வடமராட்சி வலய 19 வயது உதைபந்து - ஹாட்லி, உடுப்பிட்டி இறுதிக்கு தெரிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 28/02/2015 (சனிக்கிழமை)
வடமராட்சி கல்வி வலயப் பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்டத் தொடரின் 19 வயதுப் பிரிவினருக்கான ஆட்டங்கள் நேற்று இமையாணன் மத்திய விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற அரை இறுதி ஆட்டங்களில் வெற்றிபெற்று இறுதியாட்டத்துக்கு உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி மற்றும் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.
முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியும் நெல்லியடி மத்திய கல்லூரியும் மோதின. ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்பாக இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் முதற்பாதி ஆட்டத்தில் இரு அணியினருக்கும் கோல் போடுவதற்கான பல சந்தர்ப்பங்கள் கிடைத்த போதும் அவர்கள் அதனை தவற விட, ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணியினரும் எந்தவித கோல்களையும் பெறாது சமநிலை வகித்தனர்.
இடைவேளையின் பின் ஆட்டத்தின் 17, 19 ஆவது நிமிடங்களில் ஹாட்லிக் கல்லூரி அடுத்தடுத்து இரண்டு கோல்களை பெற்று 2:0 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்று இறுதியாட்டத்துக்கு தகுதிபெற்றது.
இரண்டாவது அரையிறுதியாட்டத்தில் உடுப்பிட்டி அ.மி. கல்லூரியும் வதிரி தேவரையாளி இந்துக் கல்லூரியும் மோதின. இதில் 3:0 என்ற கோல் கணக்கில் உடுப்பிட்டி அ.மி. கல்லூரி வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.