குப்பிளான் விக்னேஸ்வரா வி.கழக உதைபந்து - யங்கம்பன்ஸ் வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 04/08/2016 (வியாழக்கிழமை)
குப்பிளான் விக்னேஸ்வரா விளையாட்டு கழகத்தினால் யாழ்மாவட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி தற்பொழுது குப்பிளான் விக்னேஸ்வரா விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. அதன் அடிப்படையில் இன்று நடைபெற்ற போட்டியில் உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக்கழகம் மோதியது.
முதலாவது பாதியாட்டத்தில் யங்கம்பன்ஸ் வி.க வீரர் நிறோ 02வது நிமிடத்தில் கோல் போட்டு அணியின் முதல் கோலை பதிவு செய்தார். இரண்டாவது கோலை ரதன் 12வது நிமிடத்தில் போட 19வது நிமிடத்தில் நவஜீவன் அணி வீரர் கோல் பெற்றார். முதல் பாதியாட்டம் 02:01 என நிறைவுற்றது.
இரண்டாவது பாதியாட்டமும் யங்கமபன்ஸ் அணிக்கே சாதகமாக இருந்தது 35வது நிமிடத்தில் மூன்றாவது கோலும் 39வது நிமிடத்தில் நான்காவது கோலும் தொடர்ந்து ரதன் பெற்று யங்கம்பன்ஸ் அணியின் வெற்றியை உறுதிப்படுத்த ஆட்ட நேர முடிவில் நவஜீவன்ஸ் அணியை 04:01 என்ற அடிப்படையில் இலகுவாக வீழ்த்தியது கம்பர்மலை யங்கம்பன்ஸ் அணி.
கம்பர்மலை யங்கம்பன்ஸ் அணி சார்பாக ரதன் -03 கோல்களையும், நிறோ - 01 கோலினை பெற்றுக்கொண்டார்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.