உலக ஹாட்லியர்கள் தினம் எதிர்வரும் ஜூலை மாதம் 7, 8, 9ஆம் திகதிகளில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
ஹாட்லியின் சமூகத்துடம் மீண்டும் ஒன்றிணைவதற்கான சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளதுடன் இந்நிகழ்வுகளில் பிரதம விருந்தினராக யாழ்.போதன வைத்தியசாலையின் இதயவியல் பிரிவின் தலைமை மருத்துவர் டாக்டர் எஸ்.முகுந்தன் கலந்து கொள்கின்றார்.
7 ஆம் திகதியன்று முதலாம் நாள் நிகழ்வுகள் காலை 8 மணிக்கு கோட்டடி பிள்ளையார் கோவிலில் இடம்பெறும் விசேட பூசை நிகழ்வுகளுடன் ஆரம்பமாகி தொடர்ந்து மெதடிஸ் தேவலாயத்தில் வழிபாடுகள் இடம்பெறும். அதனை அடுத்து காலை 9 மணியளவில் பாடசாலை கேட்போர் கூடத்தில் அரங்க நிகழ்வுகள் இடம்பெற்று மாலை 02 மணிக்கு பாடசாலை மைதானத்தில் விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெறும்.
இரண்டாம் நாளான 8 ஆம் திகதியன்று காலை 8 மணி முதல் பாடசாலை நிகழ்வுகள் ஆரம்பமாகி தொடர்ந்து பழைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெறும்.
தொடர்ந்து பாடசாலை அதிபர் ரி. முகுந்தனால் மைதானத்தின் பிரதான நுழைவாயில் திறந்து வைக்கப்படும் . அதனைத் தொடர்ந்து பாடசாலை ஆசிரியர்கள் பழைய மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் இடம்பெறும்.
மூன்றாம் நாளன 9 ஆம் திகதி sivan கோவிலிருந்து நடை பவனி ஆரம்பமாகி பாடசாலையை வந்தடையும். தொடர்ந்து கேட்போர் கூடத்தில் பாடசாலை அதிபர் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர்களால் உரை நிகழ்த்தப்படும். ஏனைய நிகழ்வுகளுடன் மதியம் 1 மணிக்கு கொடியிறக்கம் இடம்பெற்று நிகழ்வுகள் நிறைவுபெறும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.