உலகின் முதலாவது ஆளில்லாத சரக்குக் கப்பல் (World’s first fully autonomous cargo ship) ஒன்று தற்பொழுது உருவாக்கப்பட்டு வருகின்றது. 2020 ஆம் ஆண்டளவில் பணியில் ஈடுபடவுள்ள இந்தக் கப்பலுக்கு 'Yara Birkeland' எனப் பெயர் இடப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் நோர்வேயைச் சேர்ந்த விவசாய உரங்களைத் தயாரிக்கும் நிறுவனம் (Norwegian agricultural fertilizer company) ஒன்றிற்காக கட்டபட்டு வருகின்றது.
தற்போதைய சர்வதேச கடலியல் விதிகளின் படி (Current international shipping law) சர்வதேச கடல்களில் பயணிக்கும் எந்தவொரு கப்பலும் மாலுமிகளுடனேயே பயணிக்க வேண்டும். ஆகவே மேற்குறித்த கப்பல் சேவைக்கு வரும் பொழுது நோர்வேயின் கடற்பகுதிக்குள்ளேயே - மாலுமிகள் எதுவுமின்றி - பயணிக்க கூடியதாக இருக்கும் .
ஆனாலும் ஆளில்லாத கப்பல்களையும் சர்வதேச கடற்பரப்பில் பயணம் செய்வதற்கு அனுமதிப்பது தொடர்பாக தற்பொழுது யோசனைகளை முன்வைக்கப்பட்டுவருகின்றன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.