உதயசூரியன் கழக இங்கிலாந்து கிளையின் வருடாந்த ஒன்றுகூடல் நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 01/06/2016 (புதன்கிழமை)
வல்வை உதயசூரியன் கழகம் இங்கிலாந்து கிளையின் வருடாந்த ஒன்றுகூடல் கடந்த 29.05.2016 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை லண்டனில் மிச்சம் பகுதியில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த ஒன்று கூடலில் சுமார் 200 ற்கு மேற்பட்ட கழக அங்கத்தவர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர். கூழ், கோழிப்புக்கை, கோழிப்பொரியல்கள், சிறுவர் உணவுகள், மரக்கறி உணவு வகைகள், புறூட்சலாட், ரோல், வடை, கேக், சர்பத் என்று பலவகையான உணவுகள் அனைவருக்கும் வழங்கப்பட்டன.
சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள், பெண்களுக்கான பாடும்பந்து, ஸ்ரோ எறித்தல், கயிறு இழுத்தல், ஆண்களுக்கான குண்டுஎறிதல், கயிறு இழுத்தல் தம்பதிகளுக்கான தேசிக்காய் கரண்டி ஓட்டம் என பல விளையாட்டுக்கள நடைபெற்றன.
விளையாட்டுக்களுடன் ஒன்றுகூடல் இங்கிலாந்து வாழ் உதயசூரியன் கழகஅங்கத்தவர்களுக்கு ஒரு மகிழ்சியான மாலைப்பொழுதாக அமைந்தது என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.