பருத்தித்துறை கபடி போட்டி - வல்வையை பருத்தித்துறை ஐக்கியம் வென்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 14/07/2017 (வெள்ளிக்கிழமை)
பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகம் வடமராட்சி கபடிச் சங்கத்தின் ஆதரவுடன் நடத்தும் நடத்தும் அமரர் ம.சூரியகுமாரன் நடாத்தும் 20 வயதிற்கு உட்பட்டோருக்கான கபடி போட்டியில் வரிசையில் கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற போட்டியில் பருத்தித்துறை ஐக்கியம் விளையாட்டுக் கழகத்துடன் வல்வை விளையாட்டுக் கழகம் மோதியது.
போட்டியின் ஆரம்பத்தில் வல்வை அணி சிறப்பாக விளையாடிய போதும் ஆட்டத்தின் பிற்பாதியில் மிகவும் சிறப்பாக ஆடிய பருத்தித்துறை ஐக்கியம் அணி போட்ட்டியின் முடிவில் 106 / 65 என்ற புள்ளியின் அடிப்படையில் வெற்றி கொண்டது.
போட்டியின் ஆட்ட வீரராக வல்வை வீரர் செல்வன் பிரேம் ராஜ் தெரிவு செய்யப்பட்டார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.