உடுப்பிட்டி வடக்கு J/353 கிராம பிரிற்கான தேசிய அடையாள அட்டைக்கான நடமாடும் சேவை
பிரசுரிக்கபட்ட திகதி: 23/11/2017 (வியாழக்கிழமை)
உடுப்பிட்டி வடக்கு J/353 கிராம அலுவலர் பிரிற்கான தேசிய அடையாள அட்டைக்கான நடமாடும் சேவை 25-11-2017 சனிக்கிழமை அன்று காலை 08.30 மணியளவில் கம்பர்மலை கலாவாணி சன சமூக நிலைய முன்றலில் நடைபெறவுள்ளது.
இவ் நடமாடும் சேவையில்
*-இதுவரை தேசிய அடையாள அட்டையினை பெற்றுக்கொள்ளாதவர்கள்.
*-உரிய ஆவணங்களின்றி அடையாள அட்டையினை புதுப்பிக்க / திருத்தம் செய்து கொள்ள முடியாதிருப்பவர்கள்.
*-அடையாள அட்டை தொலைந்தவர்கள்.
*-பழுதடைந்த / அழிவடைந்த / சேதமாக்கப்பட்ட அடையாள அட்டை உடையவர்கள்.
*-அடையாள அட்டையில் திருத்தங்களை (பெயர், பிறந்த திகதி, முகவரி) மேற்கொள்பவர்கள்.
அன்றைய தினம் உரிய ஆவணங்களுடன் வருகை தரவும். (பிறப்பு, திருமண பதிவு சான்றிதழ்களின் மூலப்பிரதியுடன் போட்டோ பிரதியும்)
அன்றைய தினம்
*-புகைப்படம் எடுத்தல்
*-பொலீஸ் அறிக்கை பெறல்
*-திருமணப் பதிவு
*-முத்திரை என்பன அவ்விடத்தில் பெற்றுக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.