்பதுதான்.
ஒரு அதிர்ச்சியுடன் எழும்பினேன். வியர்த்துக்கொட்டியது, எனது இதயம் வேகமாக அடித்தது, மூச்சில் ஆழமில்லை, வாய் வரண்டுபோய் இருந்தது. அறையைச் சுற்றிப் பார்த்தபோது சில நிமிடங்களே போயிருந்தது – மற்றவர்கள் உணவருந்திவிட்டு இன்னும் வரவில்லை. 
ஒவ்வொரு முறையும் நான் மூச்சிரைக்கச் சுவாசிக்கும்போதும் எனது தலை வெடிப்பது மாதிரி வலித்தது. கண்ணைமூடி இரவுமுழுதும் தூங்க விரும்பினேன். நான் கண்ணை மூடும்போதெல்லாம் கர்ப்பிணிப்பெண்ணான ரோகனின் மனைவி முகமும், கைம்பெண்ணான அவனின் தாயார் முகமும் என் முன்னே தோன்றின. ஒருமுகம் தனக்குப் பிறக்கப்போகும் குழந்தையின் தகப்பனைக் காப்பாற்றும்படி கெஞ்ச, மறுமுகம் நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது ஒருவர்க்கொருவர் துணையாக இருக்கவேண்டும் என்று எங்களைச் சத்தியம் செய்ய வைத்ததை ஞாபகப்படுத்தியது.
நான் ஒரு கர்ஜனையுடன் எழும்பி, எனது துப்பாக்கியை எடுத்துக்கொண்டு தெருவிலே பாய்ந்தேன். ஒரு நோக்கமில்லாமல் நடந்தேன்; என்னைக்கண்ட மக்கள் நான் அருகில் வரமுன்னரே மாயமாய் மறைந்தனர். நான் அவர்களைக் குறை சொல்லமுடியாது – ஒரு குழப்பத்தில் உள்ளவன் போலத் தோற்றியிருக்கவேண்டும்; ஒழுங்கற்ற வட்டப்பாதையில் நடப்பது, மூச்சுவிடாமல் முணுமுணுப்பது, கண்கள் ஒழுங்கற்று அங்குமிங்கும் பார்ப்பது, காலடிகள் சீரற்றிருப்பது எல்லாம் சேர்ந்து என்னை ஒரு விரும்பத்தகாதவன் மாதிரி ஆக்கியிருக்கவேண்டும்.
இறுதியாக, பிரதானசாலையில் ஒரு கம்பீரமான வீட்டைக்கண்டேன். காலத்தால் பாதிக்கப்பட்ட இரண்டு கற்தூண்களுக்கு மத்தியில் இரும்பினாலான கதவு; அந்த இரு தூண்களும் வீட்டினுடைய பரம்பரை, பெருமை, அதிகாரம் ஆகியவற்றைப் பாதுகாக்கும் காவலாளிகள் மாதிரி  இருந்தன.
கடந்த வாரம் எமது வழக்கமான ரோந்துப்பணியின்போது, இரண்டு அழகான பெண்கள் அந்த இரும்புக் கதவுகள் வழியாக  வெளியே வந்தபோது Lalith காமக்கண்களுடன் அவர்களைப் பார்த்தது ஞாபகத்திற்கு வந்தது. எங்களை சாடையாகப் பார்த்த அவர்களுடைய கண்களிலே வெறுப்புத் தெரிந்தது. கீழே நிலத்தைப் பார்த்துக்கொண்டு ஊர் மையத்தை நோக்கி விரைவாகச் சென்றார்கள். 
“முகாமிலுள்ள அனைவரும் இந்தச் சகோதரிகளின் அழகைப்பற்றிப் பிதற்றுவார்கள்,” Lalith சொன்னான். “அவர்களைப் பார்ப்பதற்கு முன்னர்  நான் அந்தக் கதைகளை நம்பவில்லை.”
அவர்கள் மறையும்வரை அவர்களின் அசைந்தாடும் இடுப்புகளை வெட்கமில்லாமல் பார்த்துக்கொண்டே இருந்தான்.         
ஒரு கண் சிமிட்டலுடன் சொன்னான் ,” Malini Fonseka இளமையில் இப்படித்தான் இருந்திருப்பா. இதிலே விஷேசமென்னவென்றால் அவர்களைப் பாதுகாக்க வயதான தகப்பனைத் தவிர வேறு ஆட்கள் இல்லாத ஆறு அழகிகள்.”
நான் திகைத்துப்போய், எனது வாய் பிளந்தபடி அவனை முறைத்துப் பார்த்தேன் – அவன் என்ன சொல்ல வருகிறான் என்று என் மூளை அலசியது. நிச்சயமாக, அப்பாவிகளான பெண்களை இரையாக்கும் அளவிற்கு நாங்கள் மோசமானவர்கள் இல்லை.
நான் அப்படியொன்றும் மோகத்தை விரும்பாத ஆளில்லை.  ஆனால் இந்த பகட்டாக ஆடை உடுத்தாத, என்மேல் சிறிதளவும் அக்கறை இல்லாத இந்த இளம்பெண்கள் என்னுடைய காமவெறி கொண்ட Chandrika ஒரு காலத்தில்  எழுப்பியது மாதிரி என்னுள் ஆசையைத் தூண்டவில்லை.  
இத்தனை வருடங்களுக்குப் பிறகும் Chandrika  பற்றிய மெல்லிய ஞாபகமே எனது உடம்பைச் சிலிர்க்க வைக்கிறது.
எனக்கு இருபது வயதானபோது, அரிசி வயலிலே வேலை செய்துவிட்டு வீடு திரும்பும் வழியில் கிராமத்தின் ஓரத்தில் உள்ள ஒரு பெரிய மாளிகைவீட்டைக் கடந்து சென்றேன். மிகவும் பெரும் பணக்காரனான அந்த வீட்டுச் சொந்தக்காரர் ஆச்சரியப்படும்படி அவருடைய வயதிற்கு  மிகுந்த உற்சாகக்காரராக இருந்தார். இரண்டு மனைவிகள் இறந்த பின்னர் தனது எண்பதாவது வயதில் தனது பேத்தி வயதில் உள்ள ஏழைப்பெண்ணான Chandrika வை மணம் புரிந்தார். ஊரில் நிலவும் வதந்தி என்னவென்றால், அவள் தனது கள்ளக் காதலர்களுடன் தொடர்பு வைத்திருப்பதை, கண்டும் காணாமல் இருக்குமளவிற்கு அவர் அவள்மேல் மோகம் கொண்டிருந்தார். 
இது ஒரு வதந்தி இல்லை என்று நான் அன்று கண்டுபிடித்தேன். நான் வீட்டைக் கடந்து போகும்போது தான் தனியே இருப்பதாயும், ஆடுகள் தப்பிப்போகாமல் இருக்க அவளது வீட்டு வேலியைத் திருத்தித்தருமாறு என்னை அழைத்தாள். அவளுடைய வீடு திருத்தப்பட்டதோ அல்லது அவளது ஆடுகளுக்கு என்ன நடந்தது என்பதோ எனக்குத் தெரியாது. ஆனால், அவள் என்னைத் தன் கைகளுக்குள் அணைத்து, நான் எவ்வளவு பலசாலியாக உள்ளேனென்று எனது காதுக்குள் முணுமுணுத்தது ஞாபகத்தில் உள்ளது.
முதலில், அவள் என்னைத் தொட்டபோது இதுவரை என்னுடலில் எனக்கு ஏற்பட்டறியாத ஒரு சூட்டுடன் கண்விழித்தேன். விரைவில் எனது கைகள் நிச்சயமற்ற விதத்தில் நடுங்கிக்கொண்டே பதிலளித்தது. நிச்சயமற்று ஆரம்பித்தது என்னை எங்கேயோ இழுத்துச் சென்று நான் சரணாகதி அடைந்தேன். இதுவரை காலமும் இந்த உலகம் என்னிடமிருந்து மறைத்து வைத்திருந்த இரகசியத்தை அறிந்தபோது – மாயாஜால, ஓளிபொருந்திய தருணத்தை அடைந்தபோது – வியப்புக்குள்ளானேன். 
அந்த ஒரே தருணம்தான் நான் வெறுக்கத்தக்க காமத்திற்கு அடிமையானேன், அந்த ஒரே தருணம்தான் என்னை மரியாதையுடன் பழகிய முதியவரின் மனைவியுடன் தொடர்பு வைத்திருந்தேன் என்று சொல்ல ஆசைப்படுகிறேன். உண்மையில், அவர் வீட்டில் இல்லாத எத்தனை நாட்கள் அவளின் வீட்டிற்குள் நுழைந்தேன் என்பதற்குக் கணக்கேயில்லை. ஒவ்வொருமுறையும் அந்த இரகசிய சந்திப்புக்குப் பின்னர் நான் சத்தம் போடாமல் மெதுவாக வீட்டிற்குள் நுழையும்போதும் அம்மா சோகத்துடன் என்னைப் பார்ப்பா, ஆனால் ஒன்றும் சொல்வதில்லை.
