இன்று ஒக்டோபர் 18 ஆம் திகதியுடன் 5 வருடங்களை வெற்றிகரமாக பூர்த்திசெய்து 6 ஆவது வருடத்தில் காலடி எடுத்து வைக்கின்றது எமது இணையதளம்.
5 வருட வளர்ச்சி
* விக்கிபீடியாவில் வல்வெட்டித்துறை பற்றிய மூலம் (Reference) எமது இணையதளம் தான்.
* Google போன்ற தேடல்களில் – வல்வெட்டித்துறை பற்றிய தேடலில் முன்னணியில். தொடர்ந்து வருபவையும் எமது இணையதளத்தின் இதர சமூக வலைத் தளங்களே.
* சராசரி நாள் ஒன்றின் வாசகர் எண்ணிக்கை சுமார் 1000 பேர்கள். இதில் 25 வீதமானோர் தினந்தோறும் புதியவர்கள்.
* உலகின் பல பாகங்களிலும் வாசகர்களால் பார்க்கப்படுகின்றது.
* Facebook பக்கத்தில் 10000 மேற்பட்டோர், Twitter இல் 365 பேர் வரையானோர் உள்ளனர்.
* இலங்கையில் உள்ள ஊர்த்தளங்களில் மிகவும் முன்னணியில் உள்ளது.
* ஆங்கிலத்திலும் செய்திகள் பதிவேற்றம், ஆங்கில செய்திகளின் பார்வையிடல் (Views) பொதுவாக அதிகம்.
* ஆரம்பத்தில் பதிவிடப்பட்ட செய்திகள் சில 1,00,000 வரை பார்க்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நீளுகின்றது எமது இணையதள வளர்ச்சிப் பட்டியல்.
வல்வையின் நிகழ்வுகளை குறுகலாக்கி, தனிநபர் துதிபாடி, எதேச்சையான சில கருத்துக்களுடன், புலம் பெயர் நாடுகளில் இருந்து இயங்கிக் கொண்டிருந்த பிரசித்தி பெற்ற ஓரிரு வல்வை சார் சில சமூக வலைத்தளங்களுக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட இத்தளம் ஆரம்பத்தில் மட்டும் போட்டியினை சந்தித்திருந்தது.
தேவையான இணையதள வடிவாக்கம் (Web site design), ஊடகத் துறையில் தேர்ச்சி, செய்திகள் சொந்தமாக சேகரித்தல் மற்றும் வரைதல் (Editiing), ஆங்கிலத்திலும் செய்தி, சமூக வலைத் தளங்கள் பற்றிய தரமான அறிவு, தூர நோக்கு, தேவையான ஆள் அணிபலம், வல்வை மற்றும் சூழவுள்ள பகுதிகள் பற்றிய தகவல்களின் இருப்பு, இணையதளத்தின் ஸ்தாபகர் மறைந்த அதிரூபசிங்கம் அவர்களுக்கு இருந்த நன்மதிப்பு, துணிவு என பல விடயங்கள் போட்டியினை இலகுவாகப் புறந்தள்ளி, எமது எதிர்பார்ப்புக்கு மேலாகவும் இலக்கை அடைந்துள்ளோம்.
இதற்கு உள்ளுரிலும், புலம்பெயர் நாடுகளில் உள்ள வல்வை வாழ் மக்கள் அளித்த - அளித்து வரும் பேராதரவும் காரணம் ஆகும்.
சமூகத்தில் எந்தவொரு வளர்ச்சிக்கும் தடைகள், கழுத்தறுப்புக்கள் ஏற்படுவது இயல்பே. இதற்கு நாமும் விதி விலக்கல்ல. ஆரம்பத்தில் சில தடைகள், முட்டுக் கட்டைகள் ஓரிருவரால் ஏற்படுத்தப்பட்ட போதிலும் அவைகள் உடைக்கப்பட்டன.
சிலவேறு அழுத்தங்களைப் பிரயோகித்து சிலர் தமது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப எம்மை நடாத்த முயன்றார்கள் – நாம் அதற்கு இடம் கொடுக்கவில்லை.
