தற்பொழுது உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலான ‘Mogens Maersk’ நேற்று கொழும்பு சர்வதேச கொள்கலன் துறைமுகத்திற்கு (Colombo International Container Terminals - CICT) தனது முதலாவது தடவையாக (Maiden Voayage) வந்திருந்தது.
ஆசியா மற்றும் ஐரோப்பா 2 (Asia-Europe 2 service) என்னும் சேவையில் ஈடுபட்டுள்ள இந்த கொள்கலன்கப்பல் ஆனது கொழும்பு வருவதற்கு முன்னர் நெதர்லாந்தின் மிகப் பெரிய துறைமுகமான ரொட்டார்டாம் (Rotterdam, Netherlands) இற்குச் சென்றிருந்ததுடன், தற்பொழுது கொழும்புக்கு அடுத்ததாக சீனா, மற்றும் தென் கொரியாவின் மிகப் பெரிய கொள்கலன் துறைமுகங்களுக்குக் செல்லவுள்ளது.
Triple-E liner தரத்தில் அமைந்த ‘Mogens Maersk’, உலகின் முதலவாவது பெரிய கப்பல் நிறுவனம் எனக் கூறப்படும் நெதர்லாந்தைச் சேர்ந்த ‘Maersk’ கப்பல் நிறுவனத்திற்குச் சொந்தமானதாகும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.