யாழ் மாவட்டத்தில் ஆவரங்கால் - தொண்டமானாறு வீதியின் (B33) புனரமைப்புப் பணியின் ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் (11.02.2026) காலை 8.30 மணிக்கு அச்சுவேலி பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
இந் வீதி புனரமைப்பிற்கான ஆரம்ப நிகழ்வில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் கெளரவ பிமல் ரத்நாயக்க அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வீதி அபிவிருத்தி பணிகளை விருந்தினர்களுடன் இணைந்து ஆரம்பித்து வைத்தார்.
இந் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ சண்முகநாதன் சிறிபவானந்தராஜா அவர்களும், கெளரவ ஜெயசந்திரமூர்த்தி றஜீவன் அவர்களும், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களும், வடமாகாண வலி கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் கெளரவ தி. நிரோஷ் அவர்களும், வடமகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதம பொறியியலாளர் திரு குரூஸ், கோப்பாய் பிரதேச செயலாளர் திரு ஈ. தயாரூபன், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளரும் யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினருமான கெளரவ எஸ். கபிலன் ஆகியோர் கலந்து கொண்டார்.
"மறுமலர்ச்சிக்கான பாதை" நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 670.58 மில்லியன் ரூபா செலவில் 6.03 கி.மீ. நீளமான குறித்த வீதி புனரமைப்பு செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ் வீதியின் புனரமைப்பு ஆரம்ப நிகழ்வில் பிரதேச சபையின் கெளரவ உறுப்பினர்கள், பொதுமக்கள் என பல பேர் கலந்து சிறப்பித்தார்கள். (பிரதி)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.