அதற்குப் பதிலாக தன்னுடைய மைத்துனருடன் கதைத்தா. ஒரு வருடத்திற்கு முன்பேயே என்னை இராணுவத்தில் சேர்க்கச்சொல்லி சொல்லியிருந்தார். யுத்தம் நடைபெறுவதால் தொடர்ச்சியாக இராணுவத்திற்கு ஆள் சேர்ப்பதால் நானும் இலகுவாகச் சேரலாம் என்று சொல்லியிருந்தார். ஆரம்பத்தில் நான் வயது குறைந்தவன் என்று கூறி அம்மா சம்மதிக்கவில்லை. ஆனால் இப்போது நான் தயாரென்று நினைத்தாளோ அல்லது சந்திரிகாவை விட்டு என்னைப் பிரிக்கவேணுமென்று நினைத்தாளோ தெரியவில்லை. எதுவென்றாலும் தனது மனதில் தீர்மானித்தபிறகு தடுமாறவில்லை, என்னையும் தடுமாற விடவில்லை. கொழும்பிலுள்ள தனது மைத்துனருக்குச் செய்தியனுப்பி மறுநாளே நான் கொழும்பு சென்று இராணுவத்தில் பதியவேண்டுமென்பதில் உறுதியாக இருந்தா. 
சந்திரிகாவைப் பிரிந்து போவதற்கு விருப்பமில்லாதபோதிலும், என்னுடைய எதிர்காலம் பசுமை நிறைந்து விளங்கவேண்டுமாயின் இப்படி ஒருநாள் வருமென எதிர்பார்த்திருந்தேன். சில வருடங்களுக்கு முன்னர் எனது அப்பா இறந்தபோது, அம்மாவையும் என்னையும் நல்லபடியாக வாழவைப்பதற்காக ஊரைவிட்டு வெளியே போய் வேலை தேடவேண்டுமென்ற உறுதிமொழியை என்னிடம் வாங்கியிருந்தார். அவருடைய சேமிப்புப் பணமெல்லாம் எனது சகோதரிகளான நிலக்சி, ஷலிகா ஆகியோருடைய திருமணங்களுக்குச் செலவழிந்து போய்விட்டது; அவர் கட்டிய வீடு மாத்திரம் எஞ்சியுள்ளது.
ஆகவே, கனத்த மனதுடன் சந்திரிகாவுக்கும் அம்மாவிற்கும் விடைகூறிவிட்டு இராணுவத்தில் இணைந்தேன். என்னுடைய சம்பளத்தில் அம்மா சௌகரியமாக வாழ்ந்தா; பாழடைந்திருந்த எங்கள் வீட்டையும் திருத்தியமைத்தேன்.
சந்திரிகாவைப் பொறுத்தவரை, அவளது வயதான கணவர் இறந்தபோது அவளுக்கு அவர் ஓரளவு செல்வத்தை விட்டுச்சென்றதாயும், அந்தப் பணத்தை வைத்து அவள் தான் ஒருபோதும் மறந்திராத முதல் காதலனை மணந்துகொண்டாள் என்றும் கேள்விப்பட்டேன். 
இப்போது, சென்ற வாரம் Lalith உம் நானும் கடந்துசென்ற அந்தக் கம்பீரமான இரும்புக்கதவுக்கு முன் நின்றபோது, நல்ல தெளிவாகப் பார்ப்பதற்காக எனது கண்களைக் கூர்மைப் படுத்தினேன். என்னுடைய இதயம் வெடிப்பதுபோல வேகமாக அடித்தது.
அந்த இடத்தை விட்டுப்போய் எனது முகாமிற்குத் திரும்ப விரும்பினேன். தனியே வெளியே போகக்கூடாதென்று எங்களுக்குக் கட்டளை இடப்பட்டிருந்தது. புலிகள் பின்வாங்கியுள்ளார்கள் என்பது உண்மையாக இருந்தபோதிலும், ஒரு சிலர் அண்மையில் திரியமாட்டார்கள் என்பது உறுதியில்லை. அந்த வீட்டிலேயுள்ள அப்பாவிகளுக்கு இன்னல் விளைவிப்பதால் ரோகன் திரும்ப வரமாட்டானென்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். எனக்கென்று ஒரு திட்டமும் இருக்கவில்லை; ஆனால் ரோகனுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு யாராவது பதில் சொல்லத்தான் வேண்டும்.
அடுத்து எனக்குத் தெரிந்ததெல்லாம் அந்தக் கதவு திறந்தது-  நான் வீட்டிற்கு உள்ளே இருந்தேன்.
மூன்று பெண்கள் என்னை நோக்கித் திரும்பினார்கள்; அவர்கள் முகம் பயத்தால் உறைந்து போயிருந்தது. அகண்ட கண்களுடன் கெஞ்சுகின்ற அந்தப்பார்வை இப்போதும் என்னை வேட்டையாடுகிறது. சீதாதான் முதலில் அரங்கினாள். தன்னுடைய கதிரையில் இருந்து பாய்ந்து, மற்றவர்களுக்கு முன்னால் நின்றபடி கண்களிலே கோபம் மிக்கவளாய், கைகளை அகல விரித்து நின்றபோது, அவளது தங்கைகள் பயத்தினால் நடுங்கிக்கொண்டே, “சீதா அக்கா” என்றலறினார்கள்.
நான் ஒருவன்தானே அங்கே நிற்கிறேன். ஏனிப்படிப் பேயறைந்தவர்கள் மாதிரி நிற்கிறார்கள் என்று ஒரு கணம் யோசித்தேன்.
என்னுடைய தலையில் இருந்த வலி இன்னும் அதிகமாகியது. என்னை நிலைப்படுத்துவதற்காக எனது கைகளை நீட்டினேன். பழுத்திருந்த மாம்பழம் போன்ற வட்டவடிவான முலையில் எனது கை விழுந்தது. அது என்னுள் ஒரு வீரியத்தை உண்டாக்கி, அந்த உணர்வு உடம்பு முழுவதும் அலையலையாய் பரவி இடுப்புப்  பகுதியில் ஒரு குலுக்கலுடன் முடிந்தது – உசுப்பேத்துவதாயும் பயமூட்டுவதாயும் இருந்தது.
எனது கையை வேகமாக இழுத்தேன்; அந்த விசையில் அவளது பிரா கிழிந்து, ஒரு முலை வெளியே தெரிந்தது. மற்றைய சகோதரிகளில் ஒருத்தி என்மேல் பாய்ந்து தனது அக்காவை விடச்சொல்லிக் கத்தினாள். அவளுக்கு அடித்தது எனக்கு ஞாபகமில்லை; ஆனால் அவள் கீழே விழுந்தது ஞாபகமாயுள்ளது. மூன்றாவது பெண் சுவரோடு ஒட்டிக்கொண்டு நின்று மற்றவர்களுடன் சேர்ந்து கதறினாள்.
அவர்கள் மாத்திரம் கத்தாமல் இருந்தால், நான் எனக்குள் நினைத்தேன்; என் தலையோ தொடர்ந்து வலித்துக்கொண்டே இருந்தது.
 எனக்குள்ளே சுழன்று கொண்டிருந்த பைத்தியக்காரத்தனத்தை விட்டு, முகாமுக்குத் திரும்பிப்போ என்று எனக்குச் சொன்னேன்.
அதற்குப்பதிலாக, எனக்கு முன்னால் நின்றிருந்த பெண்ணைப் பார்த்தேன். அவளுடைய பெரிய கண்களிலே பயம் தெரிந்தது- அத்துடன் வெறுப்பு பளிச்சென்று தெரிந்தது. எந்த ஒரு  கண்ணியவானும் அந்த நேரம் பின்வாங்கியிருப்பான். அன்றிரவு நான் ஒரு கண்ணியமான மனிதன் இல்லை. ஒரு கர்ஜனையுடன் அவளைப் பாய்ந்து பிடித்தேன்.
அவள் அழுதாள், “எனது சகோதரிகளுக்கு எதிரில் வேண்டாம்!”
அடுத்து நான் செய்ததற்கு எந்த சாக்குப்போக்கும் கிடையாது. நான் இராணுவத்தில் பணிபுரிந்த மற்ற ஆபீசர்களைவிட நான் சற்று வித்தியாசமானவன் என்பதில் இதுவரை பெருமைப்பட்டுக் கொண்டிருந்தேன்.
அவர்களுடைய வளர்ப்புமுறை, எனக்குள் சொல்லிக்கொள்வேன் – போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் செய்த கொடுமை, ஆதரவில்லாத பெண்கள்மேல் அவர்களின் மோசமான தாக்குதல்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் படும் வேதனைகளைக் கருத்தில் கொள்ளாது புறக்கணித்தல் ஆகியனவெல்லாம் அவர்கள் படிக்காதவர்களாகவும், பண்பாடில்லாதவர்களாகவும் இருப்பதால் உருவானது.
அம்மாவும் அப்பாவும் என்னைச் சரியான வழியில் வளர்த்துள்ளார்கள் என்பதில் நான் அதிர்ஸ்டசாலி. பயங்கரவாதிகளைக் கொல்ல நேரிட்டாலும் ஒருகாலமும் பொதுமக்களைக் கொல்லமாட்டேன்,  இராணுவத்தில் சேரும்போது எனக்கு நான் செய்த உறுதிமொழி.
அப்படிப்பட்ட இலட்சியவாதியான ஒரு இளம் மனிதன் எப்படியாக அந்த இரவில் ஒரு அப்பாவியான பெண்னை மோசமாகச் சீர் குலைக்கும் ஒரு இராட்சதனாக மாறினான் என்று பலமுறை ஆச்சரியப்பட்டதுண்டு. நான் அவளை மண்டபத்திற்குள் இழுத்துவந்து  அவள்மேல் பாய்ந்தபோது அவள் முரண்டுபிடிக்கவில்லை. முன்னதாக அவளின் சகோதரிகளுக்கு முன்பாக முதல்முறையாக அவளைப் பிடித்தபோது கத்தி முரண்டு பிடித்ததுமாதிரி இப்போது செய்யவில்லை. 
