நாட்டின் மிகப் பெரிய கப்பலை கொழும்பு டொக்யார்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜப்பானின் தனியார் நிறுவனமொன்றிற்காக இந்தக் கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் ஒனோமிச்சி நிறுவனத்துடன் இணைந்து இதற்கான நடவடிக்கையை கொழும்பு டொக்யார்ட் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. நிறுவனத்தின் 51 சதவீத பங்களிப்பு ஜப்பானுக்கும் 35 சதவீதப் பங்களிப்பு இலங்கையின் அரச நிறுவனமொன்றுக்கும் உரித்தாகும்.
113 தசம் 1 மீற்றர் நீளமான இந்தக் கப்பலின் அகலம் 21 தசம் 5 மீற்றர்களும், ஆழம் 8 தசம் 8 மீற்றர்களும் ஆகும். மணிக்கு 14 தசம் 5 மைல் வேகத்தில் இந்தக் கப்பலால் பயணிக்க முடியும்.
முழுமையாக உள்நாட்டு பொறியியலாளர்களின் பங்களிப்புடன் இந்தக் கப்பல் 21 மாதங்களில் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.