வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் உருவாகுவதற்கான சாத்தியம்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/05/2018 (திங்கட்கிழமை)
இலங்கைக்கு வட கிழக்காக மத்திய வங்காள விரிகுடா பகுதியில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் தாழமுக்க வலயம் ஒன்று உருவாகலாம் என இந்திய வளி மண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனை சில சர்வதேச வானிலை அவதான நிலையங்களும் எதிர்வு கூறியுள்ளன.
இதே வேளை கேரளாவிற்கு மேற்காகவும் அடுத்த 24 மணி நேரத்திற்குள் தாழமுக்க வலயம் ஒன்று உருவாகக் கூடும் என்று இது பின்னர் புயலாக மாறக் கூடிய வாய்ப்பு உண்டு என்றும் இந்திய வளி மண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.