என்னுடைய கோபமும் பசியும் கலந்த அந்த மோசமான குருட்டுத் தருணத்திலே நான் அவளுடைய முகத்தைத் தவிர மற்ற இடங்களைப் பார்த்தபடி இருந்தேன். இறுதியாக, நான் தடுமாறிக்கொண்டு எழும்பியபோது அவளுடைய உடைந்துபோன பார்வை என்னை எரித்தது. என்னுடைய உடைகளை அவசரமாக அணிந்துகொண்டு கதவை நோக்கிப் பாய்ந்தேன்.
“ஓடு காவ்யா…. ஓடு முத்து”, என்று அவள் கரகரப்பான குரலிலே முணுமுணுத்தது கதவைத்திறந்து அங்கிருந்து ஓடிய என்னைப் பின்தொடர்ந்தது.
ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர்தான் புயலெனப் பாய்ந்து உள்ளே சென்ற இரும்புக்கதவின் வழியே தட்டுத்தடுமாறி வெளியே வரும்போது, நான் செய்த காரியத்தின் பிரமாண்டம் எனது மார்பை அமுக்கியது – அந்தக் கனமான கல்லை என்னால் ஒருபோதும் தூக்கி அகற்றி விடமுடியாது.
நான் முகாமிற்குத் திரும்பிவந்ததே அதிசயம்தான். இருட்டு விரைவாகப் பரவி விட்டது. பழக்கமில்லாத ஒழுங்கைகளும், குழிகளும் என்னைத் தடுமாறவைத்தன. ஊரடங்குச்சட்டம் தெருக்களை ஆள்நடமாட்டம் இல்லாமல் செய்துவிட்டது. ஆனால் பூட்டிய கதவுகளுக்குப்பின்னால் என்னுடைய தடுமாறும் ஒவ்வொரு அடியையும் கவனித்தவாறு பல கண்கள் இருந்ததை உணர்ந்தேன். ஒப்பீட்டளவில் பாதுகாப்பு நிறைந்த எமது வளாகத்துள் தள்ளாடியபடி சென்றடைந்தேன். ஆரம்பத்தில் என்னைக் கண்டதும்   நிம்மதியடைந்த நண்பர்கள் எனது குழப்பமான நிலைமையைக்கண்டு பதட்டப்பட்டனர். அவர்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு, கெட்டகனவும் ஞாபகங்களும் கலந்துவர வேதனை தரும் தூக்கத்தில் ஆழ்ந்தேன். 
கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்குப் பின்னாடி அந்த பிரமாண்டமான வீட்டின் இரும்புக் கதவுகளுக்கு முன்னால் நிற்கும்போது, அன்றைய அந்த நாளில் இருந்து ஒரு இரண்டாவது தோல் போல என்னை இறுகப்பிடித்து வருத்திக்கொண்டிருந்த குற்ற உணர்வு எனது மூச்சைத் திணறவைத்தது.
எனது சகோதரிகளுக்கு முன்னால் வேண்டாம்!
என்னுடைய சீதா அக்காவை விடு!
ஓடு, காவ்யா…..ஓடு, முத்து!   
 அந்த இரும்புக்கதவுகளை விட்டு நான் போன அந்தக் கணத்தில் இருந்து இந்த அழுகைகள் என் காதில் ஒலிக்காமல் விட்டதில்லை. ஆனால் அந்தக் காட்சிகள்தான் என்னை அதிகம் சித்திரவசை செய்தன; அசையாமல் நிலத்திலே கிடந்த ஒருத்தி, சுவரோடு ஒட்டியிருந்த மற்றவள்,  வெறுமையான பேய்பிடித்த கண்களுடன் சீதா. இந்தக் கண்கள் ஒவ்வொரு இரவும் என்னிடம் வந்து பகலிலும் நீண்ட நேரம் தொடர்ந்திருக்கும்.
நான் செய்த கொடிய செயலால் மனமுடைந்திருந்தது மாத்திரமில்லாமல் யுத்தத்தின் இறுதிநாட்களில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களில் சீதாவும் ஒருத்தியாக இருப்பாளோவென்று எனது மோசமான நாட்களில் கற்பனை  செய்வேன். 
மற்ற நாட்களில், அவள் ஒரு பெண்புலியாக வந்து பழி தீர்க்கும் முகமாக இராணுவவீரர்களைக் கொல்வதுமாதிரிக் கற்பனை செய்வேன்.
வேறு சில நாட்களில் அவள் அன்பான கணவனுடனும் குழந்தைகளுடனும் வாழ்ந்துகொண்டு, என்னைப் பார்த்து அவளுடைய வாழ்க்கையை நாசம் பண்ண நினைத்ததில் நான் தோல்வி அடைந்துவிட்டேன் என்று கேலி செய்வதுமாதிரிக் கற்பனை செய்வேன். 
ஒருவேளை என்னைப்பற்றிய நினைவுகளைக் குழிதோண்டிப் புதைத்திருப்பாள், என்னையே அடையாளம் காணமாட்டாள்.
பழிவாங்கல் என்ற முகத்திரையுடன், ஆனால் உண்மையில் மோகத்தினால் நான் செய்த மனிதாபமற்ற செயலினால் ஒரு குழந்தை பிறந்திருக்கக்கூடும் என்பதைக் கற்பனை செய்தே பார்த்திருக்கவில்லை.
என்னுடைய குழந்தை. என்னுடைய சொந்தக் குழந்தை    
ஒவ்வொரு முறையும் இந்த எண்ணம் வந்த போதெல்லாம் அதை விரட்டிவிட முயற்சிப்பேன் – என்னுடைய மோசமான செயலால் இந்த உலகிற்கு வந்த குழந்தையை நான் எப்படி உரிமை கொண்டாடமுடியும்?
இருந்தபோதிலும், எனது மனதின் ஒரு பகுதியில் அம்மாவின் ஆசை ஒட்டிக்கொண்டிருந்தது. அதை நினைத்தபோது ஒரு வேதனையான ஏக்கம் எழுந்தது. நான் கலியாணம் முடித்து பிள்ளைகளைப்பெற்று வாழவேண்டுமென்று ஆசைப்பட்டாள். 
“நல்லக, உன்னுடைய குழந்தையை எனது கையால் அணைத்தபின்புதான் நான் சந்தோஷமாகச் சாவேன்.”
திருமணம் செய்வதற்கு விருப்பம் இல்லையென்றோ, இனி எந்தப்பெண்ணுடனும் நெருக்கமாக இருப்பதிலும் விருப்பம் இல்லையென்றோ அம்மாவிற்குச் சொல்லும் தைரியம் எனக்கிருக்கவில்லை. தன்னுடைய மகன் எப்படிப்பட்ட செயலைச் செய்யக்கூடியவன் என்று தெரிந்தால் அவ அணுவணுவாய்ச் செத்திருப்பா. அந்த இடத்திலேயே என்னைத் தன்மகன் இல்லையென்று சொல்லியிருப்பாள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. 
அம்மாவிற்கு என்னைப்பற்றி மற்றவர்களைவிட அதிகம் தெரியும்; ஆனபடியால்தான் அவவை அடிக்கடி நான் சென்று பார்ப்பதில்லை. அவவை நான் புறக்கணிக்கிறேனென்று எனது சகோதரிகளான Nilaksi யும் Shalika  வும் என்னை ஏசியபோதும், நான் அவவை அவமானப்படுத்தி விட்டேனென்பதற்காக அவவின் முன்னால் செல்லவில்லை. முடிவிலே, கீழே வீழ்ந்ததின் காரணத்தால் ஒரு நாளிலேயே அவ இறந்தபோது நான் அருகிலில்லை. 
அம்மா இறந்த சில நாட்களிலேயே நான் இராணுவத்திலிருந்து வெளியேறினேன். 
அப்போது, இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, வன்னிக்காட்டுக்குள்ளும் கிழக்கு மாகாணத்திலும் இருந்த புலிகளை அழித்துவிடுவதில் தனது முழுப்பலத்தையும் பாவித்தனர்.
புலிகளை அழிக்கவேண்டுமென்பதிலும் தமிழ் ஈழம் கிடைக்கும் என்ற நம்பிக்கையைத் தகர்ப்பதிலும் அரசாங்கம் கொண்டிருந்த கடுமையான போக்கினால் பல அப்பாவித் தமிழர்களின் உயிர் போகுமென்பதை அறிந்தே இருந்தார்கள் – அந்த விலையைக் கொடுப்பதற்குத் தயாராக இருந்தார்கள். 
அதற்கு உடந்தையாக இருக்க எனக்கு விருப்பமில்லை.
அதிஸ்டவசமாக கேர்னல் விஜேரட்னவிற்கு என்னைப் பிடித்துவிட்டது; மருத்துவக் காரணத்திற்காக என்னை விலக அனுமதித்தார். 
இதுவரை நான் சேமித்து வைத்திருந்த பணத்துடன் அம்மாவின் வீடு விற்ற பணத்தையும் சேர்த்து கொழும்பிலுள்ள லக்கி பிளாசா என்ற இடத்தில்  சிறியதாக ஒரு கைக்கடிகாரம் திருத்தும் ஒரு கடையை ஆரம்பித்தேன்.   
நீண்டநேர வேலை எனக்குப் பெருத்த ஆறுதலைத் தந்தது. சீதாவையும் அவளது சகோதரிகளையும் பற்றிய சிந்தனைகள் எப்போதெல்லாம் எனது மனதில் வந்து  என்னைச் சித்திரவதைப் படுத்தினவோ அப்போதெல்லாம் கடிகாரத்திலிருந்து வரும் டிக் டிக் என்ற சத்தம் என்னைச் சாந்தப்படுத்தியது. 
