பருத்தித்துறை இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள குருதி தட்டுப்பாடு தொடரும் நிலையில் நாளைய தினம் (04) வல்வெட்டித்துறை யில் இடம்பெறும் இரத்ததான நிகழ்வில் பங்கேற்க தன்னார்வ குருதி கொடையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை இரத்ததானச்சங்கம் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் 89 வது இரத்ததான நிகழ்வு நாளை 04/10/2026 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிமுதல் வல்வெட்டித்துறை - நெடியகாடு கணபதி மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
பருத்தித்துறை இரத்த வங்கி பிரிவு மருத்துவ குழுவினர் பங்கேற்பில் இடம்பெற உள்ள இவ் இரத்ததான முகாமில் கலந்துகொண்டு குருதிக் கொடை வழங்க விரும்பும் அனைவரும் (தொடர்பிற்கு - 0779911131) முன்பதிவு செய்து உதவுமாறும், குருதிக்கொடை வழங்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் குறித்த குருதிக் கொடை முகாமில் பங்கேற்று குருதி வழங்குபவர்களுக்கு புத்தகப்பை வழங்கப்பட உள்ளதாக வல்வெட்டித்துறை இரத்ததானச்சங்கம் தலைவர் பா. வீரசுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.