பற்றி எரியும் கப்பல் - மிதக்கும் மிகப்பெரிய Non Nuclear Bomb
பிரசுரிக்கபட்ட திகதி: 21/08/2017 (திங்கட்கிழமை)
ஸ்பெயின் நாட்டின் கனரி தீவுக்கு (Canary Islands) அப்பால் கடந்த 14 ஆம் திகதி தீ விபத்துக்கு ஆளான CHESHIRE என்னும் Bulk carrier ரக கப்பலில் தொடர்ந்தும் கட்டுப் படுத்த அளவுக்கு மேலாக பரவி வருகின்றது. தீ ஏற்பட்டத்தைத் தொடர்ந்து கடந்த 14 ஆம் திகதியே கப்பலின் பணியாட்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
கப்பலில் தீ ஏற்பட்டது கடந்த 13 ஆம் திகதியா அல்லது 14 ஆம் திகதியா என்னும் முரண்பாடான செய்திகளுக்கு மத்தியில், தீயை அணைப்பதற்கு தீ அனைப்புப் படையினரை கப்பலில் கொண்டு செல்ல எடுத்த எந்த முயற்சியும் இதுவரை பலிக்கவில்லை.
கப்பலில் இருந்து மிகவும் அடர்த்தியான வெண் புகை மண்டலம் தொடர்ந்து வெளிப்பட்டுவருவதை ஏராளமான கடல் சார் மற்றும் ஐரோப்பிய ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.
கப்பலில் 40,000 மெட்ரிக் டன் எடையுடைய வெடி பொருளான அமோனியம் நைட்ரேட் (Ammonium nitrate) உள்ளதால், தீ கட்டுக்கு அடங்காமால் கப்பல் வெடித்தால் மிகப் பெரிய அனர்த்தம் ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.