அந்தச் சிறிய கடைதான் எனது வாழ்க்கையாக இருந்தது. காலப்போக்கிலே, உலகின் பல பாகங்களில் இருந்து கடிகாரங்களை இறக்குமதிசெய்து எனது வியாபாரத்தை விரிவாக்கினேன். எனது சிறிய வியாபாரம் இப்போது பிளாசாவின் மையத்திலே ஒரு பெரிய கடையாக மாறி, பத்து வேலையாட்கள் வரும் வாடிக்கையாளர்களைத் திருப்திப் படுத்துவதில் களைப்பின்றி வேலை செய்கிறார்கள்.
காலப்போக்கிலே எனது குற்ற உணர்வு மங்கிப் போய்விடுமென தன்நலத்துடன்  நினைத்திருந்தேன். ஆனால், வருடங்கள் போகப்போக என்னுடைய சுய வெறுப்பும் அதிகரித்தது. என்னத்தை நான் எதிர்கொண்டாலும் வல்வெட்டித்துறைக்கு நான் சென்றே தீரவேண்டும் என்ற ஞானோதயம் எனக்குள் வந்தது.
எப்படியான கண்டுபிடிப்பு அது! ஒரு குழந்தைக்குத் தந்தையானேன் என்ற கொடூரமான உண்மை, என்னுடைய தோலின் ஒவ்வொரு அங்குலமும் பழுதுபார்க்க முடியாதபடி சாட்டையால் அடிக்கவேண்டுமென்று என்னை விரட்டியது. என்னுடைய மோசமான குற்றச்செயல் ஒரு அப்பாவிப்பெண்ணின் உடலையும் ஆத்மாவையும் நொருக்கியது மாத்திரமில்லாமல் ஒரு ஆதரவற்ற – காதலினால் உருவாகாமல் வெறும் காமத்தினாலும் வெறுப்பினாலும் உருவாகிய – குழந்தையை இந்த உலகிற்குக் கொண்டுவந்துள்ளது. 
பரிகாரம் செய்யவேண்டிய நேரம் வந்துவிட்டது, என்ன விலை கொடுத்தாவது, எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். அதைப் பின்போடுவதற்கு எனக்கு எந்தச் சாக்குப்போக்கும் கிடையாது.
வியாபாரத்தை நன்கு கவனிக்குமாறு கடை ஊழியர்களுக்கு வழிமுறைகளைச் சொன்னேன். நான் மெல்பேர்ண் க்கு அவளைப் பார்ப்பதற்காக வருகிறேன் என்று Shalika  விற்குச் சொன்னேன். பல வருடங்கள் இடைவிடாமல் வேலை செய்ததனால் எனக்கு ஒரு நீண்ட ஓய்வு தேவைப்படுவதால் ஒரு வருட சுற்றுலா விசாவில் வருவதாகச் சொன்னேன். தன்னுடைய குடும்பத்துடன் நான் தங்கலாமென்று அவ சொன்னபோதும், அவவின் மகனுடைய திருமணம் வருடக் கடைசியில் வருவதால், எல்லோருடைய தனிமையையும் கருத்தில்கொண்டு, அவவின் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள   சேவைகளை உள்ளடக்கிய சிறிய வீட்டை ஒழுங்குபடுத்தித் தருமாறு கேட்டேன்.   
அந்த வீட்டிலே நான் சரியானபடி குடியேறியபின்பு அருவி வேலைபார்த்த கிளினிக்கைக் கண்டுபிடிப்பது இலகுவாக இருந்தது; அவவைச் சந்திப்பதற்கான நேரத்தை ஒழுங்கு செய்வது அதைவிட இலகுவாக இருந்தது. Shalika வின் மகன் தன்னுடைய பழைய காரை எனது பாவனைக்குத் தந்திருந்தார். கூகிள் வரைபட உதவியுடன் இலகுவாகவே கிளினிக்கைச் சென்றடைந்தேன்; எனது இருதயம் மார்பைவிட்டு வெளியே வந்துவிடுமோவென்று பயப்படும்வண்ணம் பயங்கரமாக அடித்தது. 
அருவியை நான் முதன்முறையாகப் பார்த்தபோது, அவள் என்னைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டபோது அம்மாவின் முகம் எனக்கு முன்னால் பளிச்சிட்டது – அம்மாவினுடையதுமாதிரி மென்மையாக வளைந்த உதடுகள், உள்ளேயிருந்து வெளிப்படும் அமைதியான கருணை.
அந்தத் தருணத்தில், சத்தம்போட்டு அழ நினைத்தேன்.
என்னை மன்னித்துவிடு, அம்மா
என்னை மன்னித்துவிடு, சீதா
என்னை மன்னித்துவிடு, என்னுடைய குழந்தை.
என்னுடைய பெயரைத் திரும்பக் கூப்பிட்டபோது அருவியின் முகத்தில் தெரிந்த அக்கறை அதிகரித்தது. அவவின் பின்னால் நோயாளிகளைப் பார்க்கும் அறைக்குள் நுழைந்தேன், அவள் இருக்குமிடத்தில் முதல்முறையாக மூச்சு விட்டபடி. அருவியின் மேசையில் தங்கமுலாம் பூசிப்பட்ட புகைப்படச் சட்டத்திலிருந்த ஆளுமைமிக்க அழகான பெண் என்ன தைரியத்துடன் இந்த புனிதமான இடத்திற்கு வந்திருக்கிறாய் என்று கேட்பதுபோல இருந்தது. புகைப்படத்தில்கூட சீதாவின் கண்களைப் பார்க்கும் தைரியம் எனக்கிருக்கவில்லை – அதுவரையில்.
அன்றைய தினம் அருவியை எவ்வளவோ கேள்விகள் கேட்க வேண்டுமென நினைத்தேன் : அவவின் வாழ்க்கைபற்றி, அவவின் தாயார்பற்றி, நான் எப்படிப்பட்ட காமுகன் என்று எப்போதாவது பேசியுள்ளாவா என்பதுபற்றி. மாறாக, எனக்குத் தேவையில்லாத மருந்துச் சீட்டு பற்றிக்கேட்டேன், அதிகம் உள்ளே போய்க் கதைக்க விரும்பாத யுத்ததைப்பற்றி மேலெழுந்தமாதிரிக் கதைத்தேன். அங்கேயே இன்னும் கொஞ்ச நேரம் நின்று, அந்தத் தருணத்தை ருசித்துப் பார்க்க விரும்பியபோதும், அருவி என்னை அனுப்புவதில் குறியாக இருந்தாள்.
மறுநாள் எனது மூக்குக்கண்ணாடியைத் தேடிவருவதுமாதிரி திரும்பவும் கிளினிக்குச் சென்றேன். ஒரு கணமேனும் அருவியைப் பார்த்தால் அது போதுமானது. வரவேற்பறையிலிருந்த பெண்ணை நெருங்கியபோது, அவள் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள்.
“ ஹலோ, இது Villas தானா? இன்றைய இரவு உணவிற்காக  ஒரு மேசை ஒதுக்கமுடியுமா?” 
 ஒரு சிறிய தாமதத்திற்குப் பின்பு, “ அருவி முருகதாஸ் பெயரில், பத்துப்பேர், மாலை6;30.”
இன்னும் ஒரு தாமதம். “நன்றி. நான் உங்கள் விலாசத்தை உருதிப்படுத்தலாமா? -488 Burke Street.”
போனை வைத்துவிட்டு, என்னைப் பார்த்து,
“ஹலோ, உங்களுக்கு டாக்டருடன் சந்திப்பு இருக்கிறதா?”
மன்னிக்குமாறு முணுமுணுத்துவிட்டு, தொலைந்துபோன எனது மூக்குக்கண்னாடியைக் கண்டுபிடித்துவிட்டேன் என்று கூறியபடி அங்கிருந்து விரைந்து வெளியேறினேன். ஆனால் என் மனதில் ஒரு திட்டம் உதித்துவிட்டது – இன்று மாலையில் தற்செயலாக உணவகத்தில் நான் அருவியைச் சந்திக்கலாம். எனக்கு அத்ர்ஸ்டம் இருந்தால் வருகின்ற கூட்டத்தில் சீதாவும் இருக்கலாம். 
அந்த உணவகத்துள் காலடி எடுத்துவைத்து, ஒரு பெரிய மேசையைச் சுற்றி இருந்த பெரிய குடும்பத்தைக் கண்டபோது, கிட்டத்தட்ட நான் திரும்பிவிட்டேன். சீதா என்னை அடையாளம் கண்டால்? அந்த மோசமான இரவில் அவளுடன் இருந்த இரண்டு சகோதரிகளில் ஒருத்தி என்னை அடையாளம் கண்டால்?
ஆனால் என்னுடைய கால்கள் இரும்புபோலக் கனத்தது; என்னால் திரும்ப முடியவில்லை. காற்றிலே மிதந்துவந்த அவர்களின் மகிழ்ச்சியான சிரிப்பலைகள் என்னை கலங்கரை விளக்கைப்போலக் கவர்ந்திழுத்தது. பணிப்பெண் ஒருவருக்காகக் காத்துக் கொண்டிருந்த நேரத்தில், பின்புலத்திலே துடிப்பான பாட்டுப் போய்க்கொண்டிருந்தபோதும், பக்கத்து மேசைகளில் கோப்பைகளின் சத்தங்கள் கேட்டபோதும்,  அவர்களுடைய மகிழ்சிமிக்க உரையாடல்கள்தான் எனது காதுகளை நிரப்பிக் கொண்டிருந்தன.
