பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக் அனுமதியுடன், லீக்கில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையில் வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட போட்டிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றது.
இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து கொற்றவத்தை ரேன்சஸ் B விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தலா 3 கோல்களைப் பெற்று சமநிலையில் இருந்தமையால் நடுவர்களினால் தண்ட உதை வழக்கப்பட்டது. தண்ட உதையில் வல்வை விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.
இரண்டாவதாக நடைபெற்ற ஆட்டத்தில் இமையாணன் மத்தி விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து கொற்றவத்தை ரேன்சஸ் A விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் கொற்றவத்தை ரேன்சஸ் A விளையாட்டுக்கழகம் 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.