அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவில் மேற்கொண்ட இளைஞர் யுவதிகளுக்கான வியாபார அபிவிருத்தி பயிற்சிநெறிகளுக்காக (Youth Enterprise Development training) திரு.கண்ணன், இறக்காமம் பிரதேச செயலரினால் (Irakkamam Divisional Secretary) நினைவுப் பரிசு ஒன்றை வழங்கிக் கெளரவிக்கப்பட்டுள்ளார். இந்த நிகழ்வு கடந்த வெளிக்கிழமை மாலை இறக்காமம் பிரதேச செயலகப் பணிமனையில் இடம்பெற்றது.
கடந்த மாதம் யாழ் மாவட்டத்தின் சில பிரதேச செயலகப் பிரிவுகளிலும், கடந்த வாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள செங்கலடி பிரதேச செயலகப் பிரிவுகளிலும் (Chenkalady DS division, Batticaloa District) இதே போன்ற பயிற்சி நெறிகளை திரு கண்ணன் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வல்வையைச் சேர்ந்த கண்ணன், யாழ் ஹாட்லிக் கல்லூரி பழைய மாணவர் என்பதும், பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் பட்டப் படிப்பை மேற்கொண்டவர் என்பது மேலும் குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
கண்ணன் (இலங்கை)
Posted Date: October 20, 2015 at 04:29
நன்றிகள்
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.