தொண்டாமானறு பெரிய கடற்கரைப் பகுதியில் இன்று பிற்பகல் பட்டப் போட்டி நடைபெற்றது. குறித்த இந்தப் பட்டப்போட்டியில் 25 பட்டங்கள் போட்டியில் கலந்து கொண்டிருந்தன.
இவற்றில் கொக்கு, பிராந்து, பராத்தை, விசித்திரப் பட்டங்கள் என்பன அதிகமாக வானில் பறந்திருக்க, கொக்கு பட்டத்திற்கு முதல் மூன்று இடங்களுக்கும், பராத்தை பட்டத்திற்கு முதல் மூன்று இடங்களுக்கும், பராத்தை பட்டத்திற்கு முதல் மூன்று இடங்களுக்கும், விசித்திர பட்டத்திற்க்கும் முதல் மூன்று இடங்களும் வழங்கப்பட்டது.
முதல் மூன்று இடங்களைப் பெற்ற விசித்திர பட்டங்கள்
முதலாவது வெளிச்சவீடு
இரண்டாவது கத்தரிக்கோல்
மூன்றாவது வண்ணாத்திப் பூச்சி
பிற்பகல் 03 மணிக்கு ஆரம்பமாகி 06 மணி வரை நடைபெற்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.