இன்றைய தினம் 2026.05.23 சனிக்கிழமை அதிகாலை, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இருந்து இவ்வருடத்திற்கான புனித கதிர்காம பாதயாத்திரை, விசேட பூஜைகள் மற்றும் சம்பிரதாய முறைகளுடன் பக்தி பூர்வமாக ஆரம்பமாகியுள்ளது.
முதற்கட்டமாக 120 அடியார்களுடன் ஆரம்பமான இப்புனித யாத்திரையில், மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட அடியார்கள் இணைந்து கொள்ளவுள்ளனர்.
55 நாட்கள் கால்நடைப் பயணமாக, 108 ஆலயங்களைத் தரிசித்து, சுமார் 815 கிலோமீற்றர் தூரம் நடந்து கதிர்காம முருகனை தரிசிக்கும் இப்பெரும் ஆன்மீகப் பயணம், இலங்கையின் மிக நீண்ட பாதயாத்திரைகளில் ஒன்றாகப் போற்றப்படுகிறது.
வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களை இணைக்கும் இப்புனிதப் பயணம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய ஏழு மாவட்டங்கள் வழியாக நடைபெறவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.