கொழும்பு போர்ட் சிட்டி (Port City) கடற்கரைப் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 02/03/2026 (திங்கட்கிழமை)
கொழும்பு போர்ட் சிட்டி (Port City) கடற்கரைப் பகுதியில் ஆணொருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கடற்கரையில் சடலமொன்று மிதப்பதாக கொழும்பு துறைமுக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் வல்வெட்டித்துறை பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய செல்வன் நிதுசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த 28 ஆம் திகதி போர்ட் சிட்டி வளாகத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்வதற்காக குறித்த இளைஞன் வருகை தந்திருந்தமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு துறைமுக பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். (பிரதி)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.