போரின் 17 வருடங்கள் நிறைவு, முள்ளி நினைவேந்தல் பற்றி Amnesty International
பிரசுரிக்கபட்ட திகதி: 18/05/2026 (திங்கட்கிழமை)
இலங்கையின் போரின் முடிவிற்கு 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நாட்டில் “ஆழமாக வேரூன்றிய தண்டனையின்மை” (entrenched impunity) இன்னும் நீதி மற்றும் நல்லிணக்கத்திற்கான முயற்சிகள் தடுக்கப் பட்டு வருவதாக Amnesty international தெற்காசியப் பிரிவு எச்சரித்துள்ளது.
குறித்த அறிக்கையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது ஐ.நா. விசாரணைகளில் பதிவுசெய்யப்பட்ட போர்க்கால மனித உரிமை மீறல்களுக்கு உண்மை, நீதி மற்றும் இழப்பீடு வழங்கப்பட வேண்டிய அவசரத் தேவையை மீண்டும் வெளிப்படுத்துவதாக அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
மீண்டும் மீண்டும் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தாலும், தொடர்ந்து ஆட்சி செய்த அரசுகள் நம்பகமான விசாரணைகளை நடத்தத் தவறியுள்ளதாகவும், இதனால் தமிழ் மக்களில் உயிர் பிழைத்தவர்களுக்கு “பொறுப்புக்கூறல் இல்லாமல் அர்த்தமுள்ள நல்லிணக்கம் சாத்தியமில்லை” என்று தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்தது.
“நீதிக்கான அவர்களின் போராட்டத்துடன் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம்,” என்று Amnesty தெரிவித்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.