அவர்களை முறைத்துப்பார்க்காமல் இருக்க முயற்சித்தேன், ஆனால் அருவி மேலும் அவளின் பக்கத்தில் இருந்த பெண் மேலும் என் கண்கள் போவதை என்னால் தவிர்க்கமுடியவில்லை. ஒம், அது சீதா: அதே ஒளிரும் கருமை நிறம், அதே கவர்ச்சிகரமான கழுத்து, அதே அடர்த்தியான கருமைநிறக் கூந்தல் சிற்றருவிபோல தோள்வழியே அசைந்தாடியது. திடீரென அவ என்னை நிமிர்ந்து பார்த்தா, அவவின் மை பூசிய மானைப்போன்ற கண்கள் என்னை ஆர்வத்துடன் ஒரு கணம் பார்த்தபோது, நான் பிடிபட்டதுபோல உணர்ந்தேன்.     
என்னால் முடியாது, எனது மனம் அலறியது. அங்கிருந்து திரும்பலாமென்று நினைத்தபோது ஒரு பணிப்பெண் என்னருகில் வந்து நான் அங்கே சாப்பிடுவதற்குப் பதிந்துள்ளேனாவென்று கேட்டார். எனது இதயம் பெரிதாகத் துடிக்க, இல்லையென்று தலையாட்டியவாறு ஒருவர் இருந்து சாப்பிடக்கூடிய மேசை உள்ளதா என்று கேட்டேன். தன்னைப் பின்தொடருமாறு சமிக்ஞை செய்த பெண்ணைத் தொடர்ந்து நான் போகும்போது சீதாவின் பார்வை என்னில் நிலைகுத்தி இருப்பதாக உணர்ந்தேன். 
அவர்களுடைய மேசையை நான் கடந்து செல்லும்போது, ஆச்சரியத்துடன் அருவி துள்ளிப்பாய்ந்தா. “ திரு அபேய்கூன்! இங்கே உங்களைச் சந்திக்கும் ஆச்சரியம் பற்றி என்ன சொல்லலாம். நீங்கள் இப்போது மிகுந்த நலத்துடன் இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்.”
சீதாவின் கண்களிலே என்னை அடையாளம் கண்டமாதிரித் தெரியவில்லை, ஆனால் சாடையான குழப்பம் இருந்தது. 
தயக்கத்துடன் அருவி அழைத்த அழைப்பை நான் ஏற்றுக்கொண்டவுடன் அவர்களிடையே ஒருவிதமான அமைதியின்மை அலைபாய்வதை
உணரமுடிந்தது.
நான் அங்கிருந்து வெளியேறியிருந்தால் நல்லாயிருந்திருக்கக் கூடும். என் மகளைப்பற்றி அறியவேண்டும், நான் செய்த இழிசெயலுக்கு ஏதாவது பரிகாரம் செய்யவேண்டும் என்ற சக்தி வாய்ந்த சலனத்தைத் தடுக்கமுடியவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிட்டால் மீண்டும் ஒருமுறை கிடைக்காமலே போய்விடக்கூடும். ஒரு டாக்டர் வேணும் என்ற சாட்டிலே அருவியைப் பார்க்கக்கூடும், ஆனால் சீதாவை நெருங்க வேறு வழியில்லை.
அவ்வாறே, மீண்டும் ஒருமுறை அவர்களின் வாழ்க்கையில் பொய்மைத்தனமான முறையில் உள்ளே நுழைந்தேன் என்று சொல்லவே வெட்கமாக உள்ளது.
அவர்களுடைய அரவணைப்பிலும், நாகரீகமான வரவேற்பிலும் சூழ்ப்பட்டு நான் இருந்தபோது, அருவிக்கும் சீதாவிற்கும் நான் செய்த கொடூரமான குற்றத்தைப்பற்றிச் சொல்லவேண்டுமென்று நினைத்தேன். அவர்கள் வாழ்க்கைக்கு நான் தேவையில்லை என்பது எனக்குத் தெரிகிறது. என்னை மன்னிப்பதற்கு அவர்கள்தான் எனக்குத் தேவைப்படுகிறார்கள். என்னுடைய உயிரே போனாலும், அவர்கள் என்ன தண்டனை கொடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள நான் தயாராயிருந்தேன்.
Villas  இல் உண்வருந்திய தினத்திற்குப்பிறகு ஒவ்வொரு நாளும் காலையில் Bellbird Dell Reserve எங்கின்ற பார்க்கிற்கு சீதாவைத் தனிமையில் பார்க்கலாமென்ற நப்பாசையில் செல்வேன்.
உணவருந்திக் கொண்டிருந்தபோது   கேசரியை உண்ண வைப்பதற்கு சீதாவை மோகன் தூண்டிக் கொண்டிருக்கையில், சீதா சிரித்துக்கொண்டே,
“மோகன், இதற்குமேல் என்னால் சாப்பிடமுடியாது.  இப்போதுள்ள நிலைமையில், இன்று சாப்பிட்டு நான் சேகரித்த கலோறீசை எரிப்பதற்கே கிழமையில் இன்னுமொரு நாள் நான் நடக்கவேண்டும்.”
“சென்ற ஞாயிற்றுக்கிழமை அருவி என்னை Ruffey Lake Park க்கு அழைத்துச் சென்றாள். அங்குதான் நடப்பதற்கு நீ போவாயா, சீதா?”, மெல்பேர்ண் ஐப்பற்றிய தனது அறிவை எண்ணிப் பெருமைப்பட்ட மோகன் கேட்டார்.
தலைய ஆட்டியபடியே சீதா, “ எனக்கு Ruffy Lake உம் பிடிக்கும், ஆனால் அருவியைச் சந்திக்கப் போகும்போதெல்லாம்தான் அங்கு போவேன். வழக்கமாக எனது வீட்டருகில் இருக்கும் Bellbird Dell Reserve க்குத்தான் போவேன்.”
அப்போதுதான் அந்தத் திட்டம் உருவானது. எவ்வளவு நேரம் எடுக்கிறது என்பதுபற்றி எனக்குக் கவலை கிடையாது.  Bellbird Dell Reserve க்கு     சீதாவைத் ‘தற்செயலாகச்’ சந்திக்கும் நாள்வரை செல்வேன். 
 
அத்தியாயம் 16 -  மன்னிக்கமுடியாததை மன்னித்தல்
நல்லக
ஜூன்-ஜூலை 2025
மெல்பேர்ண்  
மூன்று நாட்களுக்குப்பிறகு ஒரு சனிக்கிழமைதான் என்னுடைய திட்டம் நிறைவேறியது. தன்னுடைய நீண்ட கூந்தலை ஒரு பின்னப்பட்ட தொப்பியின் கீழே மறைத்தபடி நடைபாதையை நோக்கி சீதா வேகமாக நடந்தாள். அவள் தன்னுடைய தலையை சூரியனை நோக்கித் திருப்பியபோதெல்லாம் அவளுடைய முகத்தின் ஒவ்வொரு அம்சமும்  மென்மையான வெளிச்சத்தில் மின்னியது. 
ஆரம்பத்தில் எதிர்திசையிலிருந்து வந்து கொண்டிருந்த என்னை அவள் அடையாளம் காணவில்லை. நான் அருகில் சென்றபோது, தனது தலையைத் தூக்கி என்னை நேரடியாகப் பார்த்தாள்- அவளுடைய கண்கள் என்னுடைய கண்களை ஊடுருவியபோது அவளின் புருவங்களுக்கு மத்தியில் ஒரு மடிப்பு ஏற்பட்டது. நான் என்ன சொல்லவேண்டுமென்று ஆயிரம் முறைகள் ஒத்திகை பார்த்துவிட்டேன்.
நீங்கள்  டாக்டர் அருவியின் அம்மா, இல்லையா?
எங்கள் இருவருக்கும் ஒரே எண்ணம் போலுள்ளது
ஒரு குளிர்ந்த காலையிலே எங்களை சூடாக்க ஒரு வேகமான நடையைப்போல எதுவுமே வராது
பறவைகள் மற்றும் பசுமையான தாவரங்களால் சூழப்பட்ட இந்த இடத்தில் நடப்பது எனக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கும் என்று எனது மருமகன் சொன்னான்.
அதன்பிறகு இருவரும் அருகருகே அந்தப் பச்சை நடைபாதையில் மெதுவாக நடந்துகொண்டே ஒருவர்க்கொருவர் அறிமுகமானவர்கள்போல கதைப்போம் என்று கற்பனை செய்திருந்தேன்.
ஆனால் ஒரு வார்த்தையும் வரவில்லை. அவளுடைய அந்தப் பார்வையின் அமைதியான தீவிரம் என்னை வாயடைக்கச் செய்துவிட்டது. வேகமாக அடித்துக் கொண்டிருந்த எனது இருதயம் இயல்புநிலைக்கு வரமாட்டாதா என்ற ஆதங்கத்துடன் ஈரமான மண்ணினதும், யூகலிப்டஸ் மரத்தினதும் வாசனையை முகர்ந்துகொண்டு அவளை உற்றுப்பார்த்தேன்.  அவளும் என்னை உற்றுப்பார்த்தாள். அவளிடமிருந்து ஒரு நடுக்கம் வெளிப்பட்டது, மூச்சுவிடத் திணறினாள்.
அவளுடைய கண்களில் இருந்துவந்த தீப்பொறியிலிருந்தும், அவள் நாடியைச் சாய்த்தவிதத்தில் இருந்த எதிர்ப்பிலிருந்தும் தப்புவதற்காக எனது முகத்தை மூட விரும்பினேன். ஆனால் எனது குற்றத்தை அவளிடம் ஒப்புக்கொள்ளவேண்டும் என்பது எனக்குத் தெரியும். ஆகவே, எனது தலை அசைப்பினால் எனது குற்றத்தை ஒத்துக்கொண்டேன்.
