அடுத்த 24 மணி நேரத்தில் புயல், யாழில் பலத்த காற்றுடன் மழை
பிரசுரிக்கபட்ட திகதி: 23/11/2020 (திங்கட்கிழமை)
வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து திருகோணமலை கரைக்குக் கிழக்காக ஏறத்தாழ 370 கி.மீ தூரத்தில் வட அகலாங்குகள் 9.3N இற்கும் கிழக்கு நெடுங்கோடுகள் 84.5E இற்கும் இடையில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இத் தொகுதியானது அடுத்த 48 மணித்தியாலங்களில் மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளுக்கு மேலாக வடமேற்கு திசையில் இலங்கையின் வடக்கு, கிழக்கு கரைகளை அண்மித்ததாக இந்தியாவின் தமிழ்நாடு கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மழை நிலைமை:
புத்தளத்திலிருந்து மன்னார், காங்கேசந்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் இடைக்கிடையே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காற்று :
புத்தளத்திலிருந்து மன்னார், காங்கேசந்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றானது வடக்கு முதல் வடகிழக்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது வடமேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடும்.
புத்தளத்திலிருந்து மாத்தறை ஊடாக கொழும்பு வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இதேவேளை குறித்த தாழமுக்கம் காரணமாக வட பகுதியில் பலத்த காற்றுடன் மழையும் பெய்து வருகின்றது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.