வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால் கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம் - 2016 வெளியிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் வல்வை வீதி 3ஆம் ஒழுங்கை திருத்தம், கொம்மந்தறை கிராமத்திற்கு வடிகாலமைத்தல், சிதம்பரக் கல்லூரி மைதான வீதிக்கு வடிகாலமைத்தல், பலநோக்கு கூட்டுறவுச் சங்க வீதி கால்வாய் அமைத்தல், கடற்கரை வீதி கால்வாய் அமைத்தல் 01, கடற்கரை வீதி கால்வாய் அமைத்தல் 02, நேதாஜி சனசமூக நிலையம் திருத்தம், வாணி சனசமூக நிலையம் திருத்தம், சிவபுர வீதிக்கு வடிகாலமைத்தல், கரந்தன் காணி வீதி திருத்தம், வேவில் வீதி கடற்றடுப்பு அனைச்சுவர் அமைத்தல், நாவலடி வீதி திருத்தம், உலகுடையார் பிள்ளையார் வீதி திருத்தம் ஆகிய வேலைகளுக்கான மதிப்பீட்டுத் தொகை, ஒப்பந்த காலம், என்பன வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான கேள்விப்பத்திரம் 03.08.2016 இலிருந்து 16.08.2016 மு.ப 12.00 மணிவரையும் , கேள்விப்பத்திரம் ஏற்றுக்கொள்ளுதல் 16.08.2016 பி.ப 2.00 மணிவரையும், கேள்வி திறக்கும் காலம் 16.08.2016 பி.ப 2.30 மணிக்கும் இடம்பெறவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.