அந்தியேட்டி அழைப்பிதழ் இரத்தினவடிவேல் சிவனருட்சோதி (திருத்திய பதிப்பு )
பிரசுரிக்கபட்ட திகதி: 25/06/2026 (வியாழக்கிழமை)
31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்
அமரர் இரத்தின வடிவேல். சிவனருள்சோதி
(வல்வை சக்தி எரிபெருள் நிரப்பு நிலைய உரிமையாளர்-வல்வெட்டித்துறை)
மண்ணல் 29/12/1958 விண்ணல் 29/05/2026
அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் 28.06.2026 ஞாயிற்றுக் கிழமை காலை 06:00 மணியளவில் காந்தி வீதி, நெடியகாடு, வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று ஊரணி புனித தீர்த்தக் கரையில் அஸ்தி கரைக்கப்பட்டு, வீட்டுத் திருத்தியக் கிரியைகள் அதே தினம் பி.ப 12:00 மணிக்கு அன்னாரது இல்லத்தில் நடைபெறவுள்ளதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம் .
(இவ் அழைப்பை தனிப்பட்ட அழைப்பாக ஏற்று கொள்ளவும்)
அன்னாரின் மரணச் செய்தி கேட்டு நாம் துயருற்றிருந்த வேளையில் நேரில் வந்தும் தொலைபேசி ஊடாகவும், முகநூல், மின்னஞ்சல், பிரசுரம் மற்றும் மலர்வளையம், மலர்மாலை சாத்தியவர்களுக்கும் உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் வழங்கிய அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.