Inventors competition & exhibition 2016, வடமராட்சி வலயம் தேசிய மட்டத்தில் 3 பதக்கங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/12/2016 (சனிக்கிழமை)
All Island School Inventors competition and exhibition 2016 ஆனது, கடந்த 7 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி கொழும்பு பல்கலைக் கழகத்தில் (Faculty of Education, University of Colombo) இடம்பெற்றது.
நாட்டின் சகல பாகங்களிலும் இருந்து மாணவர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் வடமராட்சி கல்வி வலயத்திற்கு 3 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
தரம் 6 - 7 பிரிவில் கெருடாவில் இந்து தமிழ் கலவன் பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் செல்வேந்திரன் நிச்சன் மற்றும் ஜெயபாலசிங்கம் அபிசன் ஆகியோர் 3 ஆம் இடத்தைப்பெற்று வெண்கலப் பதக்கத்தையும்,
தரம் 8 பிரிவில் ஹாட்லி கல்லூரி மாணவன் உதயரூபன் லதுஸ்சோபன் 2 ஆம் இடத்தைப்பெற்று வெள்ளிப் பதக்கத்தையும்,
தரம் 10 - 11 பிரிவில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவிகள் சசிகுமார் தனுஷா மற்றும் தில்லை நடராசா மதுசிகா 2 ஆம் இடத்தைப்பெற்று வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.