பிருந்திகா 800 மீட்டர் ஓட்டத்தினை 2.02 அல்ல 2.42 செக்கன்கள், கவனயீனம!
பிரசுரிக்கபட்ட திகதி: 24/03/2017 (வெள்ளிக்கிழமை)
நடைபெற்று முடிந்த பருத்தித்துறை பிரதேச செயலக 2017 ஆம் ஆண்டிற்கான விளையாட்டுப் போட்டியில் வல்வை விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த செல்வி பிருந்திகா 800 மீட்டர் ஓட்டத்தினை 2.02 செக்கனில் ஓடி புதிய சாதனைய நிலை நாட்டியிருந்தார் என முன்னர் நாம் செய்தி வெளியிடிருந்தோம்.
இது தவறான ஒரு தகவல் ஆகும். ஓட்ட முடிவில் 2.42 செக்கன் என பதியப் பட்டிருந்த போதிலும், பரிசில் வைபவத்தின் போது வெற்றியாளர்களை அழைப்பதற்காக கொடுக்கப்பட்ட ஆவணத்தில் இது தவறுதலாக 2.02 செக்கன் என எழுதப் பட்டிருந்ததால், வாசிக்கும் போது மீண்டும் தவறாக 2.02 செக்கன் என வாசிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் செல்வி பிரிந்திகாவின் சாதனை முன்னர் 1998 ஆம் ஆண்டு பருத்தித்துறை செயலக மட்டத்தில் இருந்த ஏற்படுத்தப்பட்ட சாதனையை முறியடித்ததாக பதிவான போதும், இவரது சாதனை இலங்கையில் இதுவரை 800 மீட்டரில் ஏற்படுத்தப்பட்ட சாதனையை முறியடிப்பதாக அமைந்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.