வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்காக, பூமத்திய ரேகையை அண்மித்து தாழமுக்கம் (Low Pressure) நிலை கொண்டுள்ளது என இந்திய வளி மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதனுடன் பரந்தளவிலான காற்றுச்சுழற்சி (Upper Air Cyclonic Circulation) கடல் மட்டத்திலிருந்து 5.8 கிலோ மீட்டர்கள் வரை வியாபித்துள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசை நோக்கி (இலங்கையை நோக்கி) நகரும் எனவும் இந்திய வளி மண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இதனால் இலங்கையின் சில பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு உள்ளது என நம்பப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.