5 வருட காலத்தில் இந்த இணையதள குழாமில் உள்ள எவரும் தேவையற்ற விதத்தில் விளம்பரப்படுத்தப்படவில்லை. வளர்ச்சியில் பலருக்குப் பங்கு உண்டு.
ஊரணியிலிருந்து ஊரிக்காடு என்ற வரையறைக்குள் நிற்காமல் வல்வெட்டித்துறை நகரசபை எல்லை என்ற எல்லையை வரையறுத்து இயன்றவரை வல்வையைச் சூழவுள்ள பகுதிகளின் நிகழ்வுகளும் பதிவேற்றப்பட்டுள்ளது.
கழகங்கள், கோயில்கள், சனசமூக நிலையங்கள், பிரதேசங்கள் என தேவைகேற்ற வலையமைப்பைக் கொண்ட வல்வையில் – சலருக்கும் பொதுவான இணையதளமாக இயங்கிவருகின்றது.
இறையாண்மைக்கு எதிரான, பிரதேச வாதங்களைத் தூண்டுகின்ற, காழ்புணர்ச்சிகள் கொண்ட, ஊடகத் தர்மங்களை மீறிய, ஆபாச செய்திகள்... எதுவும் இதுவரை இடம்பெறவில்லை.
நடுநிலைமை சிலவேளைகளில் கடைப்பிடிக்கப்படவில்லை. இவை பிரதேசத்தில் குழப்பத்தை ஏற்படுத்தவல்ல நிகழ்வுகளுடன் கூடியவை, தனிநபர் விளம்பரங்கள், உள்நோக்கம் கொண்ட நிகழ்வுகளின் செய்திகள் போன்றன காரணமாகும். குழப்பவாதிகளுக்கும் இடம் கொடுக்கவில்லை.
தனிப்பட்ட ரீதியாகவோ, பொது அமைப்பாகவோ பலர் பயன் இத்தளத்தின் மூலம் அடைந்துள்ளார்கள். ஆனாலும் சிலர் இதை சில வேளைகளில் மறந்து விடுகின்றார்கள் - விதைக்கும் பொழுது எம்மை நாடி அறுவடைக்கு தாம் மட்டும் சொந்தம் கொண்டாடாடுகின்றார்கள்.
கடந்த 5 வருடங்களாக வல்வையில் இடம்பெற்ற நிகழ்வுகளின் ஒரு ஆவணமாக விளங்குகின்றது இத்தளம். ஆனாலும் வல்வை மற்றும் இதனைச் சுற்றியுள்ள பகுதிகள் பற்றிய ஏராளமான தரவுகள் இன்னும் பதிவேற்றப்படுவதற்காக நிலுவையில் இன்னும் உள்ளன. கால ஓட்டத்தில் படிப்படியாக தரவேற்றம் செய்யப்படும்.
கடந்த 5 வருடத்தில் இயங்கியது போன்று, இந்த இணையதளம் தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கும் - இயக்கப்படும். நல்ல வாசகர்களாக மட்டும் நின்று விடாது தகுந்த தரவுகளை மேலும் தந்து, உங்கள் ஆக்கங்களையும் இதில் இடம்பெறச் செய்து எதிர்கால சந்ததியினருக்கு நல்ல தொரு ஆவணத்தை விட்டுச் செல்ல நீங்களும் முன் வருவீர்களாக .....
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Raj Kumar Arumugam (Canada)
Posted Date: October 20, 2017 at 02:12
தொடர்ந்து மேலும் சிறப்புடன் வளர என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
RAJKUMAR PERIYATHAMBY (canada)
Posted Date: October 19, 2017 at 06:19
சிறப்புடன் மென்மேலும் வளர்ச்சிபெற உளம் நிறைந்த இனிய வாழ்த்துக்கள் ;
குமுதினி (இலங்கை)
Posted Date: October 18, 2017 at 16:04
வாழ்த்துக்கள்!
siva (france)
Posted Date: October 18, 2017 at 13:30
valththukkal melum valara.......
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.