உலகின் மிகப்பெரிய கார் மற்றும் பார ஊர்தி தாங்கிக் கப்பல் (World’s largest Pure Car and Truck Carrier -PCTC) 'Hoegh Trigger' தனது கன்னிப் பயணத்தில் கடந்த 31 ஆம் திகதி இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்தது. கார் மற்றும் ட்ரக் வண்டிகளை ஏற்றி இறக்க வந்திருந்த நோர்வேயின் ஒஸ்லோவில் பதிவு செய்யப்பட்ட இந்தக் கப்பல் அமெரிக்கா - மத்திய கிழக்கு - ஆசிய நாடுகளுக்கான சேவையில் ஈடுபடவுள்ளது.
8500 வாகனங்களை காவவல்ல (8500 Car Equivalent Units) 200மீட்டர் நீளமான 40. 5மீட்டர் இந்தக் கப்பல் 14 தட்டுக்களைக் கொண்டமைந்துள்ளதுடன் 375 டன் நிறையுடைய வாகனங்களை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.