இப்போதும் அவள் பேசவில்லை.  அவள் சும்மா என்னை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த நேரம் எல்லையற்றதுமாதிரி இருந்தது. இறுதியாக, நடைபாதையை நோக்கித் திரும்பியவாறு, தலையை அசைத்துக்கொண்டு நடக்கத் தொடங்கினாள். நன்றி உணர்வுடன், நான் அவளுடன் இணைந்து அந்த பூங்காவைச் சுற்றி மெதுவாக நடந்தோம்.
அவள்தான் முதலில் பேசினாள். “Villas இல் உங்களைப் பார்த்தபோது தெரிந்தவர் போல இருக்கிறீர்கள் என்று நினைத்தேன்.”
சிறிது இடைநிறுத்தினாள், ஒரு ஆழ்ந்த மூச்செடுத்த அவள் வாயின் ஒரு மூலை மேலே வளைந்தது. “உங்களுக்குத் தெரியுமா, உங்களுடைய தப்பால் எனக்கு மல்லிகை வாசமென்றாலே பிடிக்காது. அன்றைய தினம் Villas  இல் அந்த வாசம் வந்தது, இன்று நீங்கள் என்னருகே வந்தபோது மீண்டும் வந்தது.”
என்னுடைய பக்கக் கதையை அவளுக்கு விளங்கப்படுத்த விரும்பினேன்; அந்த மோசமான இரவில் அங்கேயிருந்தது நான் இல்லை – சொல்லமுடியாத வன்முறையை அவள் மேல் பாவித்தபோது நான் நானாக இல்லை. ரோகனின் மரணத்தால் நான் சித்திரவதைக்குள்ளாகி இருந்தேன். இதயமில்லாத ஒரு மிருகமாக வருவதற்கு அது ஒரு காரணமில்லை, ஆனால் வேதனையும் ஆத்திரமும் என் கண்களைக் குருடாக்கிவிட்டன. இவற்றைச் சொல்லத் துடித்தேன்.
ஆனால் மறுபடியும் ஒரு வார்த்தையும் வரவில்லை. நான் அவளிடமிருந்து  மன்னிப்பை எதிர்பார்க்கிறேனென்று அவள் நினைப்பதை நான் விரும்பவில்லை.
அவள் என்னை எதிர்கொண்டவிதம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவளிடமிருந்து கடுமையான வெறுப்பு ஒன்றையே எதிர்பார்த்தேன். அதற்குப்பதிலாக, அவள் கண்களிலும் குரலிலும் கோபம், குற்றச்சாட்டு, கசப்பு என்பவற்றைக் காணமுடியவில்லை; மாறாக நான் இருந்தமாதிரியே என்னை ஏற்றுக்கொண்டாள்.
“என்னைக் கண்டுபிடித்ததில் உங்கள் தைரியம் தெரிகிறது.” அவள் என்னை ஆராயும் விதத்தில் பார்த்தாள். “உங்களுக்கு என்ன வேண்டும்?”
அவளுடைய மென்மையான தொனி நான்  தொங்கிக் கொண்டிருந்த உடையக்கூடிய கட்டுப்பாட்டைத் தகர்த்துவிட்டது. எனது தோள்கள் நடுங்கின, எனது கன்னம் வழியே கண்ணீர் வழிந்தோடியது. நான் என்னுடைய குரலையே நம்பவில்லை. என்னுடைய வேதனைமிக்க கண்களால் அவளுடைய கண்களைப் பார்க்க மறுத்துவிட்டேன். அவளருகில் மௌனமாக நடந்துசென்றேன்.
நாங்கள் ஒரு வாங்கிலைக் கடந்து செல்லும்போது, அதில் நாங்கள் இருக்கலாமென்று அவள் சைகை செய்தாள்.
“என்னை மன்னித்துவிடுங்கள்,” அழுதுகொண்டே அவளருகில் சாய்ந்தேன்.
ஒரு நீண்ட சிந்தனை கலந்த பார்வையுடன் என் பக்கம் திரும்பினாள்.
“நான் அடிக்கடி அந்த இரவைப்பற்றிச் சிந்திப்பதுண்டு. நான் கொஞ்சம் அதிகமாக சண்டை பிடித்திருக்கவேண்டும். அப்படி நான் தடுத்திருந்தால், நடந்தவை வேறு மாதிரியாக இருந்திருக்கக்கூடும். காவியா, முத்து, நான் மூவரும் உங்களைக் கலைத்திருக்கவேண்டும். உங்களைப் பார்த்தால் துவக்கைப் பாவிக்கிற ஆள் மாதிரித் தெரியவில்லை.”
“இல்லை,” கசப்புடன் சொன்னேன், “அப்பாவிப் பெண்களை அவர்கள் வீட்டிலேயே கற்பழிக்கும் வகையைச் சேர்ந்தவன் நான்.”
அவளுடைய பார்வை என்னுடைய பார்வையுடன் கலந்தது. அவளுடைய கண்களிலே ஒரு மினுமினுப்புத் தெரிந்தது- இது ஒதுக்கித் தள்ளக்கூடிய மினுமினுப்பு அல்ல ; ஆனால் நரகத்தின் ஊடாக இழுத்துச் செல்லப்பட்ட ஒரு பெண்  அந்தத் தடைகளை மீறி எழுந்து வந்தவள் எனக்காட்டும் தெளிவான மினுமினுப்பு.
“அமைதி என்பது எனக்கு விரைவாகக் கிடைக்கவில்லை, நல்லக.  எனது இதயத்தின் இருண்ட மூலைகளோடு பல வருடங்கள் மல்யுத்தம் செய்தபின்னர்தான், நான் முழுமையாக நிற்கத் தொடங்கினேன். இப்போது நீங்கள் பார்ப்பது ஒரு சாதாரணமான மன்னிப்பு இல்லை – உள்ளே இருக்கும் எல்லாவற்றையும் போக விட்டதுதான் காரணம், ஏனென்றால் எனக்குள் இருந்த வெறுப்பு என்னை எரித்துக்கொண்டே இருந்தது. அந்த வெறுப்பை வெளியே போகவிட்டபின்தான் எனக்கு அமைதி கிடைத்தது.”
அவள் நன்றாக மூச்சிழுத்தாள், “உங்கள்மேல் அதிகமாகக் கடுமையாக இருக்கவேண்டாம். பல மனிதர்களை யுத்தம் அரக்கர்களாக்கிவிட்டது. நீங்கள் செய்தது….. மன்னிக்கமுடியாத செயல், ஓம் – ஆனால் நீங்கள் அந்தச் சுமையுடன் வாழ்ந்திருக்கிறீர்கள், அது பார்க்கவே தெரிகிறது.”
ஒரு ஏக்கம் கலந்த புன்னகை அவள் உதட்டில் மலர்ந்தது, “ஓரு வழியில் பார்த்தால், நாங்கள் எல்லோரும் பாவிகள். உங்களுடைய குற்றம் அப்பட்டமாகத் தெரிகிறது, ஆனால் வேறு……”, அவள் சற்று நிறுத்தி, என்னை ஒரு இனம்தெரியாத சோகத்துடன் பார்த்தாள். “  ஆனால் வேறுசிலரின் குற்றங்கள் உலகத்திலிருந்து மறைக்கப்பட்டுள்ளன.”
சீதா என்னைச் சத்தம்போட்டு ஏசுவாள், எனக்கு அடிப்பாள், என்னை யாரென்று தெரிந்தவுடன் துப்பறிவாளர்களுக்குக் காட்டிக்கொடுப்பாள்    என எதிர்பார்த்தேன். அதற்குப்பதிலாக நெடுங்கால நண்பர்கள்போலப் பேசினோம். எமது வாழ்க்கையின் சிறுசிறு பகுதிகளைப் பகிர்ந்து கொண்டபோது நேரம் போனதே தெரியவில்லை. மதிய உணவு சாப்பிடாதலால்  வயிற்றுக்குள்ளே இருந்து தன்னிச்சையாக வந்த சத்ததைக்கேட்டு சீதா சிரித்தாள்.
பக்கத்திலே ஒரு கஃபே இருக்கிறது. அவர்கள் சிறந்த focaccias செய்வார்கள். போய்ச் சாப்பிடலாமா? எனக்கும் சரியாகப் பசிக்கிறது.”
நான் நம்பமுடியாமல் அவளை உற்றுப்பார்த்தேன். “ உங்களைக் கெடுத்தவனுடன் சாப்பிடப் போகிறீர்களா?”
“நான் உங்களை நம்பலாம் என்று உணருகிறேன்,” அமைதியாகச் சொன்னாள். “யுத்தம் என்பது மனிதர்களை அவர்கள் ஒருபோதும் விரும்பாத  குணம் கொண்டவர்களாக மாற்றியமைக்கிறது. நீங்கள் அதையிட்டு மிகவும் வருத்தப் படுகிறீர்கள் என்பது தெரிகிறது… உங்கள் கண்களிலுள்ள வருத்தம் தெளிவாகச் சொல்கிறது.” 
அவளுடைய வார்த்தைகளில் இருந்த கருணையைப் பார்த்து நான் திடுக்கிட்டேன். அவளது மன்னிப்பை ஏற்பதற்கு நான் தயாராக இருக்கவில்லை – இன்னும் இல்லை – ஒருபோதும் இருக்கமாட்டேன்.
அவளுடைய புன்னகை மேலும் ஆழமானது. “திருவள்ளுவர் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா?”
நான் தலையை ஆட்டினேன், ஆனால் பண்டைய தமிழ் தத்துவஞானியைப்பற்றி ஏண் கேட்கிறாள் என்று தடுமாறினேன்.
“ அவர் சொன்னார்,
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்துவிடல்
 உங்களுக்குத் தீங்கு செய்த ஒருவருக்குச் சரியான தண்டனை எதுவென்றால் அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மை செய்வதாகும்.’”
சிறிது நிறுத்தி, தொடர்ந்தாள்.
“என்னைத் தப்பாக நினைக்காதீர்கள் – திருவள்ளுவர் மனிதர்கள் செய்யும் பிழைகளை  முக்கியம் இல்லாததாகக் கருதச் சொல்லவில்லை. அவர் என்ன சொல்கிறாரென்றால் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நல்ல குணத்தின் பொறி இருப்பதாயும், தான் காயப்படுத்திய ஒருவனால் மன்னிக்கப்படும்போது, அந்த நல்ல குணம் வெளிப்படுகிறது.  
பலவீனத்தில் இல்லாமல் அறிவுபூர்வமாக மன்னிக்கப்படுவதுதான் நல்ல குணத்தை வெளிக்கொணரும்.”
இந்தத் தருணத்தில்தான் எங்களுடைய நட்பு ஆரம்பித்தது. இந்த நட்பு மன்னிப்பு, ஏற்றுக்கொள்ளல், பகிர்ந்துகோண்ட ஆன்மீகத் தொடர்பு ஆகியவற்றில் கட்டப்பட்ட நட்பு. எல்லாவற்றிற்கும் மேலாக இரண்டு தனிமையில் இருந்த ஆத்மாக்களின் பிணைப்பு.
எங்களுடைய முதல் சந்திப்புக்குப் பின்னர் நாங்கள் அடிக்கடி சந்திக்க ஆரம்பித்தோம். தன்னுடைய வீட்டிற்குக்கூட என்னை அழைத்துச் சென்று Zoe விற்கும், கொஞ்சம் அலட்டலான வயதான அயலவருக்கும், நான் ஒரு அன்பான தெரிந்தவர் போல, அறிமுகப் படுத்தப்பட்டேன். நான் அருவியைப் பார்ப்பதற்கு எவ்வளவு ஆர்வமுள்ளேன் என்பதை அவள் உண்ர்ந்திருக்கவேண்டும், ஏனென்றால் ஒரு சாயந்தரம், நான் பார்க்கில் அவளைச் சந்தித்து ஆறு வாரங்களுக்குப்பின், மெதுவாகச் சொன்னாள், “ அருவி இப்போது யாழ்ப்பாணத்தில் இருக்கிறாள், அவள் வந்தவுடனே உங்களைப்பற்றி அவளுடன் பேசுகிறேன்,” நான் தலையசைத்து ஓமென்றேன்.
நான் யாரென்பது அருவிக்குத் தெரியவேண்டுமென விரும்பினேன், அவள் தந்தையாக என்னை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதற்காக இல்லை, அவள் உண்மையை அறிந்துகொள்வதுதான் எனது மீட்சிக்கு ஒரே வழி.
கவலை மிகுந்த கண்களுடன்  சீதா தொடர்ந்தாள்.
“நான் என்னுடைய சகோதரிகளுக்கும்கூடச் சொல்லவேண்டும், ஆனால் அது இலகுவாக இருக்கப் போவதில்லை. எனக்கு மிகத் தெளிவாகத்தெரியும், ஜெயா உங்களை மன்னிக்கப் போவதில்லை. என்னையும்தான் உங்களைக் கண்டிக்காமல் இருப்பதற்காக.”
“அது சரிதான்,” நான் சொன்னேன். “காவியாவின் கொலைகாரர்களை வேட்டையாடிக் கொல்லவேண்டுமென்று இருப்பவள்தானே ஜெயா, அப்படித்தானே?”
“ஓம், அவள் எல்லா சிங்களவர்களையும் வெறுக்கிறாள். அவள் மாத்திரம் அன்று Villas  இல் இருந்திருப்பாயின், உங்களை எங்களுடன் சேர விட்டிருக்கமாட்டாள்.”  
“நான் அவளிடத்தில் இருந்தால், அப்பிடித்தான் இருப்பேன்,” சோகத்துடன் சொன்னேன். “சீதா! உனது குடும்பத்திற்கு எப்போ சொல்ல விரும்புகிறாயென்று நீயே தீர்மானித்துக்கொள். அருவிக்குத் தெரியவேணுமென்பதுதான் என் ஆசை, அதுவும் நீ தயாராக இருக்கும்போதுதான்.”
அருவி இலங்கையிலிருந்து திரும்பிவந்த நாளில் நாங்கள் இரவு உணவு ஒன்றாக உண்டோம்.
“Zoe என்னுடன் வந்துவிட்டாளென்று அருவிக்கு இன்னமும் தெரியாது. அவளுக்கு ஆச்சரியமாயிருக்கும். ஆனால் சந்தோஷமாயிருக்கும், அதிலும் Zoe என்ன கடுமையான அனுபவங்களுக்கு உள்ளானாள் என்பது தெரியவரும்போது. இருவரும் சகோதரிகள் மாதிரி இருந்தார்கள்…… Zoe வீட்டிற்கு வருவதை நிறுத்தியபோது அவளின் மேல் அதிக அக்கறை எடுத்துக் கவனிக்கவில்லை என்பதை நினைக்க வெட்கமாயிருக்கிறது.” 
அவள் குரலில் நடுக்கம் தெரிந்தது, கண்ணீர்த்துளிகள் இமையில் தொங்கிக்கொண்டிருந்தன.
“நீங்கள் Zoe  விற்குச் செய்த எல்லாவற்றிற்கும் அவள் உங்களிடம் மிகுந்த நன்றியுள்ளவளாக இருக்கிறாள் என்பது உங்களுக்குத் தெரியும்தானே,” நான் சொன்னேன். “உங்கள்மேல் அதிகம் வருத்தப் படாதீர்கள், உங்களுக்கு உங்கள் பிரச்சனையே அதிகம்.”
       அவள் நன்றியுடன் சிரித்துக்கொண்டு தனது கையை எனது கைமேல் வைத்தாள். சிந்தித்துப் பார்க்காமலே உள்ளுணர்வால் எனது உடம்பிலுள்ள எல்லா நரம்புகளும் இறுக்கமாயின. அதிர்ச்சியடைந்து அவளை உற்றுப் பார்த்தபடி பின்வாங்கினேன். அவளைச் சந்தித்த நாள்முதல் தற்செயலாகக்கூட அவளைத் தொடுவதைத் தவிர்த்துவந்தேன். ஒருமுறை எனது கொடூரமான தொடுதலால் அவளைக் கடுமையாகக் காயப்படுத்திவிட்டேன், இனிமேல் அவளைத் தொடுவதில்லையென உறுதியுடன் இருந்தேன் – அவளையென்ன, ஒரு பெண்ணையுமே. 
ஆனால் சீதா என்னைப் போகவிடவில்லை. தனது கையால் எனது கையைப் பிடித்துக்கொண்டு, மென்மையாகவும் நிதானத்துடனும் என்னைப் பார்த்தாள்.
“என்னைக் கல்யாணம் முடி, சீதா, என்னைக் கல்யாணம் முடி. உன்னை என் தலைமேல் வைத்துப் போற்றுவேன். நீ உயிருடன் இருக்கும்வரை உன் தேவைகளை நான் கவனித்துக்கொள்வேன்!” நான் பிதற்றினேன்.
சீதா அதிர்ச்சியடைந்தாள். ஆனால் அவளின் அதிர்ச்சி என்னுடைய துணிச்சலைப் பார்த்து நான் அதிர்ச்சி அடைந்ததுடன் ஒப்பிடும்போது மிகவும் சிறியது.
ஓம், அவளை மணமுடிக்க எனக்கு விருப்பம்- சும்மா ஆசையினால் அல்ல, பக்தியினால். நான் அவவின் மன்னிப்பை எதிர்பார்க்கவில்லை, அவளைத் தொடவும் நினைத்துப் பார்க்கவில்லை. அவளிற்குப் வெகு அருகாமையில் நின்று அவளைப் பாதுகாத்து, இதுவரை அவளுக்கு மறுக்கப்பட்டிருந்த சொகுசான வாழ்க்கையைக் கொடுக்கும் கௌரவம் எனக்குக் கிடைக்கவேண்டுமென ஆசைப்பட்டேன். நான் அவளிடமிருந்து திருடியதற்கு பரிகாரமாக எனது எஞ்சிய காலத்தை அவளுடைய நன்மைக்காக செலவழித்தால், என்னை ஒரு ஆசீர்வாதிக்கப்பட்டவன் என்று நினைப்பேன்.
ஆனால் என்னுடைய மோசமான கனவுகளில்கூட, அந்த வார்த்தைகளைச் சொல்வேனென கற்பனைசெய்தும் பார்க்கவில்லை.
அதிச்சியடைந்திருந்த சீதாவின் முகம் இப்போது கொஞ்சம் மென்மையடைந்திருந்தது ---ஒரு மெல்லிய சோகத்துடன்.
“நல்லக,” அமைதியாகச் சொன்னாள், “ நாங்கள் மணமுடிக்கமுடியாது……”
நான் அவள் பேச்சை முடிக்க விடவில்லை. என்னுடைய வார்த்தைகள் விரைவாகவும் கசப்புடனும் வந்தது.
“எனக்குத் தெரியும்… சீதா, எனக்குத்தெரியும். நான் கேட்டிருக்கக்கூடாது. நான் செய்த செய்கைக்குப் பிறகு – உன்னிடமிருந்து எதைத் திருடினேன் என்ற பிறகு – அங்கே மன்னிப்பு என்பது இருக்காது. நான் என்ன நினைத்தேன் என்பதே எனக்குத் தெரியவில்லை. நீங்கள் என்னை உலகத்திற்கு முன்னால் பழிந்துரைக்காதளவில் நான் அதிர்ஸ்டசாலி.”
நான் அங்கிருந்து காணாமல்போய்விட விரும்பினேன், மண்ணுக்குள் புதையுண்ட விரும்பினேன். ஆனால் அவளது கருணை என்னை நிலைகொள்ளவைத்தது.
“ ஒரு காலத்தில் மன்னிக்கமுடியாத செயலொன்றைச் செய்த நீங்கள் உண்மையிலே ஒரு நல்ல மனிதன். நான் உங்களை மன்னித்துவிட்டேன் என்பதைத் தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்; ஆனால் எங்களுக்கிடையில் திருமணம் என்பது நடக்கமுடியாத விடயம்.”
அவளுடைய கண்கள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தது, ஆனால் அவவின் மனது எங்கேயோ தூரத்தில் இருந்தது என்பது  எனக்குத் தெரிந்தது.
“நான் உங்களுடன் சிநேகிதமாகிவிட்டேன் என்று அருவிக்கும் எனது சகோதரிகளுக்கும் சொல்வது மிகவும் கடினமாக இருக்கப்போகுது. உங்களைப்பற்றிய விபரத்தையும் எங்கள் அன்னியோன்யத்தையும்  மறைக்கமுடியாது.  அருவி இன்று திரும்புகிறாள். இன்றிரவு அவள் கூப்பிடும்போது எங்கள் நட்பைப்பற்றிச் சொல்கிறேன்.
மற்றும்படி…..இன்னுமொரு முக்கியமான விடயம் நான் உங்களுக்குச் சொல்லவேண்டும்.”
தலையை அசைக்கமாத்திரம் என்னால் முடிந்தது. வேறு விபரங்கள் கேட்க எனக்கு உரிமை கிடையாது. சீதா என்ன சொல்கிறாளோ அதைக் கேட்பேன். காலம் வரும்பொழுது, எனக்கு ஏற்ற தண்டனை என்று எதை அருவி நினைக்கிறாளோ அதை ஏற்றுக்கொள்வேன்.
சீதா வீட்டு வாசலில் நான் காரை நிறுத்தியபோது, அவள் சொன்னாள், “அது Brad இனுடைய கார். அவர்கள் விமான நிலையத்திலிருந்து நேரே வந்திருக்கவேண்டும். என்னுடன் கதைப்பதற்கான சில விடயங்கள் இருக்கவேண்டும்.”
திடீரென அவளுக்கு ஒன்று ஞாபகத்தில் வந்தது. “அவர்கள் உள்ளே போயிருந்தால் Zoe  வைச் சந்தித்திருக்கவேண்டும்.” அவள் முகத்திலே ஒரு திருப்திகலந்த புன்னகை வெளிப்பட்டது.
நான் சீதாவை இறக்கிவிட்டு புறப்படத் தயாரானேன், ஆனால் அவள் என்னைத்தடுத்தாள். “நீங்களும் உள்ளே வாருங்கள், நல்லக. நான் எங்கே போயிருந்தேனெனக் கேட்பாள். அவளுக்குப் பொய் சொல்வதில் நான் கெட்டிக்காரியில்லை. வந்து, ஹலோ சொல்லுங்கள்.”
நான் யோசிப்பதைப்பார்த்து, அவள் எனக்குத் தைரியம் தந்தாள். “நீங்கள் உண்மையாக யாரென்று அவளுக்குத் தெரியாது. அவளைப் பொறுத்தவரையில் நீங்கள் அவளுடைய நோயாளி. அவளுக்கு உண்மையைச் சொல்வேன்- Villas இல் நாங்கள் சந்தித்தபின் Bellbird Dell Reserve இல் தற்செயலாகச் சந்தித்து, எங்களிடையே பல பொதுவிடயங்கள் ஒத்துவந்ததால் நண்பர்களாகிவிட்டோம். உங்களுடைய உண்மையான அடையாளத்தை இன்று சொல்லவேண்டாம்.”
நான் மீண்டும் அருவியைப் பார்க்க ஏங்கினேன்- அவளுடைய அழகான முகத்தைப் பார்க்கவும், அவளின் செவிக்கினிய குரலையும் கேட்கவும். 
ஆகவே நான் சீதாவைப் பின்தொடர்ந்து செல்ல, அவள் சத்தம்போட்டுக் கூப்பிட்டாள், “அருவி, வந்துவிட்டாயா?”
 
                                                                                                                        (தொடரும்)
 
குறிப்பு:
 
நாவலைப்பற்றிய உங்கள் விமர்சனங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
 
தங்களுடைய மின்னஞ்சிலிலோ அல்லது whatsapp இலோ நேரடியாக இந்த நாவலைப் பெற விரும்பும் வாசகர்கள் என்னுடன் தொடர்பு கொள்ளலாம்.
மின்னஞ்சல் : asrajendran@hotmail.com
Whatsapp:  +94740183421

 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


 இந்த செய்தி தொடர்புபட்ட எமது முன்னைய செய்திகள்:
சிவராத்திரியை முன்னிட்டுப் பருத்தித்துறையிலிருந்து திருக்கேதீச்சரத்துக்கு விசேட பஸ் சேவை!
பிரசுரிக்கபட்ட திகதி: 13/02/2026 (வெள்ளிக்கிழமை)

பிந்திய 25 செய்திகள்:
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - அமரர் இரத்தினசாமி கணேசசுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/03/2026 (வியாழக்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - நடராசா மோகனகுரு
பிரசுரிக்கபட்ட திகதி: 04/03/2026 (புதன்கிழமை)
மரண அறிவித்தல் - சுப்பிரமணியராசா சிவானந்தராசா (டில்லி)
பிரசுரிக்கபட்ட திகதி: 03/03/2026 (செவ்வாய்க்கிழமை)
அகன்று செல் - போதைப் பொருளுக்கு எதிரான பிரச்சாரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/03/2026 (செவ்வாய்க்கிழமை)
கொழும்பு போர்ட் சிட்டி (Port City) கடற்கரைப் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 02/03/2026 (திங்கட்கிழமை)
படகில் இருந்து தவறுதலாக விழுந்தவர் பலி
பிரசுரிக்கபட்ட திகதி: 02/03/2026 (திங்கட்கிழமை)
பதினோராம் ஆண்டு நினைவஞ்சலி - ஈஸ்வரலிங்கம் சந்திரகுமார்
பிரசுரிக்கபட்ட திகதி: 02/03/2026 (திங்கட்கிழமை)
மரண அறிவித்தல் - சிவமணி குமரகுரு (சிவம் அக்கா)
பிரசுரிக்கபட்ட திகதி: 02/03/2026 (திங்கட்கிழமை)
வல்வை சிவன் கோயில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/03/2026 (ஞாயிற்றுக்கிழமை)
க.பொ.த உயர் தர (2028) கணித விஞ்ஞான வகுப்பு ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/03/2026 (ஞாயிற்றுக்கிழமை)
இறுதிக் கிரியகள் பற்றிய விபரம் - திரு சடாட்சரசுந்தரம் குகநாதன்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/02/2026 (சனிக்கிழமை)
க.பொ.த உயர் தர (2028) கணித விஞ்ஞான வகுப்புகளிற்கான நிதிக்கோரிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 28/02/2026 (சனிக்கிழமை)
இறுதிக் கிரியைகள் பற்றிய அறிவித்தல் - திருமதி மங்களேஸ்வரி நவரத்தினம் (வண்ணமக்கா)
பிரசுரிக்கபட்ட திகதி: 26/02/2026 (வியாழக்கிழமை)
வல்வெட்டித்துறை பெரு விளையாட்டு விழா - 2026
பிரசுரிக்கபட்ட திகதி: 26/02/2026 (வியாழக்கிழமை)
மரண அறிவித்தல் - திருமதி மங்களேஸ்வரி நவரத்தினம் (வண்ணமக்கா)
பிரசுரிக்கபட்ட திகதி: 23/02/2026 (திங்கட்கிழமை)
வல்வெட்டித்துறை இரத்ததானச்சங்க புதிய நிர்வாகசபை விபரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/02/2026 (திங்கட்கிழமை)
மரண அறிவித்தல் - திரு.நடராசா மோகனகுரு
பிரசுரிக்கபட்ட திகதி: 22/02/2026 (ஞாயிற்றுக்கிழமை)
விளம்பரம் - வீடு & தனி அறைகள் வாடகைக்கு (சிவபுர வீதி)
பிரசுரிக்கபட்ட திகதி: 22/02/2026 (ஞாயிற்றுக்கிழமை)
மரண அறிவித்தல் - திரு சடாட்சரசுந்தரம் குகநாதன்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/02/2026 (சனிக்கிழமை)
யாழ்பாணம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று - Conde Mast Traveler
பிரசுரிக்கபட்ட திகதி: 20/02/2026 (வெள்ளிக்கிழமை)
சன்னிதியான் ஆச்சிரமம் நிறுவனர் மோகனதாஸ் சுவாமிகளுக்கு "அன்பே சிவம்" விருது
பிரசுரிக்கபட்ட திகதி: 20/02/2026 (வெள்ளிக்கிழமை)
வல்வை வானில் சீமானின் விவசாயி சின்ன பட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/02/2026 (புதன்கிழமை)
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/02/2026 (புதன்கிழமை)
வல்வையில் நீச்சல் தடாகம் மீளவும் பாவனைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 15/02/2026 (ஞாயிற்றுக்கிழமை)
வல்வையில் HNB வங்கியின் ATM இயந்திரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/02/2026 (ஞாயிற்றுக்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Mar - 2026>>>
SunMonTueWedThuFriSat
1
2
3
45
6
7
8910111213
14
15
16
17
18
192021
22
232425262728
29
30
31    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai