அமெரிக்காவின் USS John McCain போர்க்கப்பல் எண்ணை தாங்கிக் கப்பலுடன் மோதல்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/08/2017 (திங்கட்கிழமை)
அமெரிக்காவின் நாசகாரி போர்க்கப்பல் (guided missile destroyer USS John S McCain) சிங்கப்பூர் கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, லிபியாவின் அல்னிக் (Alnic MC) என்ற சரக்குக் கப்பலுடன் மோதியதில், 10 பேர் காணாமற்போயுள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று காலை 0524 மணிக்கு சிங்கபூர் நீரிணைக்கு (Straits of Malacca and Singapore) கிழக்காக இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் அமெரிக்க கப்பலில் இருந்த 10 பேர் காணாமற்போயுள்ளதாகவும் 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
154 மீட்டர் நீளமான அமெரிக்க போர் கப்பலின் Port Side கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2 மாதத்தில் இடம்பெறும் இரண்டாவது அமெரிக்க கப்பல்கள் மோதல் சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.