வல்வெட்டித்துறை உதயசூரியன் வீதியில் அமைந்துள்ள கப்பலுடையவர் கோயிலின் வருடாந்த அலங்கார உற்சவம் நேற்று முன்தினம் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமானது. அன்றைய தினம் காலை 8.30 மணியளவில் அபிசேகத்துடன் ஆரம்பமான பூஜைகளைத் தொடர்ந்து பகல் 11 மணிக்கு கொடியேற்றம் இடம்பெற்றது.
உற்சவங்களின் காலை வசந்த மண்டப பூசை 10.30 க்கும் மாலை வசந்த மண்டப பூசை 7 மணிக்கும் தற்பொழுது இடம்பெற்றுவருகின்றது.
10 தினங்கள் நடைபெறும் வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தத் திருவிழா 23 ஆம் திகதி அன்றும், தெப்பத் திருவிழா எதிர்வரும் 24 ஆம் ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது.
கப்பலுடையவர் பிள்ளையார் வல்வெட்டித்துறை சந்தியிலிருந்து மேற்கு திசையில் சுமார் 400 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
வருடாந்த மகோற்சவத்தின் இன்றைய திருவிழாவின் சில காட்சிகளைக் கீழே காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.