இலங்கையிலும் கூகுளின் போக்குவரத்து விபரத் தகவல்களைப் பெறலாம்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/11/2015 (வெள்ளிக்கிழமை)
கூகுள், போக்குவரத்து விபரங்கள் தொடர்பான தகவல் வழங்கும் சேவையைத் தற்பொழுது இலங்கையிலும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயணிகள் போக்குவரத்து நெரிசல் குறைந்த வீதிகளை இலகுவாக அறிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளில் உள்ள கூகுள் வரைபடத்தின் மூலம் இதனை அவதானிக்க முடியும். இந்த வரைபடத்தில் அதிக வாகன நெரிசல் கொண்ட பாதைகள் சிவப்பு நிறத்திலும், வாகன நெரிசல் குறைந்த பாதைகள் பச்சை நிறத்திலும் காட்டப்படுகின்றன.
இதன்மூலம் வாகன ஓட்டுநர்கள் பெரியளவில் நன்மையடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. கூகுள் தேடுபொறியில் traffic என குறிப்பிட்டு தேடுவதன் மூலம் இந்த வரைபடத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலும் கூகுளின் போக்குவரத்து விபரத் தகவல்களைப் பெறலாம்Google Live Traffic in Srilanka
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.