வல்வை மற்றும் நெல்லியடியில் கரும்புலிகளுக்கு அஞ்சலி
பிரசுரிக்கபட்ட திகதி: 06/07/2018 (வெள்ளிக்கிழமை)
கரும்புலிகள் நாள் நினைவேந்தல்கள் நிகழ்வுகள் வடமராட்சி வல்வெட்டித்துறை மற்றும் நெல்லியடிப் பகுதிகளில் அனுஷ்டிக்கப்பட்டன. யாழ் பல்கலைக்கழகத்திலும் நேற்று மாலை கரும்புலிகளுக்கு சுடரேற்றி, மலர் தூவி மாணவர்கள் வணக்கம் செலுத்தினர். இதே போன்ற நிகழ்ச்சி கிளிநொச்சி அக்கராயன் குளம் மற்றும் ஸ்கந்தபுரம் ஆகிய பகுதிகளில் கரும்புலிகளை நினைவு கூறும் சித்திரங்கள் வீதியில் வரையப்படிருந்தன.
நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் அமைந்துள்ள இராணுவ முகாம் மீது கப்டன் மில்லர் முதல் கரும்புலித் தாக்குதலை மேற்கொண்ட இடத்தின் முன்பாக நேற்றுக் காலை சுடரேற்றி மலர் தூவி கரும்புலிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.(தினக்குரல்)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.