அமெரிக்காவில் உள்ள "Statue of Liberty" யை விட நான்கு மடங்கு அளவில் பெரியதும், அமெரிக்காவில் உள்ள ஒரு உதைபந்தாட்ட மைதானத்தின் (American football fields) நீளத்திலும் நான்கு மடங்கு நீளம் கொண்ட "CMA CGM Theodore Roosevelt" என்னும் கொள்கலன் கப்பலே (Container ship) இதுவரை பனாமா கால்வாய் ஊடாகச் சென்றுள்ள ஆகப் பெரிய கப்பல் என்னும் பெருமையைப் பெற்றுள்ளது.
குறித்த கப்பல் பனாமா கால்வாயாய் (Panama canal) கடந்த 28 ஆம் திகதி கடந்ததிருந்தது. 14,414 கொள்கலன்களை காவ வல்ல இந்தக் கப்பலின் நீளம் 12028 அடிகளாகும்.
அது மட்டுமல்லாமல் அமெரிக்காவின் கிழக்கு பக்கம் அமைந்துள்ள துறைமுகங்களுக்குச் செல்லும் ஆகப் பெரிய கப்பல் என்னும் பெருமையைப் பெறுகின்றது இந்தக் கப்பல்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
valvai mani (swiss)
Posted Date: September 04, 2017 at 20:17
உண்மையில் இக்கால்வாய்களை நாம் கப்பல் மூலம் கடக்கும் போது மிக அருமையான அனுபவமே .Canada Montreal வழியாக USA PORT OF DULUTH செல்லும்போது சுமார் 25 dockஎன நினைக்கிறேன் மிக அருமையான அனுபவமாக இருக்கும்.இரு பக்கமும் வேறு வேறு நாடுகள்( USA & Canada) என் கப்பல் வாழ்க்கையில் (1976 ம் ஆண்டு) மறக்கமுடியாத நினைவுகள் யாராவது போகும் போது பதிவு செய்து முக நூல் மூலம் பகிர்ந்துகொள்ளுங்கள்...
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.