வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழகம் வருடாவருடம் நடாத்தி வரும் 7 நபர் கொண்ட சுழல் கிண்ணத்திற்கான உதைபந்து சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டிகள் இன்று மாலை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
இறுதிப்போட்டியில் ரேவடி அணியை எதிர்த்து இளங்கதிர் அணி மோதியது. இந்த ஆட்டத்தில் 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றி கிண்ணத்தைக் கைப்பற்றியது. 2 ஆம் இடத்தினை இளங்கதிர் அணி பெற்றுக்கொண்டது.
7 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுத் தொடரின்
சிறந்த கோல்காப்பாளர் - பிரேம்ராஜ் - ரேவடி விளையாட்டுக்கழகம்
சிறந்த வீரர் - சஞ்சி -ரேவடி விளையாட்டுக்கழகம்
வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழகம் வருடாவருடம் நடாத்தி வரும் 9 நபர் கொண்ட சுழல் கிண்ணத்திற்கான உதைபந்து சுற்றுத் தொடரின் போட்டிகள் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்றது. இப்போட்டிக்குரிய வெற்றிக் கேடயங்களும் இன்று வழங்கப்பட்டது.
9 நபர் கொண்ட சுழல் கிண்ணத்திற்கான உதைபந்து சுற்றுத் தொடரின்
1ஆம் இடம் ரேவடி விளையாட்டுக்கழகம்
2 ஆம் இடம் தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழகம்
இப்போட்டிக்கான சிறந்த கோல்காப்பாளர் -உலகராசா -ரேவடி விளையாட்டுக்கழகம்
சிறந்த வீரர் - தமிழரசன் -ரேவடி விளையாட்டுக்கழகம்
வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழகம் வருடாவருடம் நடாத்தி வரும் 7 நபர் மற்றும் 9 நபர் கொண்ட சுழல் கிண்ணத்திற்கான உதைபந்து சுற்றுத் தொடரின் போட்டிகளில் ரேவடி விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்று வெற்றிக் கிண்ணத்தை தமதாக